தீபாவளி ஒரு புராணக் கதையா... புதைந்திருக்கும் நிஜமா? 'நரகாசுரன்' வீழ்ந்த இடத்தில் தொல்லியல் அதிசயங்கள்!

தீபாவளி குறித்த கதை வெறும் கற்பனையல்ல அதன் பின்னணியில் ரத்தமும் சதையுமாக ஒரு வரலாற்று உண்மையும், அதற்கான ஆழமான தடயங்களும் இந்தியாவின் அசாமி மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றன
Diwali history
Diwali history
Published on: 
Updated on: 
2 min read

தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது நரகாசுரனை கிருஷ்ண பரமாதமா வதம் செய்து, உலகை. இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வந்ததை நினைவுகூரும் திருநாளாகவே காலம் காலமாக நம்மால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளி குறித்த கதை வெறும் கற்பனையல்ல அதன் பின்னணியில் ரத்தமும் சதையுமாக ஒரு வரலாற்று உண்மையும், அதற்கான ஆழமான தடயங்களும் இந்தியாவின் அசாமி மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வாருங்கள், தீபாவளித்திருநாளில் அந்த விடைதேடும் வரலாற்றுப் பயணத்திற்குள் செல்வோம்!.

பிராக்ஜோதிஷபுரம் எனும் ஒரு விசித்திர சாம்ராஜ்யம் இன்றைய.அசாம் மாநிலத்தின் தலைநகரான கவகாத்தி (Guwahati), அமைந்திருந்தன, "கிழக்கின் ஒளிரும் நகரம்" என்று மகாபாரத காலத்திலும், புராணங்களிலும் வர்ணிக்கப்பட்ட தேசத்தில் பூமி தேவியின் மைந்தனான நரகாசுரன் ஆண்டு வந்தான்.

பூமி தேவியின் வரத்தால் பலம் பெற்ற நராகசூரன். தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தியதோடு, காமாக்யா தேவியின் வழிபாட்டுத் தடைகளுக்கும் காரணமானான். இறுதியாக, பூமி தேவியின் அம்சமான சத்தியபாமாவின் உதவியோடு, கிருஷ்ண பகவான் அவனது அகந்தையை அடக்கி வதந்தீர்த்த இடம் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள இதே கவகாத்தி மண் தான். இவை அனைத்துமே ஏதோ ஒரு ஏட்டுச் சுவதியோடு முடிந்துவிடவில்லை; கவகாத்தியின் ஒவ்வொரு மூலைமுடுக்கும் அந்தப் போரின் எச்சங்களை இன்றும் மௌனமாகப் பேசுகின்றன.

இன்றும் நராகசூரன் கொல்லப்பாட்டதற்கான வரலாற்றுத் தடயங்களாக கவகாத்தி நகரின் தெற்குப் பகுதியில் கம்பீரமாக நரகாசுரன் மலை (Narakasura Parbat):இன்றளவும் காணப்படுகிறது. அங்கு நரகாசூரன் தனது ராஜியத்தின் பாதுகாப்பிற்காகப் பிரம்மாண்டமான கோட்டைகளை அமைத்து ஆட்சி செய்த நிலையில் அதன் அருகில் உள்ள புகழ்பெற்ற காமாக்யா கோயில் வரலாறும் நரகாசுரனின் பெயருடனும் பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரம்மபுத்திரா நதிக்கரையின் அழகில் அமைந்திருக்கும் அஸ்வவ்காந்தா கோயில் (Ashvakranta Temple) .ஒரு வரலாற்றுத் திருப்பத்தின் நிழல் என்றே சொல்லலாம். கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழிக்கத் தன் படைகளுடன் வந்தபோது ,அஸ்வங்கள் என அழைக்கப்படும் அவரது குதிரைகள் இந்த இடத்தில் சோர்வடைந்து நின்றதாக நம்பப்படுகிறது. அதனால் தான் இப்பகுதிக்கு 'அஸ்வவ்காந்தா'என்று பெயர் வந்தது. அந்தப் போரின் இறுதிக் களம் நிகழ்ந்ததற்கான ஆன்மீக அதிர்வுகள் இன்றும் இங்கு நிலவுகின்றன.

நீலாச்சல மலை, திகாலிபுக்கிரி மற்றும் நரகாசுரன் மலைப் பகுதிகளில் தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வுகள் பல உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தன. அதன்படி அகழ்வாராய்ச்சியின் போது. அங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்காலக் கல் சிற்பங்கள், பெருங்கற்காலக் கலாச்சாரத் தடயங்கள் மற்றும் தொன்மையான கல் கட்டமைப்புகள், இந்தப் பகுதி மிகத் தொன்மையான ஒரு ராஜ்யத்தின் கீழ் இயங்கியதை அசைக்க முடியாத சாட்சிகளாக உறுதிப்படுத்துகின்றன.

புராணங்களின் வழியே நமக்குக் கடத்தப்பட்ட தீபாவளிப் பண்டிகை, வெறும் ஆன்மீகக் கொண்டாட்டம் மட்டுமல்ல; அது ஒரு மாபெரும் பேரரசனின் வீழ்ச்சியையும், நீதி நிலை நாட்டப்பட்ட வரலாற்றுச் சம்பவத்தையும் நினைவுகூரும் தருணம். இன்றளவும் அசாம் மாநிலத்தில் உள்ள மக்களும், அந்தப் புராணத் தலங்களைச் சுற்றியுள்ள ஆன்மீகப் பயணிகளும் நரகாசுரனின் அகந்தை அழிக்கப்பட்ட அந்த நாளை ஒரு வரலாற்று நினைவூட்டலாகவே போற்றி வருகின்றனர்.

புராணத்தின் மாயாஜாலச் திரையை விலக்கிப் பார்த்தால், அங்கே தெரிவது நிஜமான நிலம், உண்மையான கோட்டைகள், மற்றும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் காலத்தை வென்று நிற்கும் சரித்திரம்! ஒரு தீபாவளியைக் கொண்டாடும்போது, இந்த வரலாற்று மண்ணின் வாசனையும் நம்மை அறியாமல் நம்முடன் சேர்ந்து ஒளிர்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.