குழந்தை வரம் அருளும் ஐயப்பன்… சிறுவர்களோடு நதியில் விளையாடி காட்சியளித்த குட்டூர் சாஸ்தா!

சிறுவர்கள் மாடு மேய்ப்பதற்காக வந்த போது விளையாட்டாக அங்கிருந்த சிறு கற்களைகொண்டு ஒரு கோவில்...
குழந்தை வரம் அருளும் ஐயப்பன்… சிறுவர்களோடு நதியில் விளையாடி காட்சியளித்த குட்டூர் சாஸ்தா!
Published on
Updated on
2 min read

கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரம் மாவட்டத்தில் வளைந்தோடும் நதியும் செழித்து வளர்ந்திருக்கும் வயல் வெளிகளும் நிறைந்த வாமனபுரம் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமையானதும் அதிசக்திவாய்ந்த நிறைந்ததுமான மேஜர் குற்றூர் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் அமைந்துள்ளது பசுமையான சோலைகள் சூழ்ந்துள்ள இக்கோவில் பக்தர்களின் நல்ல பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தரும் திரு தலமாக விளங்குகிறது.

கேரள கட்டிட கலையில் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்ட இக்கோவிலின் முன்பு கொடிமரமும் அதன் அடியில் தெய்வகளின் சிலைகளும் அழகாய் அமைக்கப்பட்டுள்ளன. சாய்வான கூரைகளோடு மரத்தாலான அலங்காரங்களுடன் கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலுக்குள் நமஸ்கார மண்டபமும், கருவறையும், கோவிலைச்சுற்றி சுவர்கள், விளக்குமாடங்கள் மற்றும் துணை சன்னதிகள் அமைந்துள்ளன.கோவிலின் சுற்றுப்புறத்தில் மரத்தின் அடியில் நாகர் சிலையும் தனி சன்னதியில் கணபதியும், தேவியும் வீற்றிருக்கின்றனர்.

சபரிமலை போல் இங்குள்ள சாஸ்தா தவக்கோலத்திலோ அல்லது வேட்டைக்காரனாகவோ காணப்படாமல் புன்னகை பூத்த குழந்தை வடிவத்தில் கருவறையில் காட்சி தந்து அருள் பாலிக்கிறார்.இங்கு பாலகனாக காட்சித்தரும் சாஸ்தாவுடையை தோற்றத்திற்கு பின்னால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாள் நடந்த உண்மை சம்பவங்கள் சுடர் விட்டு பிராகாசிக்கின்றன. ஒரு காலத்தில் வெறும் புல்வெளிகள் நிறைந்த இந்த வாமனபுரம்,ஒரு மேய்ச்சல் பகுதியாக இருந்தது. இந்த பகுதிக்கு தினம் தோறும் 12 சிறுவர்கள் மாடு மேய்ப்பதற்காக வந்த போது விளையாட்டாக அங்கிருந்த சிறு கற்களைகொண்டு ஒரு கோவில் அமைத்து களிமண்ணால் ஒரு தெய்வச்சிலையை உருவாக்கி வைத்து இலைகளாலும் சிறுமலர்களாலும் வழிபாடுகள் செய்து விளையாடி களித்தனர்.

மிகப்பெரிய பூசாரிகள் போல மந்திரங்களையும் சிறப்பான வழிபாடுகளையும் நடத்தி விளையாடிக்கொண்டிருந்த இவர்களோடு இறைவான சாஸ்தாவும், சிறுவனாய் வந்து விளையாடியதாக கூறப்படுகிறது. ஒருமுறை இப்பகுதியில் உள்ள நதியில் 12 சிறுவர்களும் இறங்கி குளித்து கொண்டிருந்த போது அவர்களுடன் ஒரு அழகும் ஆற்றலும் அமானுஷ்யமும் நிறைந்த சிறுவனும் விளையாடுவதை அங்கிருந்த பட்டதிரி எனும் முனிவர் கவனித்துள்ளார். இதனால் ஆச்சரியம் அடைந்த யோகி, 12 சிறுவர்களையும் அருகில் அழைத்து எண்ணிய போது அவர்கள் 12 பேர் மட்டுமே இருப்பதையும் அந்த அழகுமிக்க சிறுவன் இல்லாததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்

மீண்டும் அவர்கள் நதியில் இறங்கி விளையாடிய போது 12 சிறுவர்களோடு அந்த தெய்வாம்சம் நிறைந்த சிறுவனும் நீச்சல் அடித்தபடி சிரித்து விளையாடுவதை கண்டு வியப்படைந்தார். பின்னர் முனிவர், சிறுவர்கள் விளையாட்டாக செய்து வழிபட்ட களிமண் சிலையை கண்டார். அப்போது அந்த சிலையில் இருந்து உருவாகிய ஒரு ஒளி, அப்பகுதி முழுவதும் பரவியிருப்பதை கண்ட முனிவர் சிறுவர்களோடு சிறுவனாக விளையாடி கொண்டிருப்பது சாஸ்தாவான ஐயப்பன் என்று உணர்ந்து, அருகில் இருந்த நதிக்கரையினை நோக்கி ஓடினார்

அப்போது அதே தேஜஸான சிறுவன் வெள்ளத்தில் நடந்து வந்து முனிவர் முன்னால் சிறித்தபடி நின்றான். அப்போது சிரித்தபடி பேசிய சிறுவன், நான் அந்த சிறுவர்களோடு விளையாடி மகிழ்ச்சியாக இருந்தேன் என்று சொன்னதும், அதிர்ந்து போன முனிவர் அங்கு நிற்கும் சாஸ்தாவை வணங்கியதோடு ,சற்றும் தாமதிக்காமல் குழந்தவடிவான சாஸ்தாவை சிறுவர்கள் செய்த களிமண் சிலையில் அவோகனம் செய்ததாக தல வரலாறு தெரிவிக்கிறது

நதியில் இருந்த குழந்தையான சாஸ்தாவின் சைதன்யம் களிமண் சிலையில் அவோகனம் செய்யப்பட்டதால் அந்த இடத்தின் பெயர் குட்டுர் என்பதாலும் இத்தலத்திற்கு குட்டூர் தர்ம சாஸ்தா என அழைப்பட்டு வருகிறது. சிறுவர்களால் உருவாக்கப்பட்ட சாஸ்தா சிலை என்பதால் இக்கோவிலில் வீற்றிருக்கும் சாஸ்தா பிள்ளையார் சாஸ்தா என்று அழைக்கப்பட்டு வருகிறார். இங்கு உள்ள சாஸ்தா குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் நல்ல கல்வியறிவு கிடைக்கவும் ஆசிர்வாதிப்பதாக நம்பப்படுகிறது.

குழந்தைகள் இல்லாத தம்பதிகள் இந்த ஆலயத்திற்கு வந்து சாஸ்தாவின் முன் நின்று பிராத்திக்கும் போது. அவர்களின் வேண்டுதல்கள் சாஸ்தாவின் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்டு குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் .இதன் காரணமாகவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இக்கோவில் ஒரு வரம் தரும் தலமாக விளங்கி வருகிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களும், துன்பங்களும் நீங்குவதற்காக பெற்றோர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்து பிரார்த்தித்து பலன் அடைந்து வருகின்றனர் இக்கோவிலில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக நடக்கும் ஒரு தனித்துவமான பிள்ளை ரூட் எனப்படும் சடங்கு வேறெங்குமுள்ள கோவில்களிலும் நடத்தப்படுவதில்லை. என்பது குறிப்பிடதக்கதாகும் . சாஸ்தா சிறுவர்களோடு விளையாடியதற்கு நன்றி செலுத்தும் விதமாகவும், தங்கள் குழந்தகளுக்கும் ஆயுள் முழுவதும் சாஸ்தா துணையாக இருக்க வேண்டும் என்பதற்காவும் கோவிலுக்குள் படைக்கப்பட்ட பிரசாதத்தைதங்கள் குழந்தகளுக்கு பெற்றோர்கள் ஊட்டும் நிகழ்வு இச்சடங்கின் போது நடத்தப்படுகிறது.

மாலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக கலைமாமணி நந்தகுமார்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com