இது தான் ஆரம்பம்!!! இன்னும் என்னன்ன நடக்க போகுதோ?

இளவரசராக இருந்த சார்லஸ் தற்போது அரசராக மகுடம் சூடியுள்ள நிலையில், அவரது ஒரு வீடியோ தற்போது பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
இது தான் ஆரம்பம்!!! இன்னும் என்னன்ன நடக்க போகுதோ?

இணையம் என்பது எப்போதும் எதையாவது நமக்கு கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. அதுவும், உலகளவில் நடக்கும் பல நிகழ்வுகளை நேரில் பார்ப்பது போலவே நமக்கு எடுத்துக் காட்டுவது இணையம் தான். அப்படி, அந்த இணையம் மூலமாக தான் நமக்கு சமீபத்தில், பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறந்தது நமக்கு தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் அரசர் பதவியேற்ற உடன், அவர் செய்த காரியம் ஒன்று இணையத்தை தீபிக்க வைத்துள்ளது.

இங்கிலாந்து அரசராக அந்நாட்டின் நேரம் படி, செப்டம்பர் 10ம் தேதி, அதாவது இன்று, பதவியேற்பு விழாவிம், தனது மேசையில் இருக்கும் அனைத்து பொருட்களையும் நீக்கக் கோரி, தனது வேலையாளிடம் ஆணையிடுவதும், அவர் முகம் சுளிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

இதனால், தனது முதல் தனியுரிமை கவுன்சில் சந்திப்பின் கையொப்பம் நன்றாக செல்லவில்லை என்பது தான் கவனத்தை ஈர்த்தது. அந்த நேரத்தில், தனது வேலையாளிடம் கோபமாக நடந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி, “இது தான் ஆரம்பம்!!! இன்னும் என்னன்ன நடக்க போகுதோ?” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே அரசர் மூன்றாம் சார்லசுக்கு நல்ல செல்வாக்கு தனது நாட்டில் இல்லாத நிலையில், ஏன் இப்படி ஒரு நடவடிக்கை அவர் மீதான அதிர்ப்தியை அதிகரித்திருக்கிறது என்று தான் கூறவேண்டும். அது மட்டுமின்றி, தனது இரண்டாம் மகன் இளாவரசர் ஹேரியை மகாராணியின் மறைவுக்கு, தனது மனைவி மேகன் மார்கலுடன் வந்தால், அனுமதி வழங்கப்படாது எனக் கூறியதும் மக்களிடையே கடும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com