ஊரடங்கு தளர்வுகளை அள்ளிக்கொடுக்காதிங்க..! WHO எச்சரிக்கை..!!

கொரோனா பரவல் குறைந்து வருவந்தாலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என உலக நாடுகளுக்கு WHO அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்கு தளர்வுகளை அள்ளிக்கொடுக்காதிங்க..! WHO எச்சரிக்கை..!!

கொரோனா பரவல் குறைந்து வருவந்தாலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என உலக நாடுகளுக்கு WHO அறிவுறுத்தியுள்ளது.

உலக முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில், முழு ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதனை தவறாக எண்ணிய பொதுமக்கள் மீண்டும் கூட்டம் கூட ஆரம்பித்துள்ளனர். எனவே இதன் காரணமாக கொரோனா தொற்று மீண்டும் பரவ வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதில் உலக நாடுகள் மிகுந்த கவனத்துடனும், நிதானத்துடனும் செயல்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

பெருந்தொற்று காலம் முடிந்துவிடவில்லை; கொரோனாவின் புதிய அலை சில மாதங்களில் தாக்கக் கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.