

உலக அதிசயங்களிலேயே மிகவும் பழமையானதும், இன்றும் சிதையாமல் கம்பீரமாக நிற்பதும் எகிப்திய பிரமிடுகள் தான். குறிப்பாக கிசாவின் மகா பிரமிடு (Great Pyramid of Giza) மனித குல வரலாற்றின் மிகப்பெரிய பொறியியல் மர்மமாகக் கருதப்படுகிறது. சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பு, எவ்வித நவீன இயந்திரங்களும், கிரேன் வசதிகளும் இல்லாத ஒரு காலத்தில், தலா 2 டன் முதல் 80 டன் வரை எடையுள்ள 23 லட்சம் கற்களைக் கொண்டு எப்படி இவ்வளவு துல்லியமாக இதைக் கட்டினார்கள் என்பது இன்றும் விடைதெரியாத கேள்வி. இன்று நாம் பயன்படுத்தும் மிக நவீனமான தொழில்நுட்பத்தைக் கொண்டு கூட, இதே போன்ற ஒரு பிரமிடை அவ்வளவு துல்லியமாகக் கட்டுவது சாத்தியமற்றது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தப் பிரமிடுகள் வெறும் கல்லறைகளா அல்லது அதற்குப் பின்னால் ஏதேனும் வானியல் ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றனவா என்பதைப் பற்றி இப்போ விரிவா பார்ப்போம்.
முதலில் பிரமிடுகளின் கட்டுமான நுணுக்கத்தைப் பார்த்தால் நமக்கு மலைப்பு ஏற்படும். பிரமிடு கட்டப்பட்டிருக்கும் கற்கள் ஒன்றுடன் ஒன்று அவ்வளவு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கிடையே ஒரு மெல்லிய காகிதத்தைக் கூட நுழைக்க முடியாது. மேலும், பிரமிடு சரியாக வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளை நோக்கி மிகத் துல்லியமாக அமைந்துள்ளது. காம்பஸ் (Compass) இல்லாத காலத்தில் இந்தத் துல்லியத்தை அவர்கள் எப்படி அடைந்தார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். சில ஆய்வாளர்கள், எகிப்தியர்கள் நட்சத்திரங்களின் நிலையை வைத்து இதைச் செய்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். குறிப்பாக, கிசாவில் உள்ள மூன்று பிரமிடுகளும் வானில் உள்ள 'ஓரியன்' (Orion) நட்சத்திர மண்டலத்தின் மூன்று முக்கிய நட்சத்திரங்களின் நேர்க்கோட்டில் அமைந்திருப்பது, இது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது.
இதனால்தான் பல ஆராய்ச்சியாளர்கள் "பிரமிடுகளைக் கட்டியது மனிதர்கள் அல்ல, வேற்று கிரகவாசிகள் (Aliens)" என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம், பூமியின் சுற்றளவு போன்ற கணித ரகசியங்கள் இந்தப் பிரமிடின் அளவீடுகளில் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தக் காலத்தில் எகிப்தியர்களுக்கு இவ்வளவு விரிவான புவியியல் அறிவு எப்படி வந்தது என்பது மிகப்பெரிய புதிராகவே நீடிக்கிறது. மேலும், பிரமிடுக்குள் இருக்கும் அறைகளில் எவ்விதமான விளக்கு எரிய வைக்கப்பட்டதற்கான கரித் துகள்களோ அல்லது புகைக் கறைகளோ இல்லை. அப்படியானால், இருட்டான அந்தப் பகுதிகளுக்குள் அவர்கள் எப்படி வேலை செய்தார்கள்? அவர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தினார்களா? எகிப்திய சுவரோவியங்களில் விளக்கு போன்ற அமைப்புகள் காணப்படுவது இந்தச் சந்தேகத்தை இன்னும் பலப்படுத்துகிறது.
பிரமிடுகளைப் பற்றிப் பேசும்போது அதன் 'சாபம்' (Curse of the Pharaohs) பற்றியும் பேசாமல் இருக்க முடியாது. மன்னர் துட்டன்காமனின் கல்லறையைத் திறந்தபோது அதில் ஈடுபட்ட பல ஆராய்ச்சியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது உலகையே அதிர வைத்தது. கல்லறையின் வாயிலில் "மன்னரின் அமைதியைக் குலைப்பவர்களுக்கு மரணம் துரத்தும்" என்று எச்சரிக்கை வாசகம் எழுதப்பட்டிருந்தது. இது உண்மையான சாபமா அல்லது பல்லாயிரம் ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த கல்லறையில் உருவான நச்சுயிரி பாக்டீரியாக்களா என்பது இன்னும் விவாதத்திற்குரியது. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் பிரமிடுகளைச் சுற்றி ஒரு அமானுஷ்யமான பிம்பத்தை இன்றும் தக்கவைத்துள்ளன.
பிரமிடுக்குள் இருக்கும் வெப்பநிலை குறித்த ரகசியமும் வியப்பானது. எகிப்தின் பாலைவன வெயில் வெளியே எவ்வளவு கடுமையாக இருந்தாலும், பிரமிடுக்கு உள்ளே எப்போதும் நிலையான 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவுகிறது. இது ஒரு இயற்கையான குளிர்சாதனப் பெட்டி போலச் செயல்படுகிறது. அதேபோல், பிரமிடுக்குள் வைக்கப்படும் உணவுகள் அல்லது பொருட்கள் நீண்ட காலத்திற்குச் சிதையாமல் இருப்பதைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள், பிரமிடின் வடிவம் ஒருவிதமான ஆற்றலை (Pyramid Power) உருவாக்குவதாக நம்புகிறார்கள். இந்த ஆற்றல்தான் மம்மிக்கள் சிதையாமல் இருக்கவும் உதவியாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.