இலங்கையில் அரசுக்கு எதிராக வழக்குரைஞர்கள் போராட்டம்!

மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே என்ற கோரிக்கையை முன்வைத்து காலிமுகத்திடலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் அரசுக்கு எதிராக வழக்குரைஞர்கள் போராட்டம்!
Published on
Updated on
1 min read

கொழும்பு காலி முகத்திடலில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு அமைதியற்ற சூழல் நிலவியது.

உரிமைகளை பாதுகாக்கப் போராட்டம்

நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்து 5 பொதுமக்கள் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே என்ற கோரிக்கையை முன்வைத்து காலிமுகத்திடலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்தப் போராட்டம் காரணமாக காலி முகத்திடல் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை இந்தப் போராட்டத்தில் அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டம் நடந்த பகுதியில் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். காலிமுகத்திடல் போராட்டத்தில் போலீஸாருக்கும் சட்டத்தரணிகளின் போராட்டத்தில் கலந்து கொண்ட இளம் ஊடகவியலாளர் சங்கத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் வாக்குவாதம்

நேற்று முன்தினம் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போலீஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்த விதம் மற்றும் அங்கிருந்த சிறார்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு கீழ் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வழக்குரைஞர்கள் சங்கம் அமைதியான ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com