பத்திரிகையாளரை கொன்ற உக்ரைன்…திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா!

ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் 29 வயதான டரியா டுகினா, மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் பயணிக்கும் போது தனது காரில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் கடந்த ஆகஸ்ட்-20 அன்று இறந்தார்.

பத்திரிகையாளரை கொன்ற உக்ரைன்…திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா!

ரஷ்யப் படைகளின் இருவேறு தாக்குதல்கள் எட்டு உக்ரேனிய விமானப்படை விமானங்களை அழிக்கப்பட்டது  அல்லது சேதமாக்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர்

ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் 29 வயதான டரியா டுகினா, மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் பயணிக்கும் போது தனது காரில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் கடந்த ஆகஸ்ட்-20 அன்று இறந்தார். இவர் ரஷ்ய அரசியல் சிந்தனையாளர் அலெக்சாண்டர் டுகினுடைய மகள் ஆவார். உக்ரைனின் சிறப்பு படைகள் கார் குண்டுவெடிப்பை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

எட்டு போர் விமானங்கள் அழிப்பு

மத்திய பொல்டாவா பிராந்தியத்தில் உள்ள மிர்கோரோட் நகருக்கு அருகிலுள்ள உக்ரேனிய விமானநிலையத்தில் ரஷ்ய போர் விமானங்கள் துல்லியமாக தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த தாகுதலில் 5 போர் விமானங்கள் அழிக்கப்பட்டது. மூன்று போர் விமானங்கள் சேதமடைந்துள்ளது.

இரண்டாவது துல்லியமான தாக்குதல் உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தில் உள்ள இராணுவ விமான தளத்தைத் தாக்கியது. மூன்று இராணுவ விமானங்களை அழித்தது. கடந்த பிப்ரவரியில் ரஷ்யா இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதில் இருந்து மொத்தம் 273 உக்ரேனிய இராணுவ விமானங்களை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

மேலும் படிக்க: பெண் பத்திரிகையாளரை கொன்ற உக்ரைன் இராணுவம்ரஷ்யா குற்றச்சாட்டு!

உக்ரைன் நகரமான சாப்லினோவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதலை ரஷ்யா உறுதிபடுத்தியது. கிழக்கு நோக்கி உக்ரைன் படைகள் மற்றும் ஆயுதங்களை ஏற்றிச் சென்ற ரயிலில் இஸ்கந்தர் ஏவுகணை ஒன்று வீசப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 10 இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

எதிர் நடவடிக்கையா?

ரஷ்ய பத்திரிகையாளர் டரியா டுகினா கொல்லப்பட்டதற்கு உலகம் முழுவதும் பல்வேறு ஊடகவியலாளர் அமைப்புகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ரஷ்ய பத்திரிகையாளர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த திடீர் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.