

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே... 2025 கலவையான பலன்களோடு உங்களுக்கு சென்றிருக்கும் அதாவது நல்லவையும் நடந்திருக்கும் சற்று மனதிற்கு பிடிக்காத நிகழ்வுகளும் நடந்திருக்கும்... வருகின்ற 2026 உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாமா...? இன்றைய நவீன உலகத்தில் ராகு பகவானை தவிர்த்து விட்டு நீங்கள் வாழ்க்கை நடத்த முடியாது... நீங்கள் பார்க்கின்ற செய்கின்ற நடக்கின்ற யோசிக்கின்ற அனைத்து வேலைகளிலும் ராகு பகவானே அமர்ந்திருக்கிறார்... எப்படி என்றால் காலையில் எழுவது செல்போனை பார்ப்பது நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வது நண்பர்களுடன் பேசுவது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற அனைத்துமே ராகு பகவானின் அம்சம் தான்... அப்படிப்பட்ட ராகு பகவான் உங்களுடைய ராசிக்கு 2026 இல் லாப ஸ்தானமான 11ம் வீட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார்... பாருங்கள் இன்றைக்கு நமக்கு அத்தியாவசிய தேவை கொடுப்பவர் ராகு பகவான்... கூகுள் பே, போன் பே, ஆன்லைன் பண பரிவர்த்தனை இவை அனைத்துமே ராகு பகவானின் வசம் தான் உள்ளது... அப்படி என்றால் நீங்கள் ராகு பகவானுக்கு மிகுந்த நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்... லாப ஸ்தானத்தில் உங்களுடைய ராசிக்கு ராகு பகவான் நீங்கள் எடுத்து செய்கின்ற அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றியை கொண்டு வருவார்....
உங்களுடைய வியாபாரத்தையோ அல்லது தொழிலையோ ராகுவின் அம்சங்களான சமூக வலைதளங்களை பயன்படுத்தி விரிவுபடுத்த பாருங்கள் நிச்சயமாக அவை உங்களுக்கு பணத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்... குருபகவான் உங்களுடைய ராசிக்கு நீங்கள் எடுத்து வைக்கும் முயற்சிகளில் அமர்ந்திருக்கிறார்.. ஒன்பதாம் வீட்டு அதிபதியான குரு பகவான் உங்களுக்கு பாக்கிய அதிபதி... அதாவது எனக்கு இந்த விஷயம் நன்றாக இருக்கிறது எனக்கு இந்த விஷயம் தேவைப்படுகிறது என்று எந்தெந்த காரியங்களைப் பற்றி நீங்கள் சிந்தித்து கொண்டு இருக்கிறீர்களோ அவை கொடுப்பதற்கு குருபகவானின் காரணமாக இருக்கிறார்... அப்படிப்பட்ட குரு பகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய முயற்சிகளில் பாக்கியத்தை கொண்டு வருவார்... பெரிய பிரச்சினைகளில் இருந்து விடுதலை கிடைக்கும் காலகட்டம் என்று கூட சொல்லலாம்... வடிவேலு ஒரு படத்தில் கால் வைக்கும் இடங்களில் எல்லாம் கன்னி வெடி வைத்திருக்கிறார்கள் என்ற வசனம் வரும்... இப்படியாக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் குரு பகவான் இருக்கிறார்... அவர் தேவகுரு உங்களுக்கு பெரிய பாதிப்பை கொண்டு வர மாட்டார்..... ஆனாலும் கூட அவர் விரயாதிபதி அப்படி என்றால் செலவுகளையும் சேர்த்து உங்களுடைய முயற்சிகளின் மூலம் கொண்டு வருவார்...
பத்து ரூபாய் கட்ட வேண்டிய இடத்தில் நீங்கள் 12 ரூபாய் கட்ட வேண்டி வரலாம்... அந்த செலவுகளையுமே முயற்சியின் மூலம் அவர் கொண்டு வருவார்... நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வெளியூர் வெளிமாநிலம் வெளிநாடு போன்ற தூரத் தொடர்புகளோடு நீங்கள் பயணிக்கும் பொழுது அந்தப் பிரச்சனைகளில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.... விரயங்கள் குறையும்... எண்ணங்கள் மூலமாக நல்ல ஆற்றல் பிறக்கும்... 5ஆம் வீட்டில் கேது பகவான் அமர்ந்து எது தவறு எது சரி நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது போன்ற காரியங்களில் அவர் நல்ல ஒரு தெளிவை கொடுப்பார்...
பூர்வீகமான காரியங்களில் சற்று தடையை ஏற்படுத்தினாலும் கூட எதிர்காலத்தில் சிறப்பான பலன்களை கிடைக்கும்... மேஷ ராசியை பொறுத்தவரை மிக பிரம்மாண்டமான வெற்றி என்றால் அது 12 ஆம் வீட்டில் சனி அமர்ந்திருப்பது... ஏன் 12ல் சனி அமர்ந்து இருந்தால் நல்லது என்று கூறுகிறோம்... உங்களை தாமதப்படுத்தக் கூடியவர் உங்களுடைய விரயத்தில் இருக்கிறார் அப்படி என்றால் செலவாக கூடிய பணங்கள் விரயத்தில் இருக்கிறது விரயங்கள் கட்டுக்குள் வரும்... ஒரு மனிதனுக்கு சேமிப்பு தானே உயர வேண்டும் செலவு உயரக்கூடாது அல்லவா... அந்த வகையில் செலவு செய்யும் பாவகத்தில் சனி பகவான் அமர்ந்து செலவுகளை கட்டுக்குள் கொண்டு வருகிறார்.. அவர் நீதிபதி என்பதால் எதை செலவு செய்ய வேண்டும் எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற தர்மத்தை உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்...
வருடத்தின் மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார்... உச்சநிலையை அடைகிறார்... உடல் ரீதியான தொந்தரவுகள் காயங்களோ அல்லது வலிகளோ இருப்பவர்களுக்கு சிகிச்சையின் மூலம் அல்லது மருந்துகளின் மூலம் மே மாதத்திற்கு பிறகு பரிபூரண குணமடைய 100 சதவீத வாய்ப்பு உண்டு... உங்களுடைய லாபாதிபதி நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில் வீடு வாகனம் நிலம் இடம் தொடர்பாக அனைத்துமே உங்களுக்கு சாதகமாக முடியும்... நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது நிலம் தொடர்பான பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது என்று வருத்தப்படுகிறீர்களா 2026 மே மாதத்திற்கு பிறகு உங்களுக்கான பிரச்சனைகள் தீர வாய்ப்பு உண்டு...
மற்ற மாத கிரகங்களான சுக்கிரன் புதன், செவ்வாய் போன்றோர் உங்களுக்கு நல்ல நிலையில் தான் வரப் போகிறார்கள் ஜனவரியில் அஷ்டமஸ்தானத்தில் பயணிக்கும் செவ்வாய் பகவான் அப்படியே பெயர்ச்சியாகி உங்களுடைய பத்தாம் வீடான மகரத்தில் அமர்ந்து உச்சநிலையை அடைந்து தொழில் மூலமாக அபார மேன்மையை கொண்டு வருவார்... சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை.. வாடகை வீட்டிலிருந்து கஷ்டப்படுகிறேன் என்று கூறுபவர்களுக்கு இதோ வந்து விட்டார் குரு பகவான் நான்காம் வீட்டிற்கு... இவர் மூலமாக உங்களுக்கு சொந்த வீடு அமையும்... பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெரிதாக கவலைப்படும் அன்பர்களுக்கு மே மாதத்திற்கு பிறகு பிள்ளைகளுக்கான நல்ல வேலை அமையும் அதுவும் தூரதேசத்தில் அமையும் வருமானமும் அதன் மூலம் கிடைக்கும்.... இப்படியாக 2026 எந்த ஒரு பெரிய கஷ்டமும் கொடுக்காமல் கிரகங்கள் நல்ல நிலையில் அமர்ந்திருப்பதால் ஒருவேளைக்கு இரு வேலை செய்ய உங்களை முற்படும் இந்த சமயத்தில்.. அதன் மூலம் லாபங்களையும் கிரகங்கள் கொண்டுவரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... செவ்வாய் தோறும் முருகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் முடியாதவர்கள் வீட்டிலிருந்து வழிபடலாம் வாழ்க்கை சிறப்பாகும் வாழ்த்துக்கள்...
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்