அறிவுலக ஊழல்! அகல்விளக்கு பதிப்பகம் டூ எழுத்தாளர் 'திரிஷா விஜய்'.. "பின்னணியில் உள்ள பப்ளிகேஷன் மாஃபியா" - உடைத்து பேசிய பதிப்பாசிரியர்!

இது அத்தனையையும் கடந்து இப்படி ஒன்று நடக்கிறது என்றால் இது அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்த அரசு வந்தாலும் ஊழல் செய்யக் கூடிய அளவு பலமிக்கவர்களால் நடத்தப்படுகிறது.
eriyar Arivulagam Library Scam: Publisher Exposes 'Publishing Mafia' Behind Fake Books as DMK and TVK Clash
அறிவுலக ஊழல்.. ``'அகல்விளக்கு பதிப்பகம்' பின்னணியில் பதிப்பக மாஃபியா" - உடைத்து பேசிய பதிப்பாசிரியர்! யார் அந்த எழுத்தாளர் 'திரிஷா விஜய்'?AI Generated
Published on: 
Updated on: 
3 min read

இன்று காலை எழுத்தாளர் பெருமாள் முருகனின் கட்டுரை அரசியல் பிரளயத்தை உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் புத்தகங்கள் இணையப்பரப்பில் அல்லது பொதுவெளி உரையாடலில் இடம் பெறுவது மிகமிக அரிதான ஒன்று. இப்போது ஒரு ஊழல் குற்றச்சாட்டின் மூலம் அது நடந்தேறியிருக்கிறது.

உண்மையில் இந்த ஊழல் நடைபெற அதுவொரு முக்கியமான காரணம். புத்தக வாசிப்பு என்பது தமிழர்களின் அன்றாட பழக்கங்களில் ஒன்றாக சொல்லிவிட முடியாதபடி மிகச் சிறிய அளவிலேயே நிகழ்கிறது. அப்படி இருக்கையில் பெரியார் அறிவுலகம் போன்ற பெரிய நூலகம் என்றாலும் அதில் உள்ள ஒரு போலி புத்தகத்தை சாமானியர் அடையாளம் காண்பது கடினம்.

வாசகர் ஒருவர் இந்த புத்தகங்களைப் பார்த்திருந்தால், நூலக அதிகாரி ஒரு தேர்ந்த வாசகர் இல்லை என நினைத்து கடந்திருப்பார். ஏனென்றால் எத்தனையோ துறைகள் சார்ந்த எத்தனையோ தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. எந்த வாசகரும் அவர் வாசிக்காத துறை சார்ந்த புத்தகத்தை போலியென எப்படி கண்டுபிடிக்க முடியும்? இந்த தைரியத்தில்தான் இத்தகைய ஊழல்கள் நடக்கின்றன.

பெருமாள் முருகன் ஒரு தமிழ் பேராசிரியர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய வெளியில் முன்னணி எழுத்தாளராக இருக்கிறார். அவரது நாவல்கள் உலகம் முழுவதும் மொழிபெயற்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன. அவரால் 1000 போலி புத்தகங்கள் ஒன்றாக இருப்பதை அடையாளம் காண முடிகிறது. மேலும் இப்போது செயற்கை நுண்ணறிவு கொண்டு எழுதப்படும் இந்த புத்தகங்களின் எழுத்துநடை மற்றும் தவறான தகவல்கள் எளிதாக அடையாளம் காட்டுகின்றன.

தமிழ்நாட்டு நூலங்களில் எந்த புத்தகங்கள் வைக்கப்படுகின்றன என்பது எப்போதும் சர்ச்சைகுறியதாகவே இருந்திருக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள அரசுகள் தங்கள் கொள்கைக்கு எதிரான புத்தகங்களை நூலகங்களில் அடுக்குவதில்லை. ஆனால் நம் ஊரில் பிரச்சனை அதுவல்ல. நூலங்களுக்கு ஒதுக்கப்படும் பணம் யாரிடம் சென்று சேருகிறது என்பதில் தான் இருக்கிறது.

பெரியார் அறிவுலகம்
பெரியார் அறிவுலகம்

ஒரு சிறிய பதிப்பகத்தை நடத்தும் பதிப்பாசிரியர் எத்தனை சிறந்த புத்தகத்தை வெளியிட்டிருந்தாலும் அதனை நூலகத்துக்குள் கொண்டு சேர்ப்பது பெரும்பாடு. அதற்கு அதிகாரம் படைத்த பலரைக் கடக்க வேண்டும்.

இப்படி இருக்கையில் AI எழுதிய புத்தகம், அதிகப்படியான தவறான தகவல்களுடன், யாரென்று தெரியாத எழுத்தாளர் பெயருடன், வெறும் 300 பக்கம் 1400 ரூபாய் விலையில் பெரியார் அறிவுலகத்தை அடைவது இந்த ஊழலின் தீவிரத்தைக் காட்டுகின்றது.

புத்தக கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நாளைக் குறிப்பிட்டு திமுகதான் இந்த ஊழலுக்கு காரணம் என தவெக கூறியுள்ளது. திமுகவோ முத்திரை இடப்பட்ட மாதத்தைக் காட்டி, "போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?" எனக் கேள்வி எழுப்புகிறது.

ஆனால் எந்த கட்சி இந்த ஊழலுக்கு காரணம்?, யார் அந்த எழுத்தாளர் திரிஷா விஜய்? என்பதையெல்லாம் விட இதில் கணக்கில் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

அகல் விளக்கு பதிப்பகம் எந்த ஒரு அரசு அமைவதையோ அல்லது ஆட்சி மாறுவதையோ கணக்கீட்டு செயல்படவில்லை. 2024ம் ஆண்டு முதல் இந்த பதிபகத்தின் புத்தகங்கள் சர்வதேச தர புத்தக எண் (ISBN)-ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆட்சி மாறிய பிறகும் இதன் செயல்பாடுகள் தடைபடவில்லை (பெருமாள் முருகன் சுட்டிக்காட்டும் வரை).

ஊழலின் பின்னணியில் செல்வாக்கு மிக்க பதிப்பக மாஃபியாக்கள்!

கோவைக்கு புது அடையாளமாக எழுப்பப்பட்டிருக்கும் பெரியார் அறிவுலகத்தில், அப்பட்டமாக இப்படி ஒரு மோசடி நடக்கிறது என்றால் அதன் ஆழம் என்ன? அதை எப்படி புரிந்துகொள்வது என அறிய, நூலக செயல்பாடுகளில் உள்ள முறைகேடுகள் குறித்து தொடர்ந்து பேசிவரும் எழுத்தாளரும் 'யாவரும் பதிப்பகம்' பதிப்பாசிரியாருமான ஜீவ கரிகாலனிடம் பேசினோம்.

"10 வருஷமாக நூலக முறைகேடுகள் குறித்து எழுதிவரும் எனக்கு இது அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக இல்லை. பெருமாள் முருகன் என்ற சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளர் எழுதியதாலும் இதில் சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய பெயர்கள் இடம் பெற்றிருப்பதனாலும் கவனம் பெற்றுள்ளது.

ஆனால் அந்த கோணத்தில் மட்டுமே இதைப் பார்க்க கூடாது.

பதிப்பகங்கள் எந்த புத்தகத்தை அனுப்ப வேண்டும் என நூலக ஆணையம் அனுப்பும் XL ஷீட் படிதான் புத்தகங்களை அனுப்ப வேண்டும். அதில் இல்லாத புத்தகத்தை அனுப்பினால் அதற்கான தொகை தரப்படாது. கூடுதல் புத்தகங்கள் அனுப்பினாலும் அதற்கான தொகை தரப்படாது, புத்தகமும் திருப்பி வழங்கப்படாது. வெளிப்பார்வைக்கு இத்தனை கண்டிப்பாக இந்த துறை செயல்பட்டு வருகிறது.

அகல்விளக்கு பதிப்பகத்திலிருந்து பெரியார் அறிவுலகம் மட்டுமல்ல தென்காசி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி நூலகங்களுக்கும் சேர்த்துதான் கொள்முதல் நடைபெற்றுள்ளது.

பெருமாள் முருகன் 1800 புத்தகங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதை நாம் 1800x5 எனப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

யாவரும் பதிப்பகத்தின் (Yaavarum Publishers) நிறுவனர் மற்றும் பதிப்பாசிரியர் எழுத்தாளர் ஜீவ கரிகாலன்
யாவரும் பதிப்பகத்தின் (Yaavarum Publishers) நிறுவனர் மற்றும் பதிப்பாசிரியர் எழுத்தாளர் ஜீவ கரிகாலன்

ஒரு புத்தகத்தை நூலகத்துக்கு தேர்வு செய்வதற்கு பின் பல வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. இது அத்தனையையும் கடந்து இப்படி ஒன்று நடக்கிறது என்றால் இது அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்த அரசு வந்தாலும் ஊழல் செய்யக் கூடிய அளவு பலமிக்கவர்களால் நடத்தப்படுகிறது.

அவர்கள் செல்வாக்கு மிக்க பதிப்பக மாஃபியாக்கள். தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளுக்கு அந்த துறையில் பதவி வாங்கிக் கொடுக்கும் அளவு அதிகாரம் மிக்கவர்களாக இருக்கின்றனர்.

இந்த ஊழலை 365 நாளும் முழுநேர பதிப்பாளராக இல்லாமல் ஒருவரால் செய்ய முடியாது.

அகல்விளக்கு பதிப்பகம் கற்பனை என நினைத்திருப்பீர்கள். ஆனால் அப்படி ஒரு பதிப்பகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவர்களை எந்த புத்தக கண்காட்சியிலும் பார்த்தது கிடையாது. அவர்களது புத்தகங்களை எந்த கடையிலும் பார்த்தது கிடையாது. இதுபோல நூலக ஆணையை ஒட்டி மட்டும் பதிப்பிக்கப்படும் பதிப்பகங்கள் இருக்கின்றன.

இத்தகைய ஊழல்கள் காலம் காலமாக நடைபெற்று வருகின்றன. இன்றைக்கு ஒரு வாசகர் ஒரு நூலகத்துக்குள் சென்று பார்த்தால் 30% நல்ல புத்தகங்கள் இருந்தாலே பெரிய விஷயம்தான். முறைகேடுகள் எல்லாம் நம் கண்முன்னேதான் இருக்கின்றன.

தீர்வு என்ன?

இரண்டு மூன்று தலைமுறையாக சீர்கெட்டிருக்கும் அமைப்பு காரணமாகதான் இப்படியான ஊழல்கள் நடக்கின்றன. இதிலிருந்து ஒரு மாற்றம் வேண்டுமென்றால் அரசும் தொலைநோக்கு உடைய கொள்கை வகுப்பாளர்களும் ஒன்றாக அமர வேண்டும்.

அறிவுச் செயல்பாடுகள் தொடர்பான நூலகத் துறையில் இப்படி ஒரு ஊழல் நடத்திருப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி, ஊராட்சி, பேரூராட்சி என ஒவ்வொரு வகையான நூலகத்துக்கும் நூல் கொள்முதல் நடைபெறுகிறது. இதனை சிங்கிள் விண்டோவாக முறைப்படுத்த வேண்டும். நீண்ட கால இலக்கோடு பயணித்தால்தான் போலி பதிப்பாசிரியர்களை துறையில் இருந்து நீக்கி இதில் மாற்றம் ஏற்படுத்த முடியும்." என்றார்.

eriyar Arivulagam Library Scam: Publisher Exposes 'Publishing Mafia' Behind Fake Books as DMK and TVK Clash
``காலை எழுந்ததும் திரைப்படம்?" சீமான் - தயாரிப்பாளர் சங்கம் விவாதம்.. திமுக சொன்ன காரணம்! மறுபரீசலனை செய்யுமா அரசு?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்