நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை செல்லும் கப்பல் போக்குவரத்து இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று 23 ம் தேதி வரை கப்பல் போக்குவரத்து நிறைவுபெறும் என அறிவித்திருந்த நிலையில் இன்று போதிய டிக்கெட் முன்பதிவு செய்யப்படாததாலும் வானிலை மாற்றத்தாலும், இலங்கைக்கு செல்லாமல் இன்று மாலை கொச்சின் துறைமுகம் செல்கிறது.
இந்நிலையில், ஜனவரி மாதத்தில், மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.