

அன்பார்ந்த மாலை முரசு வாசகர்களே திருமணம் தள்ளிப் போடுவதற்கு ஜாதக ரீதியாக பல காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமாக செவ்வாய் தோஷத்தை அதிகமாக பார்ப்பார்கள். பிறகு ராகு கேது தோஷத்தையும் பார்ப்பார்கள். குறிப்பாக 10 பொருத்தத்தை பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என்ற அமைப்பு காலம் காலமாக தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வருகிறது. பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்களுக்கெல்லாம் விவாகரத்து நடக்கவில்லையா அல்லது அவர்கள் அனைவருமே நன்றாக இருக்கிறார்களா என்றால் அதிலும் பெரிய சந்தேகமே. சரி வாருங்கள் விரைவில் திருமணம் நடப்பதற்கு என்ன பரிகாரம் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
ஜோதிடத்தில் பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்கவில்லை என்றால் அதிகமான கேள்விகள் எழும் உறவினர்களால் நண்பர்களால் சுற்றத்தாரால் என்று அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்படுவார்கள். ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் செவ்வாய் தான் கணவர் காரகன். ஏழாம் அதிபதி எந்த நிலைமையில் இருந்தாலும் ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் கணவர் காரணமான செவ்வாய் நல்ல வலிமையோடு அல்லது மற்ற சுப கிரகங்களால் பார்க்கக்கூடிய நிலையில் இருந்து விட்டாலே போதும் பாதி பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடும்.
செவ்வாயுடன் ராகு சேர்க்கை.... ஒரு ஜாதகத்தில் செவ்வாயுடன் ராகு சேர்த்து விட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகாது அப்படியே விரைவில் திருமணம் நடந்தாலும் அந்த வாழ்க்கை வெற்றிகரமான திருமண வாழ்க்கையாக இருக்காது... குருவின் பார்வையோ சுப வீட்டிலோ அல்லது கணவர் வெளிநாட்டிலோ தூர தேசத்திலோ வேலை நிமித்தமாகவோ மற்ற காரியங்களுக்காகவோ.... பெண்ணை விட்டு கணவர் தள்ளி இருந்தால் தோஷம் வராது.... இல்லையென்றால் செவ்வாவுடன் ராகு சேர்ந்த பெண் ஜாதகத்தில் திருமண தடைகளையும் தோஷங்களையும் நிச்சயம் ஏற்படுத்துவார்.... அதற்கான பரிகாரமாக முருகன் கோவிலுக்கு சென்று சர்ப்ப சாந்தி செய்து கொள்ள வேண்டும்...
செவ்வாயுடன் கேது சேர்ந்த ஜாதகைக்கு நிச்சயமாக திருமண தோஷம் ஏற்படும். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படுவது பெரிய பெரிய பிரச்சனைகளில் சிக்குவது போன்ற காரியங்களில் ஈடுபடலாம். அதே போல மனதிற்கு பிடித்த கணவனாக இல்லாமல் போகலாம். கணவர் ஒரு மூளைக்கு மனைவி ஒரு மூளைக்கு என்று தள்ளி இருக்கலாம். செவ்வாயுடன் கேது சேர்ந்த ஜாதகத்திற்கு பெரும்பாலும் பரிகாரம் என்று பார்த்தால் வீட்டில் விநாயகரை வைத்து வழிபட வேண்டும் பூஜை அறையில்.
பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் அதிபதி கேட்டிருந்தால் தாமத திருமணம் ஏற்படும். ஜோதிடரை அணுகி எந்த கிரகம் தாமதத்தை ஏற்படுத்துகிறது என்று பார்த்து அதற்கு 9 வாரங்களுக்கு தொடர்ந்து அந்த தெய்வத்திற்கு விளக்கம் போட வேண்டும். என்னிடம் சிலர் கேட்கிறார்கள் பரிகாரம் செய்தால் உடனே நமக்கான பிரச்சனை தீர்ந்து விடுமா. அல்லது விளக்கு போடுவதன் மூலம் திருமணம் ஆகி விடுமா என்று என்னுடைய பதில் விதி என்பது ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்று. புதியதாக நாம் எதையுமே செய்வதில்லை ஏற்கனவே ஜாதகத்தில் என்ன கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை தான் நடக்கும் ஆனால் எப்பொழுது நடக்குமோ அப்பொழுது உங்கள் கண்களுக்கு இப்போது நீங்கள் படிக்கின்ற இந்த எழுத்துக்கள் தெரியும். ஆகையால் பெரிதாக நீங்கள் கவலைப்பட வேண்டாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் சொன்னது போல எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. என்ற ஒற்றை வரியை பயன்படுத்தி நம் வாழ்க்கை நடத்தி செல்லலாம்.
ஆண்களுக்கான கிரகமாக சுக்கிரனை எடுத்துக் கொள்ளலாம். ஜாதகத்தில் சுக்கிரன் வலிமை இழந்து காணப்பட்டாள் நிச்சயமாக திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும். அவர்களுக்கு என்ன பரிகாரம் செய்தாலும் பெரிதாக எடுபடாது. சுக்கிரனுடன் ஜாதகத்தில் ராகு சேர்ந்திருந்தால் இருதார அமைப்பு உண்டு என்று சொல்லுவார்கள். ஆனால் ஆண் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கும் ஆண் அந்த பெண்ணை விட்டு பிரிந்து வேலை நிமித்தமாகவோ அல்லது வெளியூர் வெளிநாடு போன்றவற்றில் வசித்தாலோ அதிகமான தொடர்பு இல்லாமல் இருந்தாலும் பிரிவு ஏற்படுவதில்லை. அதே போல சுக்கிரனுடன் கேது சேர்ந்திருந்தால் பெரிய அளவில் தோஷத்தை ஏற்படுத்தி விடுகிறது. திருமணம் நடந்து உடனடியாக அந்த திருமணம் ரத்த ஆவது அல்லது திருமணத்திற்கு முன்பாக தடை போடுவது. இதுவும் ஒரு காரணங்களுக்காக இந்த திருமணம் நின்று போவது போன்றவை ஏற்படலாம்....
மேலே சொன்ன காரணங்கள் பெரும்பாலான ஜாதகங்களில் இருக்காது. பெண் ஜாதகத்தில் செவ்வாயுடன் ராகுவோ அல்லது கேதுவோ சேர்ந்திருந்தால் தோஷம் என்று கூறினேன். அதேபோல ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு கேது உடன் சேர்ந்து இருந்தால் தோஷம் என்று கூறினேன். இதெல்லாம் தவிர்த்து லக்னத்திற்கு ஏழாம் அதிபதி கேட்டிருந்தாலோ அல்லது ஏழில் ராகுவோ கேதுவோ இருந்தாலோ. அருகாமையில் இருக்கக்கூடிய கோவில்களுக்கு சென்று சர்ப்பங்களை வழிபட்டு சர்ப்ப சாந்தி செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நிச்சயமாக உங்களுக்கு தள்ளிப்போன திருமணம் விரைவில் கைகூடும்....
அடுத்ததாக ஏழாம் இடத்தை மட்டும் தான் குடும்ப வாழ்க்கைக்கு பார்க்க வேண்டுமா என்றால் இல்லை. இரண்டாம் இடம் மிக முக்கியமானது. ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் இடம் என்று சொல்லக்கூடிய குடும்ப ஸ்தானத்தில் ராகுவோ அல்லது கேதுவோ அமர்ந்திருந்து இரண்டாம் அதிபதி வழி மிழந்து காணப்பட்டால் அவருக்கு நிச்சயமாக திருமணத்தில் பிரச்சனைகள் ஏற்படும். சில கிரகங்களுக்கு பரிகாரம் என்று சொல்ல முடியாது. காரணம் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டால் அது விவாகரத்தில் முடியும் என்பதால். காலம் கடந்த திருமணம் சிறந்த இயற்கை தீர்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை....
அனைத்து திருமண தடைக்கும் விநாயகர் பெருமானே ஒன்பது வாரங்கள் வணங்கி சந்தித்து விளக்கேற்றி வந்தால் பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும்..
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.