ரிஷி சுனக்கிற்கு எதிராக கருத்து - நகைச்சுவை நடிகர் பதிலடி...

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிராக மோசமான கருத்துகள் வெளியானதை அடுத்து, நகைச்சுவை நடிகர் பதிலடி கொடுத்துள்ளார்.
ரிஷி சுனக்கிற்கு எதிராக கருத்து - நகைச்சுவை நடிகர் பதிலடி...

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக கருத்து தெரிவித்த நபருக்கு நகைச்சுவை நடிகர் பதிலடி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர் ட்ரெவர் நோவா, தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில், வாணொலி நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவை பகிர்ந்தார்.

அதில், பேசிய அழைப்பாளர், நான் பாகிஸ்தானின் பிரதமராக வருவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா எனவும், இங்கிலாந்து மக்கள் தங்களைப் போன்ற ஒருவரைப் பிரதமராக பார்க்க விரும்புகிறார்கள் எனவும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த நோவா, ஆங்கிலேயர்கள் தங்களைப் போல் யாரும் இல்லாத நாடுகளை ஆள முயற்சிப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா என கிண்டலாக பதில் அளித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com