வயது வித்தியாசம் பார்க்காமல்.. எல்லை மீறும் "பாலியல் உறவுகள்" - நம்மை நடுங்க வைக்கும் 'சைக்காலஜி'! - #MalaiMurasuExclusive

இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாக நமது மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு என்ன காரணம்?
வயது வித்தியாசம் பார்க்காமல்.. எல்லை மீறும் "பாலியல் உறவுகள்" - நம்மை நடுங்க வைக்கும் 'சைக்காலஜி'! - #MalaiMurasuExclusive
Published on
Updated on
2 min read

சில செய்திகளை கேட்கும் போதே அதிர்ச்சியாக இருக்கும். அதுபோல இரண்டு   குறிப்பிடத்தக்க செய்திகள் தான் குஜராத் பகுதியில் ஒரு பெண் ஆசிரியை தன்னுடன் படித்த மாணவனுடனும், புளோரிடாவில் ஒரு தாய் வளர்ப்பு மகனுடன் பாலியல் உறவில் இருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாக நமது மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு என்ன காரணம்?  ஏன் இப்படி செய்கிறார்கள்? என்றும் இதை பற்றிய உளவியல் ரீதியான கருத்துக்கள் என்ன என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.

குஜராத் சம்பவம்   

குஜராத் சூரத் பகுதியில் கடந்த (ஏப்ரல் 25) நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது. ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றும் 23 வயதுடைய பெண் ஆசிரியர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுவனுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக மாணவரும் ஆசிரியரும் நெருங்கிய உறவில் இருந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ( ஏப்ரல் 25) தேதி மதிய நேரத்தின் போது மாணவர் குடியிருந்த குடியிருப்பில் இருந்து ஆசிரியர் மாணவரை அழைத்து சென்றுள்ளார்.  மாணவரும் கையில் துணிப்பையை எடுத்துக்கொண்டு ஆசிரியருடன் செல்வது குடியிருப்பு  பகுதி கேமராவில் பதிவாகி இருக்கிறது. பின்னர் நான்கு நாட்கள்  கழித்து ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரித்த போது, சிறுவனும் ஆசிரியையும் சுமார்  390 கிலோமீட்டர் பயணம் செய்து வேறு மாநிலத்திற்கு சென்றதும்.  

தற்போது ஆசிரியை 5 மாதம் கர்ப்பமாக இருப்பதும்,  கருவிற்கு சிறுவனே தந்தை எனவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சிறுவனை மீட்ட காவல்துறையினர் ஆசிரியையை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வழிகாட்ட வேண்டிய ஆசிரியரே வழி  மாறி சென்றது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா சம்பவம் 

இதே மாதிரி கடந்த ஆண்டு புளோரிடாவில் அலெக்சிஸ் என்ற ஒரு செவிலியர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். கணவருடைய முதல் மனைவியின் மகன் சார்லஸ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)  அலெக்சிஸ் கணவரை அதாவது சார்லஸின் தந்தையை பார்க்க அலெக்சிஸ் வீட்டிற்கு  வந்துள்ளார்.

அப்போது முதல் இவர்களுக்கு இடையே உறவு ஏற்பட்டு காலப்போக்கில் அது தவறான உறவாக மாறியுள்ளது. பின்னர் இதுகுறித்து சார்லஸின் தந்தைக்கு தெரியவர போலீசில் புகாரளித்துள்ளார். போலீசார் அலெக்சிஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த இரண்டு சம்பவங்களை வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மனநிலை எப்படி இருக்கும். இப்படி செய்ய உளவியல் காரணங்கள் ஏதாவது உள்ளதா என "உளவியல் நிபுணர் T.கௌசல்யாவை" தொடர்புகொண்ட பேசியதில் அவர் கூறிய சில காரணங்களையும் ஆலோசனைகளையும் விரிவாக காண்போம்.   

டோபமைன்

நம்ம உடலோடு உணர்வுகளையும் நம்ம செயல்பாடுகளையும் இயக்குற ஒரு முக்கிய ஹார்மோன் தான் டோபமைன். தொடர்ந்து  பாலியல் சம்பந்தமான வீடியோக்கள்  மற்றும் புகைப்படங்களை பார்க்கும் போது இந்த டோபமைன் அதிகமாக சுரக்கிறது. இப்படி டோபமைன் அதிகமாக சுரக்கும் ஒரு நபருக்கு சாதாரண பாலியல் உறவில் ஏற்படாத ஒரு நிறைவு அசாதாரணமான உறவுகளில் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

எமோஷனல் டிஸ்எபிலிட்டி

அதாவது சிறுவயதில் அவர்களுக்கு நடந்த எதாவது உணர்வு பூர்வமான சீண்டல்களோ ,அவர்கள் நினைத்தது கிடைக்காத வெறுமையோ, அவர்களின் மீது அவர்களுக்கே உள்ள ஒரு குறைவான மனநிலையோ இது போன்ற உறவுகளில் அவர்களை ஈடுபடச்செய்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

பீடோபிலியா 

அதாவது சிலருக்கு இயற்கையாகவே தன்னைவிட வயது குறைவாக இருக்கும் அதாவது 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மீது பாலுணர்வு வருவதை மருத்துவர்கள் “பீடோபிலியா சிண்ட்ரோம்” என்கிறார்கள் இதற்கான முழு காரணங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றாலும். இதுவரையிலும் இது போன்ற உணர்வுகள் ஏற்படுபவர்கள் மூளை  அசாதாரணமான செயல் பாடுடையவைகளாக கண்டறியப்பட்டுள்ளது.

கார்ட்டக்ஸ் வளர்ச்சியின்மை 

நாம் என்ன செய்யவேண்டும் ..எதை  செய்யக்கூடாது, எது நல்லது எது கேட்டது என்ற முடிவுகளை எடுக்கும் முக்கிய பகுதிதான் மூளையில் உள்ள “முன் பக்க புறணி (Prefrontal cortex)” இது முழுமையாக வளர்ச்சியடைய 18 முதல் 20 வயதாகும். குழந்தைகளில் இந்த புறணியின் வளர்ச்சி இருக்காது. எனவே அவர்களால் சரியான முடிவு எடுக்க முடியாத நிலையில் தனக்கு நம்பகமானவர்கள் சொல்வதையே குழந்தைகள் சரி என்று நம்புகிறார்கள். இதுவே குழந்தைகள் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட முக்கிய காரணமாக உள்ளது.

கையாளும் முறைகள் 

இதுபோன்ற பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பவர்கள் தயக்கம் இல்லாமல் மருத்துவர் ஆலோசனை எடுத்துக்கொள்வதும் தியானம், யோகா போன்ற மனதை அமைதி படுத்தும்  செயல்களை மேற்கொள்வதும் ஒரு தீர்வாக இருக்கும்.

குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறவுமுறைகள்  குறித்த ஆலோசனைகளை சொல்வது அவர்களுக்கு பாலியல் கல்வியை கற்பிப்பது அவர்களை கவனிப்பது  போன்ற  செயல்களால் இத்தகய நிகழ்வுகளில் இருந்து அனைவரும் பாதுக்காப்பாக இருக்க முடியும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com