தற்போது தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக, இன்று நாம் பயன்படுத்த கூடிய வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற பல மெசேஜிங் செயலிகள் வந்துவிட்டன. ஆனால், உலகிலேயே முதன் முதலில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ். எது? என பலருக்கும் தெரியாது. வோடோபோன் நிறுவனம் தான் முதன்முதலில் தமது வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ் வசதியை அறிமுகம் செய்தது.
நெயில் பப்புவோர்த் என்பவர், தமது கணினி வழியாக ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவருக்கு மேர்ரி கிறிஸ்துமஸ் என்ற எஸ்.எம்.எஸ்-யை முதன் முதலில் அனுப்பினார். கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி அன்று அனுப்பப்பட்ட இந்த எஸ்.எம்.எஸ்., பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏல மையத்தில் விற்பனைக்கு வந்தது. அப்போது, 91 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்க்கு எஸ்.எம்.எஸ். விற்பனையானது.