
தலை விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்பார்கள், அந்த விதியை தீர்மானிப்பது நம் ஜாதகத்தில் நடைபெறும் மாற்றங்கள் தான், இதில் மிக முக்கியமாக கருதப்படுவது தான் இந்த ராகு கேது பெயர்ச்சி.
2025 ஆம் ஆண்டில் வருகின்ற (ஏப்ரல் 26) சனிக்கிழமை அன்று, மாலை 4 மணி 20 நிமிடத்திற்கு ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்பத்திற்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மத்திற்கு பெயர்ச்சியாகி, இந்த ராகு கேது பெயர்ச்சி நடைபெற போகிறது.
எனவே இந்த பெயர்ச்சியினால் 12 இராசிகாரர்களின் வாழ்விலும் என்னென்ன நன்மைகள் நடக்கப்போகிறது. எனக் கணித்துள்ளார்.பிரபல விஞ்ஞான ஜோதிடர் “ஆம்பூர் வேல்முருகன்” ஒவ்வொரு ராசிக்கும் இந்த பெயர்ச்சியால் என்ன மாற்றம் நடக்கும் என்பதை இங்கு தெளிவாக காண்போம்.
விஞ்ஞான ஜோதிடர் “ஆம்பூர் வேல்முருகன்”
தன்னம்பிக்கையும் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 12, 6 சஞ்சரித்த ராகு கேது பகவான் முறையே ராகு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 11 ல் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுதல், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார நிலையில் உயர்வு, திடீர் தன லாபம், எதிர்பாராத அதிர்ஷ்டம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, முக்கிய பிரமுகர்களின் நட்பு, அதன் மூலம் ஆதாயம், மக்களிடையே பிரபலம் அடைதல் ஆகியன உண்டாகும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 5 ல் சஞ்சரிப்பதால் பூர்விக சொத்தால் பிரச்சனை, குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு, குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழிநடத்திச் செல்ல வேண்டியது அவசியம். மனக்குழப்பம், எதிலும் முடிவெடுக்க முடியாத நிலை, காதல் விஷயங்களால் பிரச்சனை ஆகியன உண்டாகும்.
வியாபாரிகளுக்கு: புதிய வியாபார முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தற்போதுள்ள வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கவனமாக கையாளுங்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு: உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் பணியில் பதவி உயர்வு ஊதிய உயர்வு தேடி வரும். அலுவலகத்தில் கால் பாராட்டப்படுவீர்கள்.
மாணவர்களுக்கு: கல்வியில் அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். காதல் போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது
அரசியல்வாதிகளுக்கு: தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. சகாக்களை கவனமாக கையாளுங்கள். மக்கள் செல்வாக்கு உண்டு.
கலைத்துறையினருக்கு: தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
பரிகாரம்: பழனி முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.
மேலும் அறிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்
அன்பால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ரிஷப ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 11,5 ல் சஞ்சரித்த ராகு கேது பகவான் முறையே தற்போது உங்கள் ராசிக்கு 10,4 ல் சஞ்சரிக்கிறார்கள். ராகு பகவான் 10 ல் சஞ்சரிப்பதால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் சிறிது மாற்றங்கள் ஏற்படும். தொழில் ஸ்திரத்தன்மை அதிகரிக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். புதிய முயற்சிகள் கைகூடும். உங்கள் செல்வாக்கு உயரும்.
கேது பகவான் 4 ல் சஞ்சரிப்பதால் தாய் உடல் நலனில் கவனம் தேவை. தாயுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்சனைகள் உருவாகும். உறவுகளால் மனக்கசப்புகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எந்த சூழ்நிலையும் நாசுக்காக கையாளுங்கள்.
வியாபாரிகளுக்கு: புதிய வியாபாரம் முயற்சிகள் கை கூடும். கூட்டாளிகள் மற்றும் பணியாட்களால் ஆதாயம் உண்டு. உங்கள் நிறுவனம் பிரபலம் அடையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: உயர் அதிகாரிகள், சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தேடி வரும். அலுவலகத்தில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
மாணவர்களுக்கு: கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுப்பீர்கள். விளையாட்டுத்துறையிலும் சாதனை படைப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் பாராட்டப்படுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு: தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சகாக்கள் சாதகமாக செயல்படுவார்கள். மக்களிடையே பிரபலமடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு: தற்போதுள்ள வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயரும்.
பரிகாரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமியை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
மேலும் அறிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்
எந்த சூழ்நிலையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 10,4 ல் சஞ்சரித்த ராகு, கேது பகவான் முறையே தற்போது உங்கள் ராசிக்கு 9, 3 ல் சஞ்சரிக்கிறார்கள். ராகு 9 ல் சஞ்சரிப்பதால் தந்தை உடல்நிலை கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர் வழி சொத்து பிரச்சனைகள் உருவாகும். இருப்பினும் மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும்.
கேது பகவான் 3 ல் சஞ்சரிப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். முக்கிய பிரமுகர் அறிமுகம் நட்பும் கிடைக்கும் அதன் மூலம் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. வெளியூரிலிருந்து நீங்க எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். தங்க நகை ஆபரணச் சேர்க்கை உண்டு. அரசால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்ய பாருங்கள். கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு: உத்தியோகத்தில் கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிலும் காலதாமதத்தை தவிர்க்கவும்.
மாணவர்களுக்கு: கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல் கேட்டு நடக்க வேண்டியது அவசியம்.
அரசியல்வாதிகளுக்கு: தலைமையை அனுசரித்துச் செல்லுங்கள். உங்களைப் பற்றிய தவறான வதந்திகள் பரவலாம். சகாக்களை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது.
கலைத்துறையினருக்கு: தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். பொறுமை தேவை.
பரிகாரம்: பரிக்கல்லில் உள்ள நரசிம்மரை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
மேலும் அறிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்
அன்பால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கடக ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 9, 3 ல் சஞ்சரித்த ராகு கேது பகவான் முறையே தற்போது உங்கள் ராசிக்கு 8,2 ல் சஞ்சரிக்கிறார்கள். ராகு பகவான் 8 ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை, உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை, மறைமுக எதிர்ப்புகள், சூழ்ச்சிகள், தீராத பிரச்சனை, சிறு சிறு வாகன விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. எந்த விஷயத்தையும் நாசூக்காக கையாளுங்கள். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
கேது பகவான் 2 ல் சஞ்சரிப்பதால் பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சனை தவிர்க்கலாம். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்பதால் சிக்கனம் மற்றும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் நல்ல மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். இழந்ததை மீண்டும் பெறுவீர்கள். புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். இருப்பினும் எதிலும் ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு: அலுவலகத்தில் இதுவரை இருந்த தடைகள் பிரச்சினைகள் நீங்கும். உங்களுக்கு தொல்லையாக இருந்த உயர் அதிகாரி மாற்றப்படுவார். விரும்பி இடமாறுதல் கிடைக்கும்.
மாணவர்களுக்கு: உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு: இதுவரை இந்த தடைகள் பிரச்சனைகள் நீங்கும். தலைமை உங்களுக்கு நெருக்கமாவார். தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.
கலைத்துறையினருக்கு: தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதியை திங்கட்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
மேலும் அறிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்
கம்பீரமான தோற்றமும், அரசியல் அறிவும் மிகுந்த சிம்மராசி அன்பர்களே,
இதுவரை உங்கள் ராசிக்கு 8,2 ல் சஞ்சரித்த ராகு கேது பகவான் முறையே தற்போது உங்கள் ராசிக்கு 7,1 ல் சஞ்சரிக்கிறார்கள்.
ராகு பகவான் 7 ல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்கு சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சனை தவிர்க்கலாம். தம்பதிகளுக்குள் வெளி ஆட்களின் தலையீட்டை தவிர்க்கவும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
கேது பகவான் ராசியிலே ஜென்மக்கேதுவாக சஞ்சரிப்பதால், எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுங்கள். மனதில் ஒரு மாதிரியான வெறுப்பு, விரக்தி, துறவறம் செல்லலாமா என்ற எண்ணம், எதிர்மறை சிந்தனை, எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். எதிலும் முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். யோகா தியானம் போன்றவற்றில் நாட்டம் செலுத்துவது நல்லது. ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள்.
வியாபாரிகளுக்கு: புதிய வியாபார முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். பொருளாதார நிலை தேவையான அளவு இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.
மாணவர்களுக்கு: கல்வியில் அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். காதல் போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.
அரசியல்வாதிகளுக்கு: தலைமை அனுசரித்துச் செல்வது நல்லது. சகாக்களை கவனமாக கையாளுங்கள். மக்களை அணுகும் போது கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு: தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். சம்பள விஷயங்களில் கவனம் தேவை.
பரிகாரம்: சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள சிங்கப்பெருமாளை ஞாயிற்றுக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
மேலும் அறிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்
மற்றவர்களை எளிதில் கவரும் கன்னி ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 7,1 ல் சஞ்சரித்த ராகு கேது பகவான் முறையே தற்போது உங்கள் ராசிக்கு 6,12 ல் சஞ்சரிக்கிறார்கள்.
ராகு பகவான் 6 ல் சஞ்சரிப்பதால் எதிரிகள் விலகி செல்வார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். நீண்ட காலமாக வங்கி கடனுக்காக முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும். உடல் ஆரோக்கியம் பெறும்.
கேது பகவான் 12 ல் சஞ்சரிப்பதால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாளாக செல்ல வேண்டும் என்று இருந்த புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்ட தூர பயணங்கள் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்கள் உண்டாகும். யோகா மற்றும் தியானம் போன்ற விஷயங்களில் மனம் லயிக்கும். வீண் விரயங்கள் கட்டுக்குள் வரும். இருப்பினும் மருத்துவ செலவினங்கள் உண்டு.
வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. புதிய வியாபாரம் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கண்காணிப்பில் வைத்து வழி நடத்த வேண்டியது அவசியம்.
உத்தியோகஸ்தர்களுக்கு: அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த சூழ்நிலையும் நாசூக்காக கையாளுங்கள்.
மாணவர்களுக்கு: கல்வியில் அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக மருத்துவரை அனுப்புவது நல்லது. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். காதல் விஷயங்களை தவிர்க்க வேண்டிய அவசியம்.
அரசியல்வாதிகளுக்கு: தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. சகாக்களை கவனமாக கையாளுங்கள். மக்களை அணுகும் போது கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு: தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். சம்பள விகிதத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: சிங்கிரி கோவிலில் உள்ள நரசிம்மரை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
மேலும் அறிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்
கலைகளில் ஆர்வம் உடைய துலா ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 6,12 ல் ராகு கேது பகவான் முறையே தற்போது உங்கள் ராசிக்கு 5,11 ல் சஞ்சரிக்கிறார்கள்.
ராகு பகவான் 5 ல் சஞ்சரிப்பதால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகள் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. பூர்விக சொத்து பிரச்சனைகள் உருவாகும். காதல் விஷயங்களில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிலும் நன்கு சிந்தித்து செயல்படுங்கள்.
கேது பகவான் 11 ல் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் நண்பர்கள் மதிப்பார்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. புதிய வியாபாரம் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கண்காணிப்பில் வைத்து வழி நடத்த வேண்டியது அவசியம்.
உத்தியோகஸ்தர்களுக்கு: அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த சூழ்நிலையும் நாசூக்காக கையாளுங்கள்.
மாணவர்களுக்கு: கல்வியில் அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக மருத்துவரை அனுப்புவது நல்லது. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். காதல் விஷயங்களை தவிர்க்க வேண்டிய அவசியம்.
அரசியல்வாதிகளுக்கு: தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. சகாக்களை கவனமாக கையாளுங்கள். மக்களை அணுகும் போது கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு: தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். சம்பள விகிதத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: சிங்கிரி கோவிலில் உள்ள நரசிம்மரை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
மேலும் அறிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்
ஆழ்ந்த அறிவு உடைய விருச்சிக ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 5,11 ல் சஞ்சரித்த ராகு கேது பகவான் முறையே தற்போது உங்கள் ராசிக்கு 4,10 ல் சஞ்சரிக்கிறார்கள்.
ராகு பகவான் 4 ல் சஞ்சரிப்பதால் தாய் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்சனைகள் உருவாகும். வாகன பயணங்களில் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. யோகா மற்றும் தியானம் பயிற்சி செய்வது மன அமைதியை தரும்.
கேது பகவான் 10 ல் சஞ்சரிப்பதால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. சில நேரங்களில் உங்கள் தகுதிக்கு குறைவான பணிகள் செய்ய நிர்பந்திக்கப்படலாம். பொறுமை அவசியம். விரும்பத்தகாத இடம் மாற்றங்கள் வரலாம். எந்த சூழ்நிலையும் ஸ்திரமாக இருந்து கையாளுங்கள்.
வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை வழி நடத்திச் செல்வது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு: உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் பணிகளில் மிகுந்த கவனம் தேவை. எதிலும் திட்டமிட்டு செயல்படுங்கள்.
மாணவர்களுக்கு: கல்வியில் அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை என்ற உடனடியாக மருத்துவரை அனுப்புவது நல்லது. ஆசிரியர் மற்றும் பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டிய அவசியம். அதிவேக பயணங்களைத் தவிருங்கள்.
அரசியல்வாதிகளுக்கு: தலைமை அனுசரித்துச் செல்வது நல்லது. சகாக்களை முழுமையாக நம்ப வேண்டாம். மக்களை அணுகும் போது கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு: தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். சம்பள விகிதத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: தர்மபுரி அருகே அதியமான் கோட்டையில் உள்ள சொர்ணகர்ஷண பைரவரை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
மேலும் அறிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்
அறிவின் களஞ்சியம் விளங்கும் தனுசு ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 4,10 ல் ராகு கேது பகவான் முறையே தற்போது உங்கள் ராசிக்கு 3,9 ல் சஞ்சரிக்கிறார்கள்.
ராகு பகவான் 3 ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகமாக இருக்கும். வெளியூரில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. பொருளாதார நிலை மேம்படும்.
கேது பகவான் 9 ல் சஞ்சரிப்பதால் தந்தை உடல்நிலை கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர் வழி சொத்து பிரச்சினைகள் உருவாகும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. புதிய வியாபாரம் பயிற்சிகள் கை கூடும். உங்கள் நிறுவனம் மக்களிடையே பிரபலம் அடையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தேடி வரும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
மாணவர்களுக்கு: உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு: தலைமையிடம் இருக்கும் அதிகரிக்கும். தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சகாக்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
கலைத்துறையினருக்கு: தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயரும்.
பரிகாரம்: குருவாயூரில் உள்ள குரு பகவானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
மேலும் அறிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்
உழைப்பே உயர்வு தரும் என்பதை உணர்ந்து செயல்படும் மகர ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 3,9 ல் சஞ்சரித்த ராகு கேது பகவான் முறையே தற்போது உங்கள் ராசிக்கு 2,8 ல் சஞ்சரிக்கிறார்கள்.
ராகு பகவான் 2 ல் சஞ்சரிப்பதால் பேச்சில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த விஷயத்தையும் கவனமாக கையாளுங்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரங்களில் ஏற்றத்தாழ்வுகள் வந்து நீங்கும். சிக்கன மற்றும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
கேது பகவான் 8 ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு உதவி செய்ய உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். வியாபாரத்துக்காக முயற்சித்து வந்த கடன் கிடைக்கும். கூட்டாளிகளை கவனமாக கையாளுங்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு: உயர் அதிகாரிகள் மற்றும் சகா ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கான முயற்சிகள் கைக்கூடும். பணிச்சுமை அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு: உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். அன்றைய பாடங்களை அன்றன்றே படிக்க வேண்டியது அவசியம்.
அரசியல்வாதிகளுக்கு: தலைமை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.சகாக்களை கவனமாக கையாளுங்கள். மக்களின் ஆதரவு உண்டு.
கலைத்துறையினருக்கு: தற்போது உள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயரும்.
பரிகாரம்: மதுரையில் உள்ள பதினெட்டாம் படி கருப்பு சாமியை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
மேலும் அறிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை அதிகம் உடைய கும்ப ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 2,8 ல் சஞ்சரித்த ராகு கேது பகவான் முறையே, தற்போது உங்கள் ராசிக்கு 1,7 ல் சஞ்சரிக்கிறார்கள்.
ராகு பகவான் உங்கள் ராசியிலே சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிலும் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். தாய் உடல்நிலையில் கவனம் தேவை. மனதில் ஏதோ ஒரு எண்ணம், கவலை சூழல் போல ஓடிக் கொண்டிருக்கும். உங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். எந்த விஷயத்திலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம்.
கேது பகவான் 7 ல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். கணவன் மனைவிக்குள் வெளி ஆட்களின் தலையீட்டை தவிர்க்கவும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது.
வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் உண்டு. புதிய வியாபார முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் நிறுவனம் மக்களிடையே பிரபலம் அடையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு: கல்வியில் மேன்மை உண்டாகும். ஆசிரியர்கள் பெற்றோர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு: தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். தலைமை உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சகாக்கள் ஆதரவுண்டு.
கலைத்துறையினருக்கு: தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.புதிய வாய்ப்புகள் தேடி வரும். மக்களிடையே பிரபலம் அடைவீர்கள்.
பரிகாரம்: மொரப்பூரில் உள்ள முனீஸ்வரனை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.
மேலும் அறிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்
எந்த நிலையிலும் தன்னிலை மாறாத மீன ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 1,7 ல் சஞ்சரித்த ராகு கேது பகவான் முறையே தற்போது உங்கள் ராசிக்கு 12,6 ல் சஞ்சரிக்கிறார்கள்.
ராகு பகவான் 12 ல் சஞ்சரிப்பதால் வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் கை கூடும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைக்கூடும். சில நேரங்களில் மருத்துவ செலவினங்கள் உண்டு. தேவையற்ற வீண் விரயங்கள் வந்து செல்லும். இருப்பினும் திடீர் பண வரவு உண்டு.
கேது பகவான் 6 ல் இருப்பதால் எதிரிகள் விலகி செல்வார்கள். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். உடல் ஆரோக்கிய மேம்படும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டு.
வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் சுணக்கம் இருந்தாலும் லாபம் உண்டு. புதிய வியாபார முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கவனமாக கையாளுங்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு: உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது . பணிகளில் செலுத்த உடன் செயல்படுங்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான முயற்சிகள் வெற்றி பெறும்.
அரசியல்வாதிகளுக்கு: தலைமையிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.. சகாக்களை கவனமாக கையாளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினருக்கு: தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். சம்பள விகிதத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்
மேலும் அறிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்