சித்தர்கள் என்பவர்கள் வெறும் துறவிகள் மட்டுமல்ல, அவர்கள் அறிவியல், மருத்துவம், ஜோதிடம் மற்றும் தத்துவ ஞானத்தில் உச்சம் தொட்ட ஞானிகள். 'சித்தி' அடைந்தவர்கள் என்பதால் அவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். குறிப்பாகத் தமிழகத்தில் 18 சித்தர்கள் முதன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அகஸ்தியர், திருமூலர், போகர், கர்மமுனி போன்ற சித்தர்கள் செய்த அற்புதங்கள் இன்றும் நம்மை வியக்க வைக்கின்றன. சித்தர்கள் மரணத்தை வென்றவர்கள் என்று சொல்லப்படுகிறது. காயகற்பம் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தி அவர்கள் உடலை நெடுங்காலம் அழியாமல் வைத்திருந்தனர். அதையும் தாண்டி, அவர்கள் தனது உடலை விட்டு மற்றொரு உடலில் புகும் 'கூடு விட்டு கூடு பாயும்' வித்தையையும் அறிந்திருந்தனர்.
சித்தர்கள் இன்றும் பழனி மலை, சதுரகிரி மலை மற்றும் கொல்லி மலை போன்ற அடர்ந்த வனப்பகுதிகளில் சூட்சும வடிவில் (Astral Form) வாழ்ந்து வருவதாகப் பக்தர்கள் நம்புகிறார்கள். இன்றும் பலருக்குத் தியானத்தின் போதோ அல்லது மலைப் பயணங்களின் போதோ சித்தர்களின் தரிசனம் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் எப்போதுமே தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். ஒரு பிச்சைக்காரர் போலவோ அல்லது ஒரு பித்தன் போலவோ சமூகத்தில் உலவி வருவார்கள். சித்தர்கள் கண்டறிந்த மருத்துவ முறைகள்தான் இன்று 'சித்த மருத்துவம்' என்று அழைக்கப்படுகிறது. தீராத நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் அவர்களின் மருந்துகளுக்கு உண்டு.
பழனி மலை முருகனின் சிலையைப் போகர் என்ற சித்தர் 'நவபாஷாணம்' என்ற ஒன்பது வகையான விஷப் பொருட்களைக் கலந்து செய்தார். அந்தச் சிலையின் மீது பட்டு வரும் பால் மற்றும் தீர்த்தம் ஒரு சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சித்தர்கள் இயற்கையை நேசிப்பவர்கள், அவர்கள் அட்டமா சித்திகள் எனப்படும் எட்டு வகையான அரிய சக்திகளைப் பெற்றிருந்தனர். காற்றில் பறப்பது, தண்ணீரில் நடப்பது, பெரிய உருவம் எடுப்பது போன்றவை அவர்களுக்கு எளிதான காரியங்கள். சித்தர்களின் பாடல்கள் அனைத்தும் ஆழ்ந்த தத்துவங்களைக் கொண்டவை. அவர்களைத் தேடிச் செல்பவர்களுக்கு அவர்கள் கிடைப்பதில்லை, ஆனால் உண்மையான பக்தியுடன் இருப்பவர்களுக்கு அவர்கள் தாமாகவே வழிகாட்டுவார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.