இலங்கையில் தீர்ந்துபோனதா பெட்ரோல்? அமைச்சர்கள் வெளிநாடு சென்றது ஏன்?

இரண்டு மூன்று நாட்களுக்குள் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என நேற்று பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கன்களை பெற நேற்று மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இலங்கையில் தீர்ந்துபோனதா பெட்ரோல்? அமைச்சர்கள் வெளிநாடு சென்றது ஏன்?

பெட்ரோலுக்காக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது வரும் 10ஆம் திகதி வரை பொதுமக்களுக்கு எரிபொருட்களை வழங்குவதில்லை என இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

டோக்கன்கள் ரத்து

இரண்டு மூன்று நாட்களுக்குள் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என நேற்று பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கன்களை பெற நேற்று மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இவ்வாறான நிலையில், எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அமைச்சர்கள்

இதேவேளை, எரிபொருள் கையிருப்பு முழுவதும் குறைந்துள்ளதையடுத்து இலங்கை அமைச்சர்கள் பலர் பணம் செலுத்தி பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

கத்தார் நாட்டிடம் கடன் பெற்றுக்கொள்வது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக எரிசக்தித் துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர கத்தார் சென்றுள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் ரஷ்யாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார், பின்னர் பணம் செலுத்தும் அடிப்படையில் ரஷ்யாவிடமிருந்து பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்த்துள்ளார்.

எப்படியாயினும், இலங்கை கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், இதுவரை வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் சர்வதேச நாடுகளுடனான கடன் ஒப்பந்தங்கள் மிகவும் கடினமானதாக மாறியுள்ளது.

- ஜோஸ்