சொல்லி அடிப்பேனடி...வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி அளித்த தென்கொரியா!!

சொல்லி அடிப்பேனடி...வடகொரியாவுக்கு தகுந்த பதிலடி அளித்த தென்கொரியா!!
Published on: 
Updated on: 
1 min read

தென் கொரியாவின் வான்வெளியில் வடகொரிய ஆளில்லா விமானம் அத்துமீறி நுழைந்ததை அடுத்து தென் கொரியாவும் போர் விமானங்கள் மூலம் பதிலடி கொடுத்தது. 

வடகொரியா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக தென் கொரியா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.  வட கொரிய ட்ரோன்கள் தெற்கின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததை அடுத்து, போர் விமானங்கள் மூலம் பதிலடி கொடுத்ததாக தென் கொரியா அரசு கூறியுள்ளது.  சியோலின் ராணுவ வீரர்கள் பலர் பல வட கொரிய ஆளில்லா வான்வழி வாகனங்கள் எங்கள் ஜியோங்கி மாகாணத்தைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளைத் தாக்கியதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ எல்லைக் கோட்டினைக் கடந்து வட கொரியாவிலிருந்து வந்த ட்ரோனை தென் கொரியா தாக்கியதாக தென் கொரியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த தாக்குதலில் இரண்டு விமானிகள் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக தென் கொரியா போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வட கொரியாவிற்கு தகுந்த பதிலடி அளித்துள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com