
மேஷ ராசி:
அன்பான மேஷ ராசி வாசகர்களே குரு அக்டோபர் மாதம் 18ஆம் தேதியிலிருந்து டிசம்பர் மாதம் முதல் வாரம் வரை அதிசாரமாக அதாவது முன்னோக்கி மிக வேகமாக நடந்து மிதுன ராசியிலிருந்து தற்போது கடக ராசிக்கு வர இருக்கிறார் குரு... இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்... மேஷ ராசியின் பொருத்தவரை குருபகவான் நான்காம் வீட்டின் உச்சம் பெறுவதால் எடுத்து வைத்திருக்கின்ற முயற்சியில் வெற்றி கிடைக்கும்.... நீண்ட நாட்களாக வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு எல்லாம் தற்பொழுது இந்த காலகட்டத்தில் ஜாக்பாட் தான்... ஜிஎஸ்டி குறைவால் கார்களின் விலையும் குறைந்து இருக்கிறது மேஷ ராசி அக்டோபர் 18 ஆம் தேதிக்கு பிறகு கார் வாகனம் இருசக்கர வாகனம் போன்றவை வாங்க முயற்சித்தால் வெற்றி கிடைக்கும்....
நிலம் ஏதேனும் உங்களுக்கு பத்திரப்பதிவு ஆகாமல் இருந்தால் தற்போது உங்களுக்கு ஒரு நல்ல காலம்... வீடு மாற வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும் வேறு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இது ஒரு ஏற்ற காலம்... நோய் தொல்லையிலிருந்து உங்களுக்கு விடுதலையாக வாய்ப்புள்ளது... குறிப்பாக நீண்ட நாட்களாக கொழுப்பு கட்டிகளால் பிரச்சனைகளை அனுபவித்து வந்தவர்கள் கூட மருத்துவ மூலம் ஆரோக்கியத்தை அடைய வேண்டும்... புதிய வேலை வாய்ப்புகளுக்கான காலமாகவும் இது இருக்கிறது... புதிய பதவிகள் பொறுப்புகள் உங்களை வந்து அலங்கரிக்கும்.... நீண்ட தூர பிராயணங்களை மேற்கொள்வதற்கான காலமாகவும் இருப்பதால் சுப காரியங்கள் அதிகமாக இருக்கும்.... ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள் அருள் புண்ணிய சேத்திரங்களுக்கு சென்று வர வாய்ப்பு அதிகம்... வயது சம்பந்தப்பட்ட தொந்தரவு இருந்தால் அது தொடர்பாக மருத்துவரை அணுகுங்கள்...
ரிஷப ராசி:
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு குரு பகவான் மூன்றாம் வீட்டில் அமர்ந்து வெளிநாட்டு தொடர்புகளை ஏற்படுத்துவார்... உள்ளூரில் இருப்பவர்கள் வெளியூருக்கு சென்று வேலை தேட அவர்களுக்கு வேலை கிடைக்கும்... கம்யூனிகேஷன் துறையில் இருப்பவர்கள்... நடிப்பு நாடகம் கலைத்துறை என்று இருப்பவர்களுக்கு கூட இது ஒரு சிறந்த காலகட்டம்... குறிப்பாக வியாபாரத்தில் சேல்ஸ் மேனாக இருப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம் உங்களுக்கு நல்ல வியாபாரம் ஏற்பட்டு அதன் மூலம் பெயர் புகழ் கௌரவம் கிடைக்கும்... அஷ்டமாதிபதி மூன்றில் உச்சம் பெறுவதால் பெண்கள் வகையில் சிறிய தொல்லைகள் ஏற்பட்டாலும் கூட பெரிதாக உங்களை ஒன்றும் பாதிக்கப் போவதில்லை தைரியமாக எந்த இடத்திலும் பேசுவதற்கான ஆற்றல் உண்டு...
உங்களை பற்றி குறை பேசியவர்கள் கூட தற்பொழுது உயர்வாக பேசுவார்கள்... நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் போட்டு வாருங்கள் நல்லதே நடக்கும்...
மிதுன ராசி:
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பவர்களா அல்லது பட்டும் படாமல் பேசுபவர்களால் நீங்கள், இதோ குரு இரண்டில் உச்சம் பெறுகிறார்... குடும்பத்தோடும் உற்றார் உறவினர்களோடும் நல்ல ஐக்கியமாக செல்லக்கூடிய காலகட்டம்... புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்... நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருக்கின்ற ஆண் பெண் இருவருக்குமே வரன்கள் வாயில் வந்து நிற்கும் ஆனால் நீங்கள் தற்பொழுது நிச்சயத்தை வைத்துக்கொண்டு ஏப்ரல் அல்லது மேற்கு பிறகு திருமணம் ஏற்பாடு செய்யலாம் அப்படி செய்வதன் மூலம் நல்ல சுமுகமான வாழ்க்கை செல்லும்...
தொழில் ரீதியாக சற்று நிலையற்ற தன்மையில் இருந்த நபர்களுக்கு கூட நிலையான ஒரு தொழில் அமையும்... எதிரிகளை உங்களிடம் வந்து சமரசம் ஆகக்கூடிய அளவுக்கு நல்ல பராக்கிரம தொழில் வளர்ச்சி உண்டு.... எவ்வளவு சேர்த்து வைத்தாலும் அவை பெரிய அளவுக்கு உங்களுக்கு கை கொடுப்பதில்லை என்ற எண்ணம் இருந்தால் தற்பொழுது குரு உச்சத்தின் போது நல்ல மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்... பெருமாள் கோவிலில் இருக்கக்கூடிய சக்கரத்தாழ்வார் சென்று வழிபடுங்கள் சந்தோஷமாக வாழ்க்கை மாறும்...
கடக ராசி:
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே ராசியிலேயே குரு பகவான் உச்சம் அடைவது நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்... குறிப்பாக வங்கியில் கடன் கேட்டால் உடனடியாக கிடைத்து வியாபாரத்திற்கு உங்களின் முன்னேற்றத்திற்கோ கடன் அடைதலுக்கோ நீங்கள் அந்த பணத்தை பயன்படுத்த முடியும்...
யார் உங்கள் பின்னால் இருந்து உங்களுக்கு சதி செய்தார்கள் என்பது இந்த காலகட்டத்தில் காண்பித்துக் கொடுக்கப்படும்... நல்ல குருமார்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்... குறிப்பாக சாய்பாபா ராகவேந்தர் குரு தட்சிணாமூர்த்தி போன்ற குரு அம்சம் கொண்டவர்களை நீங்கள் வணங்கி வந்தால் ஏழு மற்றும் பத்தாம் வீட்டிற்க்கான நன்மைகள் உங்களை வந்து சேரும்...
சிம்ம ராசி:
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 12 ஆம் வீட்டில் குரு பகவான் உச்சம் பெற்று இருக்க இடம் விட்டு இடம் மாறுதல் ஏற்படும்... செலவுகள் கட்டுக்குள் கொண்டுவர நினைப்பீர்கள்... ஆனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்காக சுபச் செலவு செய்ய வேண்டும் என்று வந்தால் எப்படி கட்டுக்குள் வரும்.... சுபச்சளவு என்றால் குழந்தைகளின் படிப்பு செலவு திருமண செலவாக இருக்கலாம் வாகனம் வாங்குதல் வேறு ஏதேனும் குடும்பத்திற்காக செலவிடுதல் போன்ற நல்ல காரியங்களுக்காக உங்களுக்கு செலவுகள் ஏற்படும்...
சிம்ம ராசியை பொறுத்தவரை ராசியிலேயே கேது பகவான் அமர்ந்து மிகுந்த ஞானத்தையும் அடுத்தவர்கள் கண்ணில் படாமல் செயல்படும் தன்மையையும் உங்களை செய்ய வைப்பார்... இருந்தாலும் மோட்ச ஸ்தானம் என்பதால் கோயிலுக்கு அடிக்கடி சென்று வருவீர்கள்... வீடு, நிலம் தொடர்பாக நல்ல செய்தி உங்களின் காதுகளுக்கு வரும்... புதிய , பழைய வாகனம் வாங்க வாய்ப்புண்டு.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.