

ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விழாவின் போது தான் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து, ஒருவரை சேவர் கோடியாகவும், மற்றொருவரை மயிலாகவும் மாற்றி காத்து ரட்சித்தார். சூரனை வதம் செய்து, தேவாதி தேவர்களை காத்து ரட்சித்த திருநாள் தான் மகா கந்த சஷ்டி விழாவாக நாம் கொண்டாடுகிறோம்.
ஒவ்வொரு மாதத்தில் வரும் சஷ்டி அன்று பக்தர்கள் விரதம் இருப்பார்கள் வேண்டிய வரங்களை பெறுவார்கள். ஆனால் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி விரதம் அனைத்து மாதத்தில் இருந்த சஷ்டி விரதத்திற்கு சமம் என்று சொல்லப்படுகிறது.
ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி சஷ்டி வரை சிலர் விரதம் இருப்பார்கள்... சூரசம்ஹாரம் முடிந்த பின்பாக மறுநாள் திருக்கல்யாணத்தை பார்த்துவிட்டு சிலர் விரதத்தை முடிப்பார்கள் அது அவரவர் பக்தியை பொறுத்தது... இன்னும் சிலர் 48 நாட்களுக்கு அதாவது சூரசம்காரம் நடைபெறும் தினத்திற்கு 48 நாட்களுக்கு முன்பாக விரதத்தை ஆரம்பித்து கடுமையான முறையில் விரதம் இருப்பார்கள்.
2025 கந்த சஷ்டி விரத முறைகள்:
2025 அக்டோபர் 22ஆம் தேதி கந்த சஷ்டி விரதம் துவங்க இருக்கிறது. வரும் அக்டோபர் 27ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. முருகனுக்கு 48 நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருக்க நினைப்பவர்கள் செப்டம்பர் 10ஆம் தேதி புதன்கிழமை விரதத்தை துவங்கி இருப்பார்கள். விரதத்தை துவங்கியவர்கள் மாலை அணிந்தும் விரதம் இருக்கலாம். அணியாமலும் விரதம் இருக்கலாம் அது அவரவர் விருப்பத்திற்கு ஏற்றது.
விரதம் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்..?
காலையில் எழுந்து வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்து விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். முடிந்தவர்கள் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வரலாம்.
ஒருவேளை உங்களால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும், மனதார முருகனை நோக்கி உங்கள் வேண்டுதலை வையுங்கள். அதேபோல உங்களுடைய கோரிக்கைகளையும், வேண்டுதல்களையும் ஒரு பேப்பரில் எழுதி அதை முருகப்பெருமான் பாதத்தில் வைத்து விரதத்தை ஆரம்பிக்கலாம். உங்களிடம், “நல்லெண்ணெய்” இருந்தாலும் சரி “நெய்” இருந்தாலும் சரி...காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பான பலனை கொண்டு வரும். கடவுளுக்கு நெய்வேத்தியமாக பால், பழம், கற்கண்டு அல்லது உங்களால் எது முடிந்ததோ அதை வைத்து வழிபடலாம்.
" ஓம் சரவணபவ" என்ற பிரபஞ்ச மந்திரம் :-
கந்த சஷ்டி கவசம் படிப்பவருக்கு ‘இல்லை துன்பம்’ என்று கூறுவது உண்டு. அதேபோல தான் ஓம் சரவணபவ என்ற பிரபஞ்ச மந்திரமும்…108 முறை இந்த மந்திரத்தை விடாமல் ஜெபிப்பவருக்கு முன்ஜென்ம சாபம் நீங்கி விமோசனம் கிடைக்கும் என்பது உண்மை. நீங்கள் விரதம் இருக்கும் நாளில் உங்களால் 108 முறை காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் கூற முடியும் என்றாலும் மிகச் சிறப்பு தான்.
பாருங்கள் தோழர்களே ஜாதக ரீதியாக ஒருவருக்கு செவ்வாய் பலமிழந்துவிட்டால் என்ன செய்வது. ரத்தத்தில் சிக்கல்களை கொடுப்பார், எலும்பில் சில பிரச்சினைகளை கொடுப்பார், இடம், வீடு வாங்கினால் அதில் பிரச்சனைகளை கொண்டு வருவார். சகோதரர்களிடம் ஒற்றுமை இல்லாமல் போகும். உடம்பில் வலிமை இல்லாமல் அவதிப்படுவர். இப்படி ஜாதக ரீதியாகவே செவ்வாய் பலம் இழந்து இருந்தாலும் ஏதோ ஒரு கர்மாவினால் அவருடைய கடைக்கண் பார்வை உங்கள் மீது பட்டு நீங்கள் முருகருக்காக விரதம் இருந்து 108 முறை சரவணபவ என்ற மந்திரத்தை உச்சரித்து சிறப்பாக விரதத்தை முடித்து அவர் பாதத்தில் உங்கள் கோரிக்கைகளை வைக்கும் போது செவ்வாயால் ஏற்பட்ட அனைத்து தீங்கையும் அவர் காத்து ரட்சிப்பார். கஷ்டங்களில் இருந்து உங்களை விடுவிப்பார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள், வங்கியில் சேமிப்பு வைக்கும் அளவிற்கு, உங்களின் வாழ்க்கை தரம் உயரும்.
108 முறை மந்திரத்தை தூபம் காட்டி ஜெபித்தாலும் சரி… ஒரு பேப்பரில் எழுதி மனதார வேண்டினாலும் சரி, இரண்டுமே முருகப்பெருமானுக்கு சமர்ப்பிக்கப்படும்... மேலும் திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், வேல்மாறல் போன்றவை படிக்கலாம் அல்லது கேட்கலாம்.
சஷ்டி விரதமும் - கோடீஸ்வர யோகமும்:
நண்பர்களே இன்றைக்கு வியாபார உலகில் இருக்கும் பல ஜாம்பவான்கள் முருகப்பெருமானின் தீவிர பக்தர்கள் என்பது நமக்கு தெரியும். நான் பெயரை குறிப்பிட விரும்பவில்லை இருந்தாலும் சென்னையின் முக்கிய வணிக வீதியில் இருக்கும் பல ஆடம்பரக் கடைகள் முருகனின் பெயர் கொண்டவையாக இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கை சாட்சியங்கள் பற்றி நாம் எடுத்து பார்த்தோம் என்றால் முருகப்பெருமானுக்கு சஷ்டியில் விரதம் இருந்து எங்களுடைய வியாபாரம் பெருகியது, நாங்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தோம் என்று அவர்கள் சொல்லியதை கேட்டிருப்போம்.. அவை இணையத்திலும் உள்ளது. நிம்மதியான வாழ்க்கை உங்களுக்கு இருக்கிறது, ஆனால் பொருளாதார ரீதியாக கஷ்டங்கள் உள்ளது என்று நினைக்கிறீர்களா ? 2025 ஐப்பசியில் வரக்கூடிய சஷ்டி விரதத்தை கடுமையாக கடைப்பிடியுங்கள். வீட்டில் இருக்கக் கூடிய சங்கடங்களை முருகன் நிச்சயம் தீர்ப்பார்.
“ஓம் சரவணபவ” - நன்றி வணக்கம்!!!
- ஜோதிடர் ஷாம்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.