சிலை இல்லாமல் அருள்பாலிக்கும் முருகன்! நோய் தீர்க்கும் எண்ணெயும் விசித்திர நீதி விசாரணையும்!

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணவாளநல்லூர் என்ற ஊரில் அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது
சிலை இல்லாமல் அருள்பாலிக்கும் முருகன்! நோய் தீர்க்கும் எண்ணெயும் விசித்திர நீதி விசாரணையும்!
AI Generated Image
Published on: 
Updated on: 
2 min read

மக்களின் குறைகளைத் தீர்க்க மனிதர்களால் உருவாக்கப்பட்ட நீதிமன்றங்கள் நாம் கண்டதுண்டு ஆனால், மனிதர்களின் புகார்களை ஏற்று . தெய்வீக நிதிமன்றமாக விளங்கும் கொளஞ்சியப்பர் சந்நதியில் இன்றும் அமானுஷ்யம் நின்றைந்த சங்கதிகள் நடப்பாதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணவாளநல்லூர் என்ற ஊரில் அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது

இங்கு ஓம் என்னும் பிரணவத்தின் வடிவமாக விளங்கி, தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத் தன் திருக்கரங்களில் வேல் தாங்கி நிற்கிறார் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான்,. தன் பக்தர்களின் குறைகளைக் கேட்கும் நீதிதேவனாகவும், பிணிகளைப் போக்கும் வைத்தியராகவும் சுயம்புவாக வீற்றிருந்து அதிசயங்களை நிகழ்த்தி வருகிறார் முருகன் எனும் அழகன்

தமிழகத்தில்ஒவ்வொரு தலமாக இறைவனை வழிபட்டு வந்த சுந்தரமூர்த்தி நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் விருத்தாசலத்திற்கு வந்தபோது, இறைவனையும் ஊரையும் "கிழம்" என இளக்காரமாக எண்ணிப் பாடாமல் கடந்து செல்ல முயன்றார்.

அவரது அலட்சியத்தைக் கண்ட முருகப்பெருமான், சுந்தரர் ஊரை விட்டு வெளியேறாமல் இருக்க நான்கு திசைகளிலும் காவலாக நின்றார். மேற்கு திசையில் வேடவ குமரனாகத் தோன்றி சுந்தரரின் பொருட்களைப் பறித்துக்கொண்டு முருகன், "பழமலைநாதரைப் பாடிவிட்டுப் பொருட்களைப் பெற்றுக்கொள்" என்றார்.

தன் தவறை உணர்ந்து சுந்தரரும் ஈசனைப் பாடித் தொழுதார். அப்படி வேடர்குலச் சிறுவனாக வந்து சுந்தரருக்கு நீதி வழங்கிய அந்த முருகனே, பிற்காலத்தில் கொளஞ்சியப்பராக சுயம்பு வடிவில் இங்கு நிலைபெற்றார் என்பது ஐதீகமாக உள்ளது

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடாக இருந்த அப்பகுதியில், மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று புதருக்குள் தானாகப் பால் சொரிந்துவந்தது. இதைக் கவனித்த உரிமையாளர் ஊர் மக்களைத் திரட்டிப் புதரை அகற்றியபோது, அங்கே தெய்வாம்சம் பொருந்திய ‘பலிபீடம்’ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

உருவச் சிலைகள் ஏதுமின்றி சுயம்புவாகக் தோன்றிய அந்தப் பலிபீடமே முருகப்பெருமான் என்பதை ஞானிகள் உணர்ந்தனர். அதன்கீழ் முருகனின் சடாட்சர மந்திரம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்..

வீட்டில் பொருட்கள் திருடுபோனாலோ, பக்தர்கள் தாங்கள் அநியாயங்களைச் சந்தித்தாலோ பக்தர்கள் தங்கள் குறைகளைக் காகிதத்தில் எழுதி இங்குள்ள கொளஞ்சியப்பரிடம் புகார்) மனுவாகச் சமர்ப்பிக்கின்றனர்.

இதனையடுத்து நீண்ட தாடியுடன் குதிரை மீது அமர்ந்திருக்கும் முனியப்பர், விசாரணை அதிகாரியாகச் சம்பவ இடத்திற்கு குதிரை மீது சென்று நடந்த சம்பவம உண்மையா? என அறிந்து முருகப்பெருமானிடம் சமர்ப்பித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து நீதிதேவனாகக் கொளஞ்சியப்பர் தீர்ப்பு வழங்குவதாக பக்தர்கள் தெரிவிகின்றனர்

தெய்வத்திடம் நேரடியாகப் புகாரளித்து நீதி பெறும் இத்தகைய விசித்திரமான வழிபாட்டு முறை இக்கோவிலில் காணப்படுவதோடு, கை, கால் வலி, உடற்காயங்கள் மற்றும் பல்வேறு வகையான தோல் வியாதிகளால் அவதிப்படும் பக்தர்கள், இத்தலத்திற்கு வந்து வேப்ப எண்ணெயை வைத்து அர்ச்சனை செய்து பிரசாதமாகப் பெறுகின்றனர். புனிதமிக்க வேப்ப எண்ணெயi அறுகம்புல்லால் தொட்டு, நோய் உள்ள இடங்களில் தடவி வந்தாலும், அருந்தி வந்தாலும் தீராத வியாதிகளும் பூரணமாகக் குணமடைவதாகப் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்

உருவமற்ற ஒளியாய், நீதி வழங்கும் நீதிபதியாய், பிணி தீர்க்கும் வைத்தியனாய் விளங்கும் ஸ்ரீகொளஞ்சியப்பர் திருக்கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருவோம் ; வாழ்க்கையில் தீராத குறைகள் அனைத்தும் தூளாய்ப் பறந்து நல்வாழ்வு பெறுவோம்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com