இன்று இரண்டாவது நாளாக எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்!!

இன்று இரண்டாவது நாளாக எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்!!

பெங்களூருவில் நடந்த எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது.  

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் கடந்த மாதம் 23- ம் தேதி பீகாரின் பாட்னாவில் ஒத்த கருத்துடைய எதிர்கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டனர். 

அதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது  ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெங்களூருவில் திட்டமிட்டபடி எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. 

நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியாகாந்தி தலைமையில்  இரவு விருந்துடன் எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

மேலும் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் மதிமுக பொதுச்செயலர் வைகோ உட்பட 26  எதிர்கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம், பிரதமர் வேட்பாளர் தேர்வு, மாநில அளவில் கூட்டணி அமைப்பது  உள்ளிட்டவை தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்த முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அவா்களுக்கு பாிசுகள் வழங்கினாா். அதனை தொடா்ந்து கூட்டம் முடிந்து செய்தியாளா்களை சந்தித்து பேசிய கா்நாடக துணை முதலமைச்சா் டிகே சிவக்குமாா், நாடு எதிர்பார்த்தது போல் கூட்டம் சிறப்பாக நடந்துள்ளது என தொிவித்துள்ளாா். 

இதனையடுத்து இன்று 2-வது நாளாக கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிக்க || 38 கட்சிகள் பங்கேற்கும் ஆளுங்கட்சிக் கூட்டணி ஆலோசனை கூட்டம்!