Social Media-வில் வைரலாகணுமா? உங்க ஜாதகத்துல 'ராகு' பலமா இருந்தா நீங்கதான் அடுத்த இன்டர்நெட் கிங்!

ராகுவின் அருள் பெற்றவர்கள் ஒரு ஓவர் நைட்டில் ஸ்டார் ஆகிவிடுவார்கள்...
Social Media-வில் வைரலாகணுமா? உங்க ஜாதகத்துல 'ராகு' பலமா இருந்தா நீங்கதான் அடுத்த இன்டர்நெட் கிங்!
Published on
Updated on
2 min read

இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதளங்களில் பிரபலமடைவது என்பது ஒரு பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் வீடியோக்கள் போட்டாலும் ஒரு சிலருக்கு மட்டும் லட்சக்கணக்கில் 'வியூஸ்' வருவது எப்படி? இதற்கு ஜோதிட ரீதியாக 'ராகு' மற்றும் 'புதன்' ஆகிய கிரகங்களின் பலமே முக்கிய காரணம். ராகு பகவான் தான் 'மாயை' மற்றும் 'பிரபலம்' ஆகியவற்றிற்கு அதிபதி. சினிமா, மீடியா, இன்டர்நெட் போன்ற துறைகளில் ஒருவர் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்றால் அவரது ஜாதகத்தில் ராகு பகவான் சுபத்துவமாக இருக்க வேண்டும். ராகு 10-ம் வீட்டில் இருப்பவர்கள் அல்லது லக்னத்தில் இருப்பவர்கள் மிக எளிதில் பொதுமக்களைக் கவர்ந்துவிடுவார்கள்.

அதேபோல் 'புதன்' கிரகம் தகவல் தொடர்பு மற்றும் புத்திசாலித்தனத்திற்கு அதிபதி. நீங்கள் பேசும் விஷயம் அல்லது நீங்கள் எழுதும் கருத்து மக்களிடம் சரியாகச் சென்றடைய வேண்டும் என்றால் புதன் பலமாக இருக்க வேண்டும். புதனும் ராகுவும் இணைந்து ஜாதகத்தில் நின்றால் அவர்களுக்கு 'டெக்னாலஜி' அறிவு அதிகமாக இருக்கும். இவர்களால் ஒரு விஷயத்தை எப்படி வைரல் ஆக்க வேண்டும் என்பது அத்தப்படியாகத் தெரியும். குறிப்பாக 'நிழல் உலகமான' இன்டர்நெட்டில் நீங்கள் எதாவது சாதிக்க வேண்டும் என்றால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மாயைக் கிரகமான ராகுவின் தசா புத்தி உங்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டும்.

12 ராசிகளில் குறிப்பாக மிதுனம், கன்னி மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு டிஜிட்டல் துறையில் சாதிக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட அதிகம். காரணம் மிதுனம் மற்றும் கன்னியை ஆள்வது புதன், கும்பத்தை ஆள்வது சனியாக இருந்தாலும் அங்கு ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் 5-ம் இடம் (கலை மற்றும் புகழ்) மற்றும் 11-ம் இடம் (லாபம் மற்றும் மக்கள் தொடர்பு) வலுவாக இருந்தால், நீங்கள் சமூக வலைதளங்கள் மூலம் பெரும் பொருளை ஈட்ட முடியும். ராகுவின் அருள் பெற்றவர்கள் ஒரு ஓவர் நைட்டில் ஸ்டார் ஆகிவிடுவார்கள். ஆனால் ராகு சரியில்லை என்றால் அதே வேகத்தில் வீழ்ச்சியும் ஏற்படும்.

இன்றைய காலக்கட்டத்தில் 'Influencer' ஆக விரும்புபவர்கள் தங்களது ஜாதகத்தில் 3-ம் இடத்தை (தைரியம் மற்றும் முயற்சி) கவனிக்க வேண்டும். அங்கு செவ்வாய் பலமாக இருந்தால் நீங்கள் மற்றவர்களை விடத் துணிச்சலான கண்டென்ட் கொடுத்துப் பிரபலமடைவீர்கள். சந்திரன் மற்றும் ராகு சேர்க்கை இருப்பவர்களுக்குப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தங்களை அழகாகக் காட்டிக்கொள்ளும் கலை கைவந்த கலையாக இருக்கும். சமூக வலைதளப் பயணத்தில் உங்களுக்குத் தடைகள் இருந்தால், புதன்கிழமைகளில் பெருமாளை வழிபடுவதும், சனிக்கிழமைகளில் துர்க்கைக்கு விளக்கேற்றுவதும் உங்கள் 'டிஜிட்டல் யோகத்தை' அதிகரிக்கும்.

ஆன்லைன் பிசினஸ் செய்பவர்கள் தங்களது ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சுக்கிரன் மற்றும் ராகு இணைந்திருந்தால் அழகான பொருட்கள் மற்றும் ஆடம்பரமான விஷயங்கள் மூலம் இன்டர்நெட்டில் நீங்கள் பெரும் லாபம் சம்பாதிக்கலாம். இந்த டிஜிட்டல் யுகத்தில் கிரகங்களின் பெயர்ச்சி உங்கள் இன்டர்நெட் கரியரையும் மாற்றியமைக்கும். ராகுப் பெயர்ச்சியின் போது பல புதிய யூடியூபர்கள் உருவாவதை நாம் காணலாம். உங்கள் ஜாதகத்தை ஒருமுறை ஆராய்ந்து பாருங்கள், ஒருவேளை அந்தப் புகழ்பெற்ற இன்டர்நெட் கிங் நீங்களாகக் கூட இருக்கலாம். வாய்ப்புகள் ஆன்லைனில் கொட்டிக்கிடக்கின்றன, உங்கள் கிரகங்கள் துணையாக இருந்தால் நீங்களும் ஒரு வெற்றியாளரே!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com