

அன்பார்ந்த மாலை முரசு வாசகர்களே தனுசு ராசிக்கு 2025 ஆம் ஆண்டு கலவையான பலன்களை நடைபெற்றன புதிய வாய்ப்புகள், பெரிய பொறுப்புகள், அதே சமயம் பணவரையும்... குடும்பத்தாரின் இழப்பு... தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போவது... புதிய பொருள் சேர்க்கை போன்றவை நடந்திருக்கும்...
வருகின்ற இந்த 2026 ஆம் ஆண்டு தனுசு ராசிக்கு எப்படி இருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்... ராசி அதிபதி குரு பகவான் 2026 வருடத்தின் முதல் ஆறு மாதம் ஏழாம் பாவகத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருக்கிறார்... குருபகவான் ராசியை பார்த்து விட்டால் போதும் பெரிய பிரச்சனைகள் எதுவுமே நடக்காத வண்ணம் சிறப்பாக குரு உங்களை வழிநடத்திச் செல்வார்... குறிப்பாக நான்காம் அதிபதி குருவாகவே வந்து அவர் ஏழாம் வீட்டில் அமர்வதால் வாகனத்தால் மேன்மை... புதிய பொருள் சேர்க்கை புதிய பொருள் சேர்க்கை வீடு வாகனம் போன்றவை நடைபெறும்.... தனுசு ராசி பொருத்தவரை வாழ்க்கையில் புதிதாக மேற்கொள்ளும் எந்த காரியங்களும் சற்று தடைபட்டே நடைபெறலாம்... ஆனாலும் நம்பிக்கையை கைவிட வேண்டாம்.. ஏன் எதற்கு என்ற கேள்விகளோடு வாழ்க்கை நகர்த்தும் தனுசு ராசி அன்பர்களே... அடுத்தவர்களின் வாழ்க்கையில் குருவாக இருந்து சீரான பாதையில் அவர்களை நடத்துவதற்கு நீங்கள் முக்கிய தடவ இருப்பீர்கள்....
ராசி அதிபதி குரு நேர் ஏழாம் பார்வையாக பார்ப்பதால் நீண்ட தூர பிரயாணங்கள் மூலம் வெற்றி...... வெளியூர் வெளிமாநிலம் வெளிநாடு போன்றவை உங்களுக்கு சாதகமாக அமையும் தாயாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.... குரு பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் பாவகம் மற்றும் மூன்றாம் பாவகத்தை பார்ப்பதால் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்... பொருளாதார வசதி மேம்படும்... பொருளாதாரம் என்பது வாழ்க்கையில் அனைவருக்கும் முக்கியமாக இருக்கிறது அப்படிப்பட்ட பொருளாதார மிகப் பெரிய மேன்மை அடைய வேண்டுமென்றால் அதற்கு குருவானவர் 11ஆம் பாவத்தை பார்ப்பது மிகச் சிறப்பான பலன்களை கொண்டு வரும்... எதற்கெடுத்தாலும் வீண் வம்பு பழி சுமைகள் போன்றவை நீங்கள் செய்யாமலேயே ஏற்றுக்கொள்ளும் காரியங்களில் நல்ல சில முடிவுகள் உங்களைத் தேடி வரும்.....
மூன்றாம் பாவகத்தில் ராகு பகவான் அமர்ந்து.. மிக வேகமாக உங்களை சிந்தித்து செயல்பட வைப்பார்... குறிப்பாக நீங்கள் எண்ணுகின்ற எண்ணங்கள் செயல்கள் அனைத்தும் வேகமாக நடைபெறும்.. உங்களுடைய உற்றத்தார் மூன்று கிலோ மீட்டர் நடந்தால் நீங்கள் 13 கிலோமீட்டர் நடந்திருப்பீர்கள் அவ்வளவு எளிதாக காரியங்களை முன்னோக்கி சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.... நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருக்கும் உங்களுக்கு வாழ்க்கைத் துணை என் மூலம் அதிர்ஷ்டம் அடிக்கும்... எப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்தும் உங்களுக்கு விடுதலை கிடைக்கும் எடுக்கும் காரியங்களில் குருவின் பார்வையால் வெற்றி உண்டாகும்.....
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அன்பர்களுக்கும், ஒரு பொருளை வாங்கி விற்கும் அன்பர்களுக்கும், கம்யூனிகேஷன் துறையை சேர்ந்த அன்பர்களுக்கும், கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கும், பொருளாதார அரசியல் போன்ற துறைகளில் இருக்கும் அன்பர்களுக்கும் மிக ஏற்றமான காலகட்டம்.... எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் விநாயகரை வழிபட்டு அடுத்த கட்டத்திற்கு காரியங்களை நகர்த்தி செல்வது நல்லது.... ஒன்பதாம் பாவகத்தில் கேது பகவான் அமர்ந்திருக்க உங்களுடைய பாக்கியம் இறைவன் அருளால் ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.... எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் எந்த தெய்வத்திற்கு உங்களை பிடித்திருக்கிறது என்பது போன்ற காரியங்கள் இந்த 2026 ஆம் ஆண்டு உங்கள் எண்ணங்களுக்கு வந்து சேரும்...
ஒரு மனிதன் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற வேண்டும் வெற்றி பெற்றால் அவருக்கு லாபம் கிடைக்க வேண்டும்... இப்படி இரண்டுமே நடக்க வேண்டும் என்றால் குருவானவர் ஏழாம் பாவகத்தில் அமர்ந்து தற்பொழுது மூன்றாம் பாவகம் மற்றும் பதினோராம் பாகத்தை பார்ப்பதன் மூலம் உங்களுக்கு நன்மை நடைபெறும்... சனி பகவான் நான்காம் பாவகத்தில் அமர்ந்திருக்கிறார்.. பாருங்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர்ந்து கொண்டே இருக்கும் சமயத்தில் பொருளாதார முன்னேற்றமும் வந்து கொண்டே இருக்கும்.... நான்காம் பாவகத்தில் இருக்கும் சனி பகவான் நேர்பார்வையாக பத்தாம் பாவகத்தையும் பார்வையிடுகிறார்.... சனியின் பத்தாம் வீட்டு பார்வை மிகச் சிறப்பான பார்வை... தொழிலில் நீங்கள் சாதிக்க நினைத்ததை சாதிக்கலாம்.... புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்... 2026 மே மாதம் முடிந்த பின்பாக குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்... எட்டாம் பாவகத்தில் கடக ராசி பெயர்சியாவது வாழ்க்கை துணையின் மூலமாக பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்... அவர்களுடைய வளர்ச்சி மற்றும் தனபாக்கியத்தின் மூலம் உங்கள் வீட்டில் சுபிட்சம் பெருகும்....
குரு பகவானின் இரண்டாம் இடத்தில் பார்வை பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேர்வதும் வழக்கு வம்புகளில் வெற்றி கிடைப்பதும் உங்களுக்கு சாத்தியமாகும்.... எதிர்காலத்தின் செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு கவலை வேண்டாம்... ராகு கேதுக்கள் நல்ல நிலையில் அமர்ந்திருக்கும் இதே சமயத்தில் தந்தையாரின் உடல் ஆரோக்கியம் சற்று நலிவு வரலாம் அல்லது தந்தையாரை பிரிந்து சில காலங்கள் இருக்க நேரிடலாம்... ஆஞ்சநேயர் வழிபாடு மிகுந்த ஏற்றத்தைக் கொண்டு வரும்... சமயம் கிடைக்கும் போது சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்.... வாழ்த்துக்கள் வணக்கம்....
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்