வேலண்டைன்ஸ் டே அதாவது காதலர் தினமானது யாருக்குத் தான் பிடிக்காது. உலகம் முழுவதும் மக்கள் தங்களது மனதிற்கு இஷ்டமானவர்களைக் கொண்டாடி இன்று அவர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் கழிக்கும் நாளாக இருக்க, கூகுள் தனது டூடுலை வெளியிட்டு, காதலர் தினத்திற்கு மேலும் அழகு சேர்த்துள்ளது.
பின்க் (இளஞ்சிவப்பு) நிற பின்னணியில், மழைத்துளிகள் கண்ணாடியில் வழிவது போல வடிவமைக்கப்பட்ட இந்த டூடுலானது அனிமேட் செய்யப்பட்டுள்ளது.
முதலில் ஒரு துளி வழுக்கி கீழே வழிய, அதனைப் பார்த்த மற்றொரு துளி அதனோடு இணைந்து ஒரு இதயத்தை உருவாக்குகிறது. இதனைக் குறித்து கூகுளின் அதிகாரப்பூர்வ பக்கம் கூறியதாவது, "Rain or shine, will you be mine." அதாவது, மழையோ வெயிலோ, துக்கமோ மகிழ்ச்சியோ, என்றும் நீ எனதாய் இருப்பாய்! என பொருள் தருகிறது.
இந்த அழகான டூடுள் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.
மேலும் படிக்க | வாத்தி பட இடைவெளியில் "வாத்தி COMING!"...