கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
Published on: 
Updated on: 
1 min read

நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால், சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் இரவு அண்ணாசாலை, எழும்பூர், கோடம்பாக்கம், அசோக்நகர், மந்த்வெளி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, என சென்னை நகரின் அனைத்து இடங்களிலும் திடிரென கனமழை பெய்தது. நகர் முழுவதும் கனமழை பெய்து கொண்டிருப்பதால், கோடை வெயிலின் வெப்ப தாக்கத்தில் இருந்த சென்னை மக்களை இரவில்  பெய்த மழை குளிர்வித்துள்ளது.

இந்நிலையில், இடைவிடாது மழை பெய்து கொண்டிருப்பதால், சென்னை மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார். இது போல, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களிலும், பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் (19.06.2023)மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைவிடாது பெய்து வரும் மழையால் ஆட்சியர்கள், பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com