ஐநா பொதுசபை விவாத கூட்டத்தில் உரை நிகழ்த்த தலிபான்கள் விருப்பம்.!!!

ஐநா பொதுசபை விவாத கூட்டத்தில் ஆப்கானிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி தலிபான்கள் உரை நிகழ்த்த விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா. பொதுசபையின் 76-வது கூட்டம் நேற்று தொடங்கியது. நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளில் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உரைநிகழ்த்த உள்ளனர். அதன்படி நேற்று முதல்நாள் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேரடையாகவும், சீன அதிபர் ஜிஜிங்பிங் காணொலி வாயிலாகவும் உரை நிகழ்த்தினர்.

இந்நிலையில் ஐநா பொதுசபையின் விவாத கூட்டத்தில் ஆப்கானிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி தலிபான்கள் உரைநிகழ்த்த விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com