ஹிஜாப் அணியாத குர்திஷ் பெண் அடித்துக் கொலை…போராட்டம் வெடித்தது!

மக்சா அமினியின் உடல், செப்டம்பர் 17 அன்று காலை, அடக்கம் செய்வதற்காக அவரது தாயகமான குர்திஸ்தான் மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஹிஜாப் அணியாத குர்திஷ் பெண் அடித்துக் கொலை…போராட்டம் வெடித்தது!

ஹிஜாப் அணியாததால் இளம்பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஈரானில் குர்திஷ் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹிஜாப் விவகாரம்

ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் ஆக்கிரமிப்பு குர்திஸ்தானில் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி மாஷா அமினி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கடுமையாக தாக்கப்பட்ட பெண்

தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இளம்பெண்ணை போலீசார் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரானில் ஹிஜாபை கழற்றி எறிந்து போராட்டம்

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஈரானில் 22 வயதான குர்திஷ் பெண் மக்சா அமினி இறந்ததை அடுத்து, ஈரானில் தொடர்ச்சியான போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆரம்பத்தில் ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள கஸ்ரா மருத்துவமனைக்கு வெளியே கூடினர். அங்கு தாக்குதலுக்கு உள்ளான அமினி சிகிச்சை பெற்று வந்தார். போராட்டக்காரர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மிளகாய்த் தூளைப் பயன்படுத்தியதாகவும், பலர் கைது செய்யப்பட்டதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு

மக்சா அமினியின் உடல், செப்டம்பர் 17 அன்று காலை, அடக்கம் செய்வதற்காக அவரது தாயகமான குர்திஸ்தான் மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

குர்திஷ் மனித உரிமைகள் அமைப்பான ஹெங்காவைச் சேர்ந்த சோமா ரோஸ்டமி கூறுகையில், “பதற்றத்தைத் தடுக்க எந்த சடங்கும் இல்லாமல் இறுதிச் சடங்கு நடத்த அமினி குடும்பத்தை அரச படைகள் கட்டாயப்படுத்தியது. அரச படைகளின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான மக்கள் அமினியின் சொந்த ஊரான சாக்வேஸில் அடக்கம் செய்வதற்காக கூடினர். சிலர் “சர்வாதிகாரி மரணிக்கட்டும்”என அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்" என அவர் கூறினார்.

குர்திஷ் சிவில் சமூக அமைப்புகள் குர்திஸ்தான் மாகாணம் முழுவதும் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஈரானின் சர்வாதிகாரத் தலைவரான அயதுல்லா கமேனியின் சுவரொட்டிகளைக் கிழித்தெறிந்த சக்கேஸில் போராட்டக்காரர்களின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.