ஆயிரம் ஆண்டு பழமையான ஆலமரம்… பக்தர்களின் எதிர்காலத்தை உணர்த்தும் அதிசயம்! சித்தர் கோவில் சொல்லும் ரகசியம்

வருங்காலத்தை கணித்துக் கூறும் மர்மங்கள் நிறைந்த சித்தர் கோவில் ஆலமரம்
ஆயிரம் ஆண்டு பழமையான ஆலமரம்… பக்தர்களின் எதிர்காலத்தை உணர்த்தும் அதிசயம்! சித்தர் கோவில் சொல்லும் ரகசியம்
AI GENERATED IMAGE
Published on: 
Updated on: 
2 min read

நாம் நினைத்தது நடக்குமா? நடக்காதா என்று சொல்லக்கூடிய ஆயிரம் வருட பழமையான ஆலமரத்தை பற்றியும் அதில் அருள்பாலிக்கும் சித்தர் கோவில் குறித்தும் அறிவோம்

நீளமான விழுதுகளை பரப்பி பறந்து விரிந்திருக்கும் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, பக்தர்கள் தங்களின் இரு கைகளையும் அங்கிருக்கும் சித்தர் சமாதியின் முன் விரித்து வைக்கும் போது... நம் கைகள் தானாக ஒன்று சேர்கிறது!. அப்படி சேரும்போது நாம் நினைத்த காரியம் நிறைவேறுமாம்!.

இந்த அதிசயம் நிகழ்வு இன்றளவும் நடக்கும் திருக்கோயில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் வழியில் செல்வபுரம் எனும் கிராமத்தில் அருள்மிகு தன்னாசி அப்பர் திருக்கோயில் என்ற பெயரில் அமைந்துள்ளது

இக்கோவிலில் 18 சித்தர்களின் ஒருவரான புண்ணாக்கீசர் தியானநிலையில் அறுவமாய் இருந்து பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறார்

அமைதியான சூழல் நிறைந்த திருக்கோவிலுக்குள் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி உலவுவது போல் உணர்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கோவிலில் படர்ந்து விரிந்திருக்கும் ஆலமரத்தின் கீழ் அமைந்துள்ள ஜீவ சமாதியிலிருந்து பல சக்திகள் வெளிப்படுவதாகவும் அதுவே நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்ப்பதாகவும் பலன் அடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்

மண்ணுலகில் பிறந்து மகேஷனை வழிபட்டு முக்தி அடைந்த சித்தர்களில் ஒருவர் தான் புண்ணாக்கீசர்.

சித்தர்களுக்கெல்லாம் சித்தராக விளங்கிய இவரது நாக்கு, இரண்டாக பிளவு பட்டு பின்னோக்கி ஒரு நாக்கு காணப்பட்டதால் அவர் புண்ணாக்கீசர் என்று அழைக்கப்பட்டார்

பல வருடங்களுக்கு முன்னாள் ஆள் அரவமற்ற இக்கிராம மலைப்பகுதியில், ஒரு ஆலமரத்தின் அடியில் புண்ணாக்கீசர் சித்தர் தவம் புரிந்துள்ளார்.அப்போது தன்னை நாடி வரும் பக்தர்களின் நோய்களை நீக்கி, அருள்பாலித்து வந்துள்ளார். ஒரு சமயம் அச்சித்தர் மலைப்பகுதியில் இருந்த குகைக்குள் ஜீவசமாதி அடைந்தாதாக கூறப்படுகிறது. அதன் பின் அவரை வணங்கி வழிபட்ட பக்தர்கள், ஒரு ஆலமரத்தின் அடியில் அவரது சிலையை வைத்து வழிபட ஆரம்பித்தனர்.

இதனைத்தொடர்ந்து பலரின் வேண்டுதல்கள் நிறைவேற, சித்தரின் மகிமைகளை அறிந்த பக்தர்கள் அந்த ஜீவசமாதி அருகே ஒரு பெரும் கோயிலை எழுப்பி சிறப்பித்துள்ளனர்.

அருள்மிகு தன்னாசி அப்பர் திருக்கோயில் கோவில் உள்ளே அகஸ்தியர், திருமழிசை சிவவாக்கிய சித்தர், அழகண்ணர் சித்தர், கோரக்கர் சித்தர், சுந்தரானந்தர் சித்தர், புலிப்பாணி சித்தர், உள்ளிட்ட அனைத்து சித்தர்களுக்கும் காட்சியளிப்பதோடு அங்கு தியான மண்டபங்களும் உருவாக்கப்பட்டுள்ளது

எடுத்த காரியம் நிறைவேறுமா?, குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் தீருமா? நோய்களிலிருந்து நாம் விடுபடுவோமா? என்ற பல குழப்பங்களோடு தெளிவற்ற முறையில் வாழும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வரும்போது ஒரு தீர்வை கண்டிப்பாக எட்டுகின்றனர்

தன்னாசி ஈசரின் அருளை பெருவதற்காக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆலமரத்தின் அடியில் அமைந்துள்ள சித்தரின் சிலைக்கு முன் நம்பிக்கையுடன் தியானிக்கின்றனர்.

அப்போது பக்தர்கள் தங்களது இரு கைகளையும் இடைவெளிவிட்டு தரையில் ஊன்றி, கண்களை மூடி வேண்டுதல் நிறைவேற வேண்டுகின்றனர்

அப்போதுதான் அந்த அதிசய நிகழ்வு நடைபெறுகிறது. தள்ளிவைத்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் கைகள் தானாகவே ஒரு சேர இணைகின்றன. அப்படி இணைந்தால் அவர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது நிச்சயமாம்!

சித்தரின் இந்த அற்புத செயல் இன்றளவும் இக்கோயிலில் நடக்கின்ற நிலையில் அதனை காணவும், தங்கள் குழப்பங்கள் தீரவும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

தெய்வங்கள் சங்கமிக்கும் இக்கோவிலின் உள்ளே சித்தர்கள் வணங்கி போற்றுகின்

விநாயகர் சன்னதி, மாரியம்மன் சன்னதி, நவக்கிரக சன்னதி என தனித்தனியாக இருந்து வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த தெய்வீகம் நிறைந்த திருதலத்தில் ஆலமர விழுதுகளோடு கராச்சி மரமும் பின்னிப்பிணைந்து காட்சியளிக்க சிவலிங்கமும் நந்தியும் ஆலமரத்தின் அடியில் அழகாய் வீற்றிருந்து அருள் மழை பொழிகின்றது. நாளுக்கு நாள் சித்தரின் அருள் கோவிலில் பிராகசிக்க பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகாரித்து வருவதாக செல்வபுரம் மக்கள் தெரிவிக்கின்றனர்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com