தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்மாதிரியாகவும், சிவபெருமான் போர் புரிந்த எட்டு அற்புதத் தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் திருக்கோவில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் என்ற பெயரோடு தெய்வீக ஒளிவீசி வருகிறது.
மேலும் சில ஆன்மீக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
மனிதர்கள் தேவர்கள் அசுரர்கள் என இந்த உலகில் ஆணவத்தோடு அழியும் அத்தனை உயிர்களையும் அடக்கி ஆளும் ஈசனின் வீரத்தை வெளிப்படுத்தும் மூன்றாவது ஆலயமாக இக்கோவில் திகழ்ந்து வருகிறது
தாருகாட்சன், கமலாட்சன், வித்யும்மாலி எனும் மூன்று அசுரர்கள், பிரம்மாவிடம் தங்களை யாராலும் வெல்ல முடியாதபடி வரம் பெற்று உலக உயிர்களை மட்டுமல்லாது தேவர்களையும் அடிமைப்படுத்தி சிறை படுத்தினர். இந்த மூன்று அசுரர்களையும் உலகை ஆளும் சிவபெருமான் தன் சிரிப்பொலியால் பஷ்மாக்கிய தளம் தான் இந்த புனித தலம் என்று வரலாறுகள் புகழ்ந்துறைக்கின்றன.
மேலும் படிக்க: பொதுவாக யாரும் கண்டதில்லை! இனியும் உயிர்த்திருக்கும் கொல்லிமலையில் எட்டுக்கை அம்மன்
காலங்களை வென்று பல அற்புதமான கலைச் சிற்பங்களை தன்னுள் தாங்கி இருக்கும் இந்த கோவில் கிழக்கு நோக்கி 7 இராஜ கோபுரங்கள், ஏழு கலசங்கள், பதினாறுக்கல் மண்டபங்களுடன் பிரம்மாண்டமாய் காட்சி தருகிறது.
பல்லவ மன்னார்களால் கட்டிட கலையில்புதுமைகள் படைத்து, அதில் எண்ணற்ற சிலைகளை வடித்து கட்டப்பட்ட இக்கோவில் சோழமன்னர்களாலும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது
இக்கோவிலில் அருவமாகவும் உருவமாகவும் காட்சி தரும் சிவபெருமானின் கர்ப்பக்கிருகம் தேர்போலப் பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டு, நிழல் பூமியில் சாயாதபடி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சிவனும் விஷ்ணுவும் ஒன்றாய் அவதரித்த சங்கரநாராயணன் ஆலயம்
கோபுர வாயிலில் இருபக்கமும் நாட்டியக் கலையின் 108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் பெண்களின் அழகிய சிற்பங்கள் வியப்பை ஏற்படுத்துவதோடு திறந்த வெளி முற்றத்தில் தென்பக்கம் சங்கர தீர்த்தமும், வடப்பக்கம் ஐந்து அடி உயரமுள்ள பத்மாசனக் கோளத்தில் காணப்படும் புத்தர் சிலையும் உள்ளது.
ராஜராஜ சோழன் இக்கோவிலின் கோபுர அழகை கண்டு இதேபோன்று தஞ்சை பெரிய கோவிலின் கோபுர விமானத்தை அமைத்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
உலகிலேயே முதல் முதலில் இறைவனுக்கு தேர் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற்ற கோவிலாக இது கருதப்படுவதோடு முழு முதல் கடவுளான விநாயகர் பெருமானுக்கு சூரத் தேங்காய் உடைக்கும் வழக்கமும் இத்திருக்கோவிலிருந்து தான் உருவானதாக தல வரலாறுகள் தெரிவிக்கின்றன.
சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் சூலை நோயால் துண்பட்டிருந்த போது இக்கோவிலில் உள்ள சிவபெருமானை தரிசித்து, திருநீற்றை அணிந்து, புனித தீர்த்தத்தை அருந்திய போது அவரது வயிற்று வலி தீர்ந்ததாக தல பெருமைகள் கூறுகின்றன.
மேலும் படிக்க: நிலப்பிரச்னைகள் தீர்க்கும் திருச்சுழி பூமிநாதர் கோவில்
திருநீற்றின் பெருமைகளை உலகுக்கு உணர்த்திய இக்கோவிலில் இன்றளவும் தீராத வயிறு வலி பிரச்சனைகளால் வருபவர்களுக்கு தீர்த்தம் கொடுக்கப்பட்டு நலமடைவதாக கூறுகின்றனர்.
தென்மேற்கு மூன்று திசைகளை நோக்கி நான்கு முகங்களும் ஒருமுகம் மேல் நோக்கியும், பல்லவர் காலத்துப் பஞ்சமுக லிங்கம் கோவிலில் அமையப்பெற்றது ஒரு சிறப்புக்குரிய ஒன்றாகும்.
திருஞானசம்பந்தருக்கு திருநடன காட்சியருளியது, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு திருவடி அளித்தது, அப்பரின் சூலைநோய் நீக்கியது, என எண்ணற்ற அதிசயங்களை நீகழ்த்திகாட்டிய சிவபெருமான் இத்தலத்திற்கு வருவோருக்கு முன் ஜென்ம பாவங்களை நீக்கி சிறந்த வாழ்வளிப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மாலைமுரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக கடலூர் செய்தியாளர் நாகமுத்துவுடன் கலைமாமணி நந்தகுமார்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்