
அமெரிக்காவின் சார்லோட்டில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு சீக்கிய மாணவர் படித்து வருகிறார். இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் இருந்து அவர் எந்நேரமும் கிர்பன்(சீக்கியர்கள் வழக்கமாக வைத்திருக்கும் குறு வாள்) வைத்திருப்பதாக போலீசாருக்கு புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பல்கைலைக்கழக வளாகம் சென்ற போலீசார், அவரிடம் கிர்பனை அகற்ற வலியுறுத்திய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டார்.
மாணவர் கைது செய்யப்படும் காணொலி சமூக வலைதளங்களில் . இந்நிலையில், துப்பாக்கி சூடுகளை ஒடுக்க முடியாமல் ஒருவரின் மத நம்பிக்கைகளை உடைப்பது எவ்விதத்தில் நியாயம் என பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.