அன்னை பார்வதியின் அருந்தவ புதல்வன், ஆடல் நாயகனின் ஆசை பாலகன்:
அன்னையும் பிதாவும் அகில மென்று அனைவருக்கும் உணர்த்தியவனான விநாயகர் 32 வடிவங்களில் காட்சியளிப்பதோடு இசைக்கருவிகளை வாசிப்பது போன்றும் நடனங்களை ஆடுவது போன்றும் பல ஆலயங்களில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.
மேலும் சில ஆன்மீக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
இவர் இல்லாத ஆலையாங்களும் இல்லை அரச மரங்களும் இல்லை என்றே கூறலாம். அப்படி பட்ட ஆனைமுக தெய்வம், ஆறு மாதங்கள் வெண்மை நிறமாகவும் ஆறு மாதம் கருப்பாகவும் மாறும் அதிசயம் நிறைந்த ஆலயம்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அடுத்த தக்கலை,கேரளபுரத்தில் அமைந்துள்ளது.
கேரள பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயம் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் இங்குள்ள அதிசயக்கல்லால் ஆன விநாயகர் 2 ஆயிரத்து 300 ஆண்டுகள் பழைமையானது என்றும் கூறப்படுகிறது
இயற்கையான சூழலில் அமைந்திருக்கும் முகப்பு சன்னதி யானை உருவங்களுடன் காணப்பட உள்ளே ஆலமரமே மேற்கூரையாகவும் அதன் அடியில் ஆனைமுகனும் அழகாய் வீற்றிருக்கிறார்,
இந்த விநாயகர் விக்ரகம் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும் காட்சியளிப்பது ஒரு அதிசய நிகழ்வாக கருதப்படுகிறது. வினாயகர் வெண்மை நிறத்தில் இருக்கும் போது அவர் வீற்றிருக்கும் அரச மரத்தின் இலைகள் பசுமையாக இருப்பதோடு கறுப்பு நிறமாக மாறும் போது இலைகள் அனைத்து கருகி விழுகின்ற நிகழ்வுகளுக்கு இதுவரை விடைதெரியாத வினாவாகவே இருக்கிறது
மேலும் படிக்க: நிலப்பிரச்னைகள் தீர்க்கும் திருச்சுழி பூமிநாதர் கோவில்
இந்த நிறம் மாற்றம் குறித்து ஆராய்ந்த புவியல் வல்லுனர்கள் இந்த அதிசய விநாயகர் இந்திர காந்தம் எனும் அபூர்வ வகை கல்லால் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் இந்த அதிசயங்கள் நடப்பதாவும் தங்கள் அறிவுக்கு எட்டியதை எழுதிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த அதிசய விநாயகர் இங்கு வந்த வரலாறும் சுவாரஸ்யம் நிறைந்ததாகவே கூறப்படுகிறது. அரச மரத்தடியில் கிடைத்த இந்த விநாயகர் ஆழ்கடலில் கிடைத்தவர் என்றால் ஆச்சர்யம் அல்லவா?
கேரள மாநிலத்தில் திருவிதாங்கூரை ஆண்ட கேரள வர்மா தம்புரான் ராமேஸ்வரம் கடலில் புனித நீராட சென்றபோது காலில் தென்பட்ட கல்லை கண்டு ஆச்சரியத்தில் நின்றார். ஏனேன்றால் அது கல்லல்ல... முழுமுதற் கடவுளான கணபதி என்பதை அறிந்தான். அக்னி தீர்த்ததில் கிடைத்த அந்த ஆறு அங்குலமேயான அதிசய தெய்வத்தை கேரளபுரம் எனும் அரசமரத்தடியில் வைத்து பூஜித்தான். காலம் செல்ல செல்ல அரசமரமும் வளர்ந்தது அதனுடன் அச்சிலையும் வளர்ந்தது. சிலையாக விற்றிருக்கு விநாயகரின் அருளும் பெருகியது.
மேலும் படிக்க: தீய நேரங்களை நீக்கி நன்மைகளைத் தரும் கால தேவி கோவில்
இன்னும் இங்கு நடக்கும் அதிசய நிகழ்வாய் விநாயகர் சிலை வெண்மையாக இருக்கும் நாளில் ஆலயத்தில் உள்ள கிணற்று நீர் தெளிவாகவும், விநாயகர் கருப்பு நிறத்தில் மாறும் போது நீர் கருப்பாக மாறுகின்ற அதிசயம் நிகழ்கிறது
இக்கோவில் சிவன் மாஹதேவராக சன்னதி கொண்டும் அங்கு சண்டிகேஸ்வரர், நடராஜர் சிவகாமி தெய்வங்களுக் வீற்றிருப்பதோடு நாகராஜக்கள், சப்த கன்னிமார்கள் கோவில்களும் காணப்படுகிறது ,
இந்த அதிசய விநாயகரையும் திருச்சி மலைக்கோட்டை விநாயகரையும், பிள்ளையார் பட்டி கணபதியையும் ஒரே நாளில் தரிசனம் செய்யும் போது பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கி இனி வரும் நம் தலைமுறை செல்வ வளம் பெற்றதாக இருக்கும் என்பது ஐதீகமாக விளங்குகிறது.
மேலும் படிக்க: சிவனும் விஷ்ணுவும் ஒன்றாய் அவதரித்த சங்கரநாராயணன் ஆலயம்
அதிசய விநாயகரும், அவர் வீற்றிருக்கும் ஆலமரமும், கிணற்று தீர்த்தமும் நிறைந்த இக்கோவிலுக்குள் நிற்கும் போது கண்ணுக்கு தெரியாத அலைகள் நம் உடல் நோய்களை தீர்க்கும் என்பதில் ஐய்யமில்லை .....
மாலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக நாகர் கோவில் செய்தியாளர் மணிகண்டனுடன் கலைமாமணி நந்தகுமார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்