"கன்னட கட்சிகள் சேர்ந்து போராடுகின்றன; தமிழக கட்சிகள் குடும்ப நலனுக்கு பாடுபடுகின்றன" சீமான்!!

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் கட்சிகளாக இல்லாமல் அவரவர் குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுபடுவதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் பகுதியில், தாயே கடல் தாயே, தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்பொழுது பேசிய அவர், "கர்நாடகாவில் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து அனைத்து கட்சியும் ஒருங்கிணைந்து போராடுகின்றன. ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் கட்சிகளாக இல்லாமல், அவரவர் குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுபடுகின்றனர்" என விமர்சித்துள்ளார்.

மேலும், "கர்நாடகாவில் தமிழக முதலமைச்சரை அவமரியாதை செய்கின்றனர்,  இதை ஒரு திமுக கட்சிக்காரர்கள் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. நான் மட்டும்தான் கண்டனம் தெரிவித்துள்ளேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || "அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகளை வாங்கதால் பழைய பேருந்துகளை இயக்கவேண்டியுள்ளது" அமைச்சர் சிவசங்கர்!!