வெடித்து சிதறிய எரிமலை..! 5கி.மீ தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

கருப்பாக காட்சியளிக்கும் சுற்றுவட்டார கிராமம்..!

வெடித்து சிதறிய எரிமலை..! 5கி.மீ தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சென்றடைந்த நிலையில், 5 கிமீ சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்டது. நேற்று எரிமலை வெடித்துச் சிதறி கடும் சீற்றத்துடன் நெருப்புக் குழம்புகள் வெளியேறின. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்ததால்  கருப்பாக காட்சியளிக்கிறது. பெரும்பாலான மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால் எரிமலை வெடிப்பால் பெரிய அளவில் பாதிப்போ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என கூறப்படுகிறது. எரிமலையை  சுற்றி 5 கிமீ சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.