இலங்கையில் மீண்டும் பதற்றம்...பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்கள்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் இன்னும் பலர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் மீண்டும் பதற்றம்...பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்கள்!

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க வேண்டும் எனவும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும் போராட்டம் நடைபெற்றது. கொழும்பு கோட்டை தொடர் வண்டி நிலையத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடைபெற்றது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 18 கொழும்பு லிக்டன் சுற்றுவட்டத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுடைய பேரணியின் போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் இன்னும் பலர் கைது செய்யப்பட்டனர்.

 அவ்வாறு கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரையும்  90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டமும் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர்.