கரூர் வெங்கமேட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசாஞ்சகல் கருப்பண்ண சுவாமி கோயிலில் நடந்து வரும் பல ஆச்சரியமிக்க நிகழ்வுகளால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது.
நம் தமிழ் தேசத்தில் காவல் தெய்வமாக போற்றி வணங்கப்படும் கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம் என்றும், அவர் கிராமங்கள் தோறும் கோவில்களில் நின்ற கோலம், அமர்ந்த கோலம், குதிரையின் மீதேறி புறப்படும் கோலம் என பல்வேறு நிலைகளில் காட்சியளிப்பதோட்டு சில நேரம் பக்தர்களின் உடலின் புகுந்தும் குறி சொல்லி அதிர வைக்கிறார்.
விவசாயிகளின் குல தெய்வமாக காட்சியளிக்கும் கருப்பன் கம்பீர உருவம் கொண்டு தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், திமிறிய தோள்கள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் நின்று ஊரையும் மக்களையும் காக்கும் தெய்வமாக விளங்குகிறார்.
வால்மீகி, தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது, ராமாயணத் தகவல்களாக உள்ளன.
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாக விளங்கும் ஐயப்பன், மகிஷியை வதம் செய்யப் புறப்பட்டபோது, சிவபெருமான் தனது அம்சமாகிய கருப்பசாமியை அழைத்து ஐய்யப்பனின் படைக்கு நீ சேனாதிபதியாக இருந்து, அவன் வெற்றிபெற உதவி செய்'' எனக் கட்டளை இட்டாராம். அவ்வாறே ஐயன் ஐயப்பனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கருப்பசாமி, சபரிமலையில் 18-ஆம் படியின் அருகே வலப்புறத்தில், பதினெட்டாம்படி கருப்பராக சன்னதி கொண்டிருக்கிறார்
சபரிமலையில் கன்னிமூல கணபதியை வழிபட்டு, வாவர் மற்றும் கருப்பசாமியிடம் அனுமதி பெற்ற பின்னரே பக்தர்கள் 18-ஆம் படிகளில் ஏறிச்செல்கின்றனர். அந்த அளைவிற்கு முக்கியத்துவம் பெரும் கருப்பனை சித்தங்காத்தான், பீடாபஹன் என்றெல்லாம் புராணங்கள் புகழ்கின்றனர்.
தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமங்களில் கருப்பசாமி இல்லாத கோயில்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு மக்களின் மனதிலும், வாழ்விலும் கருப்பசாமி இரண்டறக் கலந்து காணப்படுகிறார். கருப்பசாமி அமர்ந்த இடங்களுக்கேற்றார் போல் சங்கிலி கருப்பன், கருப்பனார் சாமி, குல கருப்பனார், பதினெட்டாம்படியான், வேட்டைக் கருப்பு, சின்ன கருப்புசாமி, பெரிய கருப்புசாமி, மீனமலை கருப்புசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என பலவிதமான நாமங்களால் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
அப்படி பட்ட கருப்பன் சாமிக்கு நூறாண்டுகளுக்கு முன் கரூரில் கோவில் அமைத்து பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். தர்மத்திற்கு மட்டுமே துணை நிற்கும் இவர் தனது பக்தர்களுக்கு ஒரு சோதனை என்றால் காற்றைவிட வேகமாக வந்து பிரச்னைகளை தீர்த்து வைப்பார் என நம்பப்படுகிறது. அந்த வகையில் இந்த கோவிலில் சாய்ந்த கல்லில் இருக்கும் இந்த கருப்பசாமியை வழிபடுவோரை தீமைகள், சாபங்கள், சூனியங்கள், போட்டி, பொறாமைகளிலிருந்து காப்பாற்றி வருவதோடு, நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் வழங்குவதாக பகதர்கள் தெரிவிகின்றனர்
பல்வேறு பரிவார காவல் தெய்வங்கள் காட்சி தரும் இக்கோயிலின் சிறப்பாக, குடிபோதையை மறக்க, இங்குள்ள கருப்பண்ணசாமி முன்பு சுருட்டு வைத்து வழிபட்டு, கருப்பு கயிறு கட்டிக்கொள்ளும் போது குடிபோதையை மறப்பதோடு அந்த குடிமகனின் குடியை கருப்பண்ணசாமி காப்பாற்றி வருவதாக பலன் அடைந்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அற்புத நிக்ழ்வுகளால் ஆயிரக்காணக்கான மக்கள் கருப்பனை நாடி வந்து நன்மைகள் பெருகின்றனர்
இக்கோயிலில் அமாவாசை, பெளர்ணமி அன்று விஷேச வழிபாடு நடைபெறும் போது ஆடு, கோழிகள் பலியிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
சாஞ்சகல் கருப்பண்ண சுவாமியின் முன்புறம் நாயுடன் அமைந்துள்ள குதிரைதான் கருப்பனின் வாகனமாக கருதப்படுகிறது. ஓவ்வொரு நாள் இரவிலும் சாஞ்சகல் கருப்பண்ண சுவாமி ஊர் எல்லை வரை காவலுக்கு செல்லும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மாலை முரசு செய்திகளுக்காக கரூர் செய்தியாளர் அஜித்துடன் கலைமாமணி நந்தகுமார்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்