திருப்பதி கோவிலுக்கும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்னாள் ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த ஆலயம் கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில், ஆதிதிருவரங்க அரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாதர் கோவிலாக விற்றீருக்கிறது
இந்தியாவின் முதல் விஷ்ணு ஆலயமான இக்கோவில் சோழர்களால் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுப்பபட்டு பின்னர் விஜயநகர பேரரசுகளால் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் கலை அம்சமுள்ள சிலைகளோடு காணப்படுகிறது. வெறும் கோவிலாக மட்டுமல்லாமல் விலைப் பயிர்களை பாதுகாக்கும் வகையில் நெற்களஞ்சியங்களும் இதில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்புற்குரிய ஒன்றாகும்.
சோமுகன் என்ற அசுரன் பிரம்மாவிடம் இருந்து வேதங்களை கைப்பற்றி அதனை கடலுக்குள் மறைத்து வைத்த நிலையில் விஷ்னு பகவான் மீன் வடிவு எடுத்து வேதங்களை மீட்டார். ஐந்து தலைக் கொண்ட ஆதிசேஷனின் மீது சயன நிலையில் இருக்கும் பெருமாள், ஸ்ரீதேவி மடியில் தலையும், பூமாதேவி மடியில் காலையும் வைத்த நிலையில் பிரம்மாவிற்கு வேதங்களைப் போதித்த படி பிரம்மாண்ட தோற்றமாய் காட்சியளிக்கிறார்
தேவ சிற்பியான பிரம்மாவால் 29 அடியில் நவ பாசனங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட பெருமாள் சிலை என்பதால் மூலவருக்கு தைலக்காப்பு அலங்காரம் மட்டுமே செய்யப்படுகிறது
கோவிலின் உள்ளே மூலவர்கள் மட்டுமல்லாமல் தாயார் தனி சன்னதி கொண்டும் ஆஞ்சநேயர், ஆழ்வார் சன்னதிகளும், அழகிய கலை சிற்பங்களும் அமைந்து காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும் காட்டை சார்ந்த பகுதியில் முழு முதற்கடவுள் 'கிருஷ்ணர்' இருப்பதனால், இத்திருத்தலத்தில் கிருஷ்ணர் ஒரு கையில் வெண்ணெயும் மற்றொரு கையில் உரியோடும் பலி பீடத்திற்கு பின்புறம் மேல் மாடியில் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கும் அரூள்தருகிறார்
நாடாண்ட அரசர்கள் கோவில்களை, மனிதனை நல்வழிப்படுத்தும் இடமாக மட்டுமல்லாமல் பசி தீர்க்கும் அன்னதான கூடங்களாகவும் நெற்களஞ்சியங்களாகவும் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதற்கு இக்கோவில் ஒரு சாட்சியாக விளங்குகிறது. கோவிலினுள் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான நெற்களஞ்சியம் மூன்று அடுக்குகளாக உருவாக்கப்பட்டு அதில் சேகரிக்கப்பட்ட நெல், வரகு, கேழ்வரகு, கம்பு மாதிரியான தானியங்களை வறட்சி காலத்திலே மக்களுக்கு அளித்து வந்துள்ளார்கள். கால சூழ்ச்சியில் பராந்தக சோழனால் கட்டப்பட்ட இந்த களஞ்சியம் இன்று கவனிப்பாறற்று சிதைந்து போய் காணப்படுகிறது.
இக்கோவிலில் மற்றொரு சிறப்பாக இசை கற்களால் உருவாக்கப்பட்ட ராமபிரானின் சிலை காணப்படுகிறது. கல்லிலே கலை வண்ணம் படைத்தான் என்பது போல இசை கற்களை கண்டுபிடித்து அதனுள் சிலையை வடித்துள்ளார்கள் அக்கால சிற்பிகள்.
பிரம்மனுக்கு இத்தளத்தில் பெருமாள்வேதங்களை உபதேசிக்கும் காட்சியைக் கண்டால் வேலையில்லாதவர்களுக்கு தகுந்த வேலை கிடைப்பதாக என நம்பப்படுகிறது. மேலும் இங்கு வந்து வழிபாடு நடத்தினால் திருமண யோகமும் குழந்தை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரமும் கிடைப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர் இதனால் ஆண்டுதோறும் முகூர்த்த காலங்களில் பிரார்த்தனைகள் நிறைவேறி பல திருமணங்கள் இங்கே நடந்தேறுகிறது.
தெய்வீக தல புராணங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் தாங்கி நிற்கின்ற இந்த கோவிலில் 200 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தேர் செய்யப்பட்டு நேற்று திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது , இதில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கங்களை எழுப்பி வடம் பிடித்து இழுத்து மகிழ்ச்சியைடைந்தனர்
பல சிறப்பான அதிசயங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் தாங்கி நிற்கின்ற இந்த கோவிலுக்கு செல்வோம் நவ பாசன பெருமாளை தரிசிப்போம் நலம் பெறுவோம்
மாலை முரசு செய்திகளுக்காக சங்கராபுரம் செய்தியாளர் லோகுவுடன், கலைமாமணி நந்தகுமார்