
பண்ருட்டி அருகே அரசு பேருந்து மீது கல் வீசி கண்ணாடியை உடைத்துவிட்டு, தப்பி ஓடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து பாமகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தொடர்ந்து பல்வேறு இடங்களில் அரசு பேருந்து கண்ணாடியை உடைக்கும் சம்பவமும் நடந்து வருகிறது.
காடாம்புலியூர் முத்தாண்டிகுப்பம் பண்ருட்டி நடுவீரப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பேருந்து கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். கடலூரில் இருந்து, இரவு நேரத்தில் பண்ருட்டி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது கல் வீசி தாக்கியுள்ளனர்.
இதில் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. நல்வாய்ப்பாக பயணிகள் யாரும் எவ்வித காயமும் இன்றி தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பண்ருட்டி போலீசார், கல் வீச்சில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க || விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்... வயலில் கிடைத்த வைரம்!!