தங்கம் வாங்குவதில் புதிய விதிமுறை! ஏஐ உதவியுடன் தடுக்கப்படும் மோசடிகள்.. எப்போது வெளியாகும் மத்திய அரசு அறிவிப்பு?

gold rate
Published on
Updated on
2 min read

தங்கத்தின் விலை பெரும் வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. ஆனாலும் கூட இந்தியாவில் அதற்கான மவுசு குறையவில்லை. நடுத்தர வர்க்கத்தினர் க்கு இது சிரமமாக உள்ளது. அவர்களின் சேமிப்பில் வாங்குவதென்பது எட்ட கணியக்காகவே இருந்து வருகிறது. தற்போது வருமான வரித்துறை விதிகளின்படி, ₹2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள தங்க நகை வாங்கினால், பான் கார்டு விவரங்களை சமர்ப்பிப்பது கட்டாயம் என தெரிவித்துள்ளது அரசு.

அதையடுத்து 10 லட்சத்திற்கு மேல் தங்கம் வாங்குபவர்கள் மத்திய அரசின் தீவிர கண்காணிப்ப்பிற்குள் வரக்கூடும். நிதி மோசடிகளை தடுக்க இந்த விதிமுறை மிகத் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. வாங்கும் தங்கத்தின் மதிப்பு ரூ.10 லட்சத்தைத் தாண்டும் போது பான் கார்டுடன் ஆதார் கார்டு மற்றும் உங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட ஆவணங்களைக்  கூட கேட்கலாம். மேலும் மத்திய அரசு, தங்கம் மற்றும் அதன் சேவைகளுக்கு இரண்டு விதமான வரிகளை விதிக்கின்றது. தங்கத்தின் விலைக்கு 3% ஜிஎஸ்டி மற்றும் செய்கூலிக்கு 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். நீங்கள் வாங்கும் ரசீதில் தங்கத்தின் எடை, செய்கூலி, சேதாரம் மற்றும் 6 டிஜிட் HUID எண் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். அதையடுத்து இந்தியாவில் தங்கம் வாங்கும் விதிமுறைகளில் விரைவில் முக்கிய மாற்றங்கள் அரசு கொண்டு வர உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்க, மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மாற்றங்கள் நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. நகைக்கடைகள் உள்ளிட்ட துறையினரும்  ஒத்துழைப்பும் தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய திட்டத்தின் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு தங்க நகைக்கும் தனித்துவமான HUID எண்  (Hallmark Unique Identification) கட்டாயமாக்கப்பட உள்ளது. இந்த HUID எண் நகையின் வடிவம், அளவு போன்ற தனிச்சிறப்புகள் அடிப்படையில் வழங்கப்படும். இதன் மூலம் போலி நகைகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க முடியும் என தெரிகிறது. மேலும், ஒரு முறை வழங்கப்பட்ட HUID எண் மீண்டும் மற்றொரு முறை பயன்படுத்த முடியாது என்பது  முக்கியமான விதியாகும். இதன் மூலம் ஒவ்வொரு நகையும் தனி சிறப்புகளை பெற்று  இருக்கும். ஒரு நகை உருக்கப்பட்டு மற்றொரு நகையாக புதுப்பித்தாலும், அதற்கான HUID எண்ணை வேறு நகைக்கு மீண்டும் பயன்படுத்த அனுமதி இருக்காது. இதனால், ஒரே எண் பல நகைகளுக்கு பயன்படுத்தப்படும் மோசடி முறைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்கத்தின் தூய்மையை உறுதி செய்ய முடியும் எனவும் தெரிகிறது. 

இந்த புதிய விதிமுறைகள் கொண்டு வருவதற்கான முக்கிய காரணம், கடந்த காலங்களில் இந்த துறையில் பதியப்பட்ட புகார்கள் தான். சிலர் வாங்கிய நகையின் ஹால்மார்க் எண் இருந்தாலும், அதன் தூய்மை வேறுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒரே HUID எண் பல பொருட்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தடுக்கவே அரசு இந்த கடுமையான விதிகளை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்திற்கு நகைத் துறை நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. எதிர்காலத்தில், ஹால்மார்க் விவரங்கள், படங்கள் மற்றும் எடை போன்ற தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் கொண்டு வரும்போது இந்த விதிமுறைகள் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் போலி ஹால்மார்க் கண்டறியப்படும். 2025-ல் சில மாவட்டங்களில் இந்த திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு, நல்ல பலன் கிடைத்துள்ளது. இதனால், தங்கம் வாங்கும் முறையில் அதிக வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய திட்டம், வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com