தட்டினால் இசை ஒலிக்கும் ராமர் சிலை! வேலைவாய்ப்பு வரம் தருவதாக நம்பப்படும் 3,000 ஆண்டுகள் பழமையான அதிசயக் கோவில்!

தட்டினால் இசை ஒலிக்கும் ராமர் சிலை அமைந்துள்ள அற்புத திருத்தலம், வேலைவாய்ப்பினை வழங்கும் திருக்கோயில்
தட்டினால் இசை ஒலிக்கும் ராமர் சிலை! வேலைவாய்ப்பு வரம் தருவதாக நம்பப்படும் 3,000 ஆண்டுகள் பழமையான அதிசயக் கோவில்!
Published on: 
Updated on: 
1 min read

திருப்பதி கோவிலுக்கும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்னாள் ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதுமான ஆலயம் கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில், ஆதிதிருவரங்க அரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாதர் கோவிலாக விற்றீருக்கிறது

சோமுகன் என்னும் அசுரன் பிரம்மனிடம் இருந்த வேதங்களைக் கவர்ந்து கடலுக்குள் மறைத்துவிட, உலகைக் காக்கத் திருவுள்ளம் கொண்ட மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்துச் சென்று வேதங்களை மீட்டார். அப்படி மீட்கப்பட்ட வேதங்களை மீண்டும் பிரம்ம தேவனுக்குப் போதிக்கும் உன்னதத் தத்துவத்தின் வெளிப்பாடே இத்தலத்தின் மூலவரான அரங்கநாதர் ஆவார்

ஐந்து தலைகளை விரித்த ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது, சயன கோலத்தில் வீற்றிருக்கிறார் பரந்தாமன். அவரது திருவுருவத்தின் பெருமையோ சொல்லில் அடங்காது

ஸ்ரீதேவியின் மடியில் திருத்தலையும், பூமாதேவியின் மடியில் திருவடிகளையும் தாங்கியவாறு, பிரம்மாண்டத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்ன் பரந்தாமன்.

தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் இருபத்தொன்பது அடிகளில் நவபாஷாணங்களால் வடிக்கப்பட்ட அற்புதமான திருமேனி வேறு எங்கும் காண இயலாது. இதன் கம்பீரமும் தெய்வீக ஆற்றலும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. பாஷாணத்தின் தன்மையால் மூலவருக்குத் திருமஞ்சனத்திற்குப் பதிலாகத் தைலக்காப்பு அலங்காரம் மட்டுமே செய்யப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

சோழர்களால் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அடிக்கல் நாட்டப்பட்டு, பின்னாளில் விஜயநகரப் பேரரசுகளால் நயமிக்கக் கலைச் சிற்பங்களுடன் விஸ்தரிக்கப்பட்ட ஆலயம் இது. இக்கோவிலின் மூலவர்கள் மட்டுமல்லாமல், அரவணைக்கும் அரங்கநாயகி தாயார், ஆழ்வார்கள், ஆஞ்சநேயர் சன்னதிகளும் நம் கண்களுக்கு விருந்தாகின்றன.

இங்குள்ள திருமேனிகளுள் உச்சக்கட்ட வியப்பு தருவது, தட்டினால் இசை ஒலிக்கும் விசேஷமான ராமர் சிலை ஆகும். கல்லைச் செதுக்கி இசையை வரவழைத்த அந்தச் சிற்பக் கலைஞர்களின் கைவண்ணம் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

பிரம்மனுக்கு இத்தளத்தில் பெருமாள்வேதங்களை உபதேசிக்கும் காட்சியைக் கண்டால் வேலையில்லாதவர்களுக்கு தகுந்த வேலை கிடைப்பதாக என நம்பப்படுகிறது.

இத் திருக்கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினால் திருமண யோகமும் குழந்தை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரமும் கிடைப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர் இதனால் ஆண்டுதோறும் முகூர்த்த காலங்களில் பிரார்த்தனைகள் நிறைவேறி பல திருமணங்கள் இங்கே நடந்தேறுகிறது

காலம் கடந்தும் தன் கம்பீரத்தை இழக்காமல், ஆன்மீகமும் கலையும் சரித்திரமும் கைகோர்த்து நிற்கும் இந்த ஆதிதிருவரங்கனை வணங்கித் தொழுதால், வாழ்க்கையில் குறைகள் நீங்கி மங்கலங்களும் மன அமைதியும் பெருகும் என்பது திண்ணம்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com