ஹஜ் பயணம் "மோசடி"! பொதுமக்களே உஷார் !

அரசு அங்கீகாரம் இல்லாத சில மோசடி நிறுவனங்கள் பொது மக்களிடத்தில் பணத்தைப் பறித்து..
h
h
Published on
Updated on
1 min read

சில மோசடி ஹஜ் பயணம் ஏற்பாட்டாளர்களிடம் பொதுமக்கள் பணத்தை இழக்க வேண்டாம் - தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கம்

ஹஜ் உள்ளிட்ட புனித பயணங்களுக்கு தமிழ்நாடு அரசாங்கம் மானியம் வழங்கி வருவதாகவும் இது பாராட்டுக்குரியது -தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கம்

சென்னை, சேப்பாக்கத்தில். உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் சலீம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில் பேசிய அவர்

இந்தியாவில் இந்த வருடம் (2025 ஆம் ஆண்டு) ஹஜ் பயணங்கள் சொல்லக்கூடியவர்கள் இரண்டு விதமாக பயணங்கள் மேற்கொண்டு இருக்கிறார்கள் எனவும் அவை அரசு மூலமாகவும் மற்றொன்று அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலம் செல்கின்றனர் என தெரிவித்தார்.

அரசு அங்கீகாரம் இல்லாத சில மோசடி நிறுவனங்கள் பொது மக்களிடத்தில் பணத்தைப் பறித்து யாத்திரைக்கு அழைத்து செல்லாமல் அல்லது அழைத்து சென்று return டிக்கட் ஏற்பாடு செய்யாமல் அங்கே ஏமாற்றி விட்டு வருகிறார்கள் எனவும், இந்த மோசடி குற்றச்சாட்டை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதால் இத்தகையர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

கடந்தாண்டு வெப்ப அளவு கடுமையாக இருந்ததன் காரணமாக ஹஜ் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி பல உயிர்ப்புகள் ஏற்பட்டன எனவும், ஹச்சுக்கு பயணம் செல்ல திட்டமிடும் பயணிகள் எவ்வித அச்சமும் இன்றி தாமதம் இல்லாமல் முன்கூட்டியே , ஹஜ் ஏற்பாட்டவர்களை தேர்வு செய்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு ஹஜ் ஏர்பாட்டர்கள் சங்கம் சார்பாக லோகோவை வெளியிட இருப்பதாகவும் இந்த லோகோவை பயன்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் மூலம் மட்டும் ஹஜ் யாத்திரிகர்கள் தங்களின் புனித பயணத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்,

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலை http://thoa.in/ மற்றும் https://pto. haj.gov. in வலைதள பக்கத்திற்கு சென்று பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும், அரசு அங்கீகாரம் இல்லாத சில மோசடி நிறுவனங்களில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என தெரிவித்தார்.

ஹஜ் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசாங்கம் மானியம் வழங்கி வருவதாகவும் இது பாராட்டக்கூடிய விஷயமாகும் என்று பெருமிதம் தெரிவித்தார்.

ஹஜ் பயணிகளுக்கு நேரடி விமான சேவை கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் இருந்து இல்லை எனவும் இந்திய விமானத்துறை அமைச்சகம் முன்னெடுத்து நேரடி விமான சேவையை சென்னையில் ஏற்பாடு செய்ய கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்தார்

மேலும் இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்களை சென்னையிலிருந்து விமான சேவை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்

மேலும் தமிழக முதலமைச்சரும் அழுத்தம் கொடுத்தால் நிச்சயம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com