ஆப்கானிஸ்தானில் பிரபல டோலோ சேனலில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது தாலிபன்கள் துப்பாக்கிகளுடன் ஸ்டூடியோவுக்கு நுழைந்து போஸ் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டோலோ சேனலில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது தாலிபன்கள் துப்பாக்கிகளுடன் ஸ்டூடியோவுக்கு வந்ததை கண்டு செய்தி வாசிப்பாளர் அதிர்ச்சி அடைந்த நிலையில், துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய தாலிபான்கள் பயப்படாமல் செய்தி வாசிக்குமாறு அவரிடம் கூறினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை டோலோ நிறுவனம் அப்படியே நேரடி ஒளிபரப்பு செய்தது. மேலும் சர்வதேச ஊடகங்களும் ஒளிபரப்பின.
இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. பல்வேறு தரப்பினரும் தாலிபான்களுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.