Exclusive: குழந்தைகளைக் குறிவைக்கும் பாலியல் மனநிலை.. எச்சரிக்கும் டாக்டர்! 'பீடோஃபீலியா' பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

மனைவியோடு கொண்ட தம்பத்திய உறவில் திருப்தியடையாமல் இருப்பது, குடும்ப வாழ்கை சரியாக அமையாமல் இருப்பது போன்ற காரணங்களை கூறுவது என்பது உண்மையான கரணங்கள் அல்ல.
Pedophilia explained by psychiatrist - Suba
Pedophilia explained by psychiatrist - Suba
Published on: 
Updated on: 
4 min read

சமீப காலத்தில் பல குழந்தைகள் கடத்தப்படுவதுடன், குழந்தைகளுக்கெதிராக நடக்கும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற பல குற்ற சம்பவங்கள் குழந்தைகளுக்கு எதிராக அதிக எண்ணிக்கையில் நடைபெற்ற வண்ணமே உள்ளது. அந்த வகையில் குழந்தைகளை மட்டுமே குறி வைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்வது என்பது மனரீதியாக பாதிக்கப்பட்ட விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை 'பீடோஃபைல்' என்று கூறுகிறார்கள். இந்த மனநிலை பிறழ்வு என்பது 'பீடோஃபீலியா' என அழைக்கப்படுகிறது.

இந்த 'பீடோஃபைல்கள்' குறித்து மனநல மருத்துவர் சுபாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

psychiatrist Suba
psychiatrist Suba

'பீடோஃபைல்கள்' என்பவர்கள் யார்? இது ஒரு மனநல கோளாறாக பார்க்கப்படுகிறதா?:

'பீடோஃபீலியா' என்பது குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு. குறிப்பாக 13 வயதிற்கு கீழேயிருக்கக்கூடிய குழந்தைகளை குறிவைத்து வரும் பாலியல் ஈர்ப்பினைதான் 'பீடோஃபீலியா' எனக் குறிப்பிடுகிறோம். பீடோஃபைலாக இருக்கும் அனைவரும் பாலியல் குற்றவாளிகளாக இருப்பார்கள் என்று கூறமுடியாது. இவர்கள் நேரடியாக சென்று குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திவர்களா? என்று கேட்டால் கிடையாது. நாம் கடந்து வரும் பலரும் இதுபோன்ற மனநிலையோடு இருப்பார்கள். அது நாம் கடந்து வரும் மனிதர்களில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்கள் கட்டாயம் பாலியல் குற்றவாளியாக அல்லது பாலியல் துன்புறுத்தும் செயலை மற்ற குழந்தைகளிடம் செய்வார்களா? என்று கேட்டல் கிடையாது. அதேபோல் குழந்தைளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் அனைவரும் பீடோஃபைல்களா..? என்று கேட்டால் அதுவும் கிடையாது.

குழந்தைகளை குறிவைக்க காரணம் என்ன?:

இவர்கள் என்ன காரணத்தினால் இவ்வாறு ஆகிறார்கள் என்று கேட்டால் அவர்களுடைய குழந்தைப்பருவத்தில் அவர்கள் சந்தித்த பாதிப்புகள். அந்த குழந்தை பருவ பாதிப்புகளினால் உண்டாகும் தூண்டுதல்தான் இதற்கு காரணம். இதில் மற்ற காரணங்களாக மனைவியோடு கொண்ட தாம்பத்திய உறவில் திருப்தியடையாமல் இருப்பது, குடும்ப வாழ்க்கை சரியாக அமையாமல் இருப்பது போன்ற காரணங்களை கூறுவது என்பது உண்மையான காரணங்கள் அல்ல. குறிப்பாக இது குழந்தைகளிடம் ஏற்பட காரணம், அவர்களது கள்ளம்கபடம் இல்லாத மனம். எளிமையாக கூறவேண்டும் என்றால், எப்படி ஒரு மனிதனுக்கு ஒரு பொருளின் மீது ஆசை வருகிறதோ அது போலதான். குழந்தைகள் மீதும் குழந்தைகள் பாலியல் குற்றவாளிகளுக்கும் ஈர்ப்பு வருகிறது.

அந்த குழந்தைகளின் சிரிப்பு, பல் வரிசை, குழந்தைகளின் மற்ற செயல்பாடுகளினால் ஈர்க்கப்படுவது போன்ற காரணங்களால் குழந்தைகளின் மீது பாலியல் நாட்டம் என்பது வருகிறது. குறிப்பாக கூறவேண்டும் என்றால், குழந்தைகள் எந்தவிதமான எதிர்ப்போ காட்டமாட்டார்கள். அவர்களுக்கு தங்களுக்கு நடந்தது என்ன? என்பது குறித்து புரியும் நிலையில் அவர்கள் இருக்கமாட்டார்கள், பயந்து விடுவார்கள், யாரிடமும் உதவி கேட்கமாட்டார்கள், இது தவறு என்றே அவர்களுக்கு உணரத் தெரியாது. இது பெரிய அளவில் அந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு பிரச்சனையாக அமையாது என்பதால் தைரியமாக குற்றத்தில் ஈடுபடுவதாக மருத்துவர் சுபா தெரிவித்தார்.

'பீடோஃபீலியா' மூளை சார்ந்ததா? அல்லது ஹார்மோன் சார்ந்ததா?:

இது மரபணு சார்ந்ததாகவும் இருக்கலாம், ஹார்மோனல் மாற்றங்கள் என்று குறிப்பிடும்போது, சிறுவயதில் ஏற்பட்ட அழுத்தம், மன அதிர்ச்சி போன்றவற்றால் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது ஒரு பாலியல் தூண்டுதல். இது Paraphilic disorder-ல் (பாலியல் பிறழ்வுக் கோளாறு) ஒரு வகை. இது மூளை அல்லது ஹார்மோன் சார்ந்து இரண்டு வகையிலும் வரலாம்.

எந்த வயதில் 'பீடோஃபீலியா'வால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியலாம்?:

இதை அவர்களின் அசைவின் மூலமோ அல்லது இதற்கென்று ஒரு அறிகுறிகள் இருக்கிறது என்றோ எதுவும் இல்லை. இது அவர்கள் தங்களுக்குள்ளாகவே கற்பனை செய்து கொள்வது. குறிப்பாக இது அனைவருக்குமே இருக்கும், ஆனால் லேசாக (அறிகுறிகள்) இருக்கும். சிலருக்கு அதிகளவில் இருக்கும், குற்றம் புரியும் அளவுக்கு கூட எடுத்து செல்வார்கள். ஆனால், நம்மால் இதனை குறிப்பாக வகைப்படுத்த முடியாது.

'பீடோஃபீலியா'வை கட்டுப்படுத்த முடியுமா?:

கட்டுப்படுத்தவே முடியாது என்பது கிடையாது. இதுமாதிரியான பாலியல் தூண்டல்களுக்கு சில மருந்துகள் உள்ளது. இதன்மூலம் நாம் இந்த மனநல பிறழ்வை கட்டுப்படுத்த முடியும். சில ஆலோசனைகள், CBT (Cognitive Behavioral Therapy) எனப்படும் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை மூலமாகவோ அல்லது தெரபிக்கள் மூலமாகவோ நாம் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களுக்கு கல்வி புகட்ட முடியும். அதனால், இந்த 'பீடோஃபீலியா' நிலையை குணப்படுத்தமுடியும்.

பீடோஃபைல்களை அடையாளப்படுத்த முடியுமா?:

அவர்களது நடத்தையை வைத்து நீங்கள் அவர்களை அடையாளப்படுத்த முடியாது அவர்களை கண்டுபிடிக்கவும் முடியாது. நம்மோடு கலந்துதான் 'பீடோஃபைல்கள்' இருப்பார்கள், ஆனால் அவர்களது சிந்தனையில் என்ன நினைக்கிறார்கள் என்று உங்களால எப்படி கண்டுபிடிக்கமுடியும்?. 'பீடோஃபிலியா' அவர்களின் எண்ணங்கள் மற்றும் கற்பனை அளவுகளில் இருக்கும். அதனால் அவர்கள் நன்கு படித்தவர்களாக கூட இருக்கலாம், நல்ல ஒரு வேலையில் இருப்பார்கள், வேலை செய்யவில்லை என்பது போல் இல்லாமல், நல்ல ஒரு நிலையில்தான் அவர்கள் இருப்பார்கள். பெரும்பாலும் பார்த்தீர்கள் என்றால், அந்த குழந்தைக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள். அந்த குழந்தையின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள், வீட்டிற்கு அடிக்கடி வருபவர்களாக இருப்பார்கள், பள்ளியில் அல்லது டியூசன் மாஸ்டர்களாக இருக்கலாம் இதுபோன்று மிகவும் தெரிந்த நபர்களாக இருப்பார்கள். இது அனைத்தையும் நாம் ஒரு எச்சரிக்கை அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம்.

எச்சரிக்கை அறிகுறிகள் என்ன என்ன?:

நமது வீட்டிற்கு அடிக்கடி வரும் நபர் 'நான் குழந்தையை அழைத்து வருகிறேன்.. நான் குழந்தையை பார்த்துக்கொள்கிறேன்' என்று கூறுவார்கள். இதுபோன்று குழந்தையோடு தொடர்ச்சியாக அதிக நேரம் செலவிட நினைப்பது, அதற்கான வாய்ப்புகளை உருவாக்க நினைப்பது, ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும்போதும் பரிசு பொருள்கள் ஏதேனும் வாங்கி வருவது, அந்த குழந்தைக்கு பிடித்த பொருட்களை வாங்கிக் கொடுப்பது போன்று குழந்தைகளோடு ஒரு நெருக்கமான உறவுகளை கொண்டிருப்பது இவற்றை நாம் ஒரு அறிகுறியாக எடுத்துக்கொண்டு அவர்களிடம் சிறிது எச்சரிக்கையுடன் இருக்கலாம். மற்றபடி 'பீடோஃபைல்களை' கண்டுபிடிப்பது, அவர்களை அடையாளம் காண்பது போன்றது என்று எதுவும் இல்லை.

'பீடோஃபைல்'களுக்கும் மற்ற பாலியல் குற்றவாளிகளுக்கு ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கிறதா?:

மற்ற பாலியல் குற்றவாளிகள் என்பவர்கள் ஏதேனும் ஒரு போதைப்பொருளையோ அல்லது மதுவையோ எடுத்திருப்பார்கள். அவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடும்போது பெரிதாக வயதினை குறிப்பிட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபடமாட்டார்கள். எந்த வயதினரிடமும் அவர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவார்கள். பாலியல் வன்கொடுமையை செய்ய நினைத்துவிட்டால் அதன் தூண்டுதலில் பெயரில் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து குற்ற செயலில் ஈடுபடுவார்கள்.

'பீடோஃபிலீக்' என்பவர்கள் குழந்தைகளை குறிவைத்துதான் பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுவார்கள். 13 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை மட்டுமே குறிவைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவார்கள். இந்த வயதினை தாண்டி உள்ள குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடுபவர்கள் 'பீடோஃபைல்' என்ற வகைக்குள் வரமாட்டார்கள்.

இதிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன வழி:

இந்த விவகாரத்தை ஒவ்வொருவரும் சமூகம் சார்ந்த பிரச்சனையாக பார்க்கவேண்டும். குறிப்பாக பாலியல் வன்கொடுமையால் ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது என்றால் அந்த குழந்தையால் சமுதாயத்திற்கு கிடைக்கவேண்டிய செயல்பாடுகள் என்பது குறைகிறது. எதிர்கால ரீதியாக அவர்கள் என்னவாக விருப்புகிறார்கள்?, சமூதாயத்தை என்னவாக மற்ற விரும்புகிறார்கள்? என்று எல்லாவிதத்திலும் இது பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால், இந்த விவகாரத்தை ஒரு சமுதாய ரீதியான பொறுப்பாக எடுத்து மக்கள் அணுகவேண்டும்.

தனக்கு பாலியல் ரீதியாக ஒரு பாதிப்பு ஏற்படுவதாக அந்த குழந்தை கூறியது என்றால், முதலில் அந்த குழந்தை கூறுவதை நம்பவேண்டும், நம்மால் முடிந்த ஆதரவினை அளிக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் குழந்தைகள் கூறுவதை நிராகரிக்காமல் குழந்தை கூற வருவது என்ன? என்பது குறித்து அறியவேண்டும். அனைவரது பொறுப்பாக இந்த விவகாரம் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, சமூதாய ரீதியாகவோ, ஒரு அமைப்பாகவோ, பள்ளி நிர்வாகமோ, பெற்றோராகவோ இதில் அதிக பொறுப்புணர்வோடு, பொறுப்புணர்ந்து செயல்படவேண்டும் என்று மனநல மருத்துவர் சுபா 'பீடோஃபைல்கள்' குறித்து மிகத்தெளிவான விளக்கத்தினை அளித்தார்.

பெற்றோர்கள் குழந்தைகள் தங்களிடம் கூறுவது என்ன? அவர்கள் நடத்தையில் ஏதேனும் மற்றம் ஏற்படுகிறதா? என்பது kகுறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் அதனை கவனத்தில் கொண்டு குழந்தைகளிடம் அது குறித்து விசாரிக்கவேண்டும். இதில் பெற்றோர்கள் மட்டுமின்றி பள்ளி நிர்வாகமும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். குழந்தைகள் என்பவர்கள் சமுதாயத்தின் ஒரு ஆழமான வேர். அவர்கள்தான் இந்த சமூகத்தின் எதிர்காலம். ஒளிமயமான எதிர்காலத்தினை இந்த சமூகம் காண, குழந்தைகளின் 'குழந்தை பருவத்தை' அவர்களுக்கு பாதுகாப்பானதாக அமைத்து கொடுப்பது என்பது நாம் ஒவ்வொருவரின் கடமை. அந்த கடமையை உணர்ந்து நாம் அனைவரும் செயல்படுவோம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.