இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் இன்று முதல் ஐக்கிய அமீரகம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவலை தொடர்ந்து, உலக நாடுகள் கட்டுப்பாடுகளை அறிவித்து வெளிநாட்டவர்கள் உள்நுழைய தடை விதித்தது. மரபணு மாறிய இந்த வைரஸ் உலக நாடுகளுக்கு பரவியதால் இந்த கட்டுப்பாடு நீடித்தது. இந்தநிலையில், உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற தடுப்பூசியை செலுத்திக்கொண்டோர் மற்றும் குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ஐக்கிய அமீரகம் கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
அதன்படி இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நேபாள் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தும் பட்சத்தில் இன்று முதல் ஐக்கிய அமீரகத்திற்கு பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.