இந்தியாவின் ஆக்கிரமிப்பு பகுதிகளை காலி செய்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்... ஐ.நா. பொது சபையில் கண்டனம்!!

ஐ.நா. பொது சபையில் காஷ்மீர் விவகாரங்களை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 78-வது கூட்டத்தொடரின் போது பேசிய பாகிஸ்தானின் பொறுப்பு பிரதமர் அன்வாரூல் ஹக் காக்கர், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அமைதி ஏற்பட காஷ்மீர் விவகாரம் முக்கியம் எனத் தெரிவிதுள்ளார்.

காஷ்மீர் விவகாரங்களை பற்றி ஐ.நா. பொது சபையில் எழுப்பியதற்காக, ஐ.நா. பொது சபையின் இரண்டாவது குழுவுக்கான இந்தியாவின் முதன்மை செயலாளர் பெடல் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவின் ஆக்கிரமிப்பு பகுதிகளை பாகிஸ்தான் காலி செய்து வெளியேற வேண்டும் என்றும் எல்லை கடந்த பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பயங்கரவாதத்திற்கான கட்டமைப்புகளை அந்நாடு உடனடியாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com