பெட்டிகளிலிருந்து தனியாக கழன்று ஓடிய ரயில் எஞ்சின்...!!

பெட்டிகளிலிருந்து தனியாக கழன்று ஓடிய ரயில் எஞ்சின்...!!
Published on
Updated on
1 min read

இலங்கையில் ரயில் எஞ்சின் ஒன்று ரயில் பெட்டிகளில் இருந்து தனியாக கழன்று ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்த சம்பவம் இன்று காலை அரங்கேறியள்ளது.

இலங்கையில் உள்ள களுத்துறை வடக்கு இரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த சமுத்திராதேவி ரயிலின் பெட்டிகளிலிருந்து என்ஜின்  தனியாக கழன்று ஓடியுள்ளது.  ரயில்  சென்று கொண்டிருக்கும் போதே பெட்டிகளிலிருந்து கழன்ற ரயிலின் எஞ்சின்  சுமார் ஒரு கிலோ மீட்டர்  தூரம் வரை சென்ற பின்னர் நின்றதாக கூறப்படுகிறது.

ரயில் பெட்டிகளிலிருந்து பிரிந்த இயந்திரத்தை மீண்டும் எடுத்துச் சென்று பொருத்திய பின்னர், சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக மீண்டும் ரயில் மருதானை ரயில் நிலையம் நோக்கி பயணித்துள்ளது.  இச்சம்பவத்தின் பொது அதிக அளவிலான பயணிகள் இரயிலில் பயணித்துள்ளனர். அதிர்ஷ்ட வசமாக பயணிகள் யாருக்கும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

முன்னதாக 3  நாட்களுக்கு முன்பாக கந்தளாய் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு 17 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிட தக்கது.

தரமற்ற இரயில்வே சேவையால் கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் ரயில்கள் தடம் புரள்வது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. 2020ஆம் ஆண்டு 29 முறையும் 2021ஆம் ஆண்டு 34 முறையும் 2022ஆம் ஆண்டு 45 முறையும் இலங்கையில் ரயில்கள் தடம் புரண்டுள்ளன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com