
அன்பார்ந்த வாசகர்களே வெளிநாட்டு யோகம் என்பது நாம் பிறந்த இடத்தில் இருந்து வேறு மாநிலத்திலோ அல்லது வேறு நாட்டிலோ வசிப்பதை குறிக்கும்... நமக்குத் தெரிந்த நபர்கள் இங்கிருந்து வெளிநாட்டிற்கு சென்று சில காலம் தங்கி இருந்து மீண்டும் தாய் நாட்டிற்கு திரும்புவதை பார்த்திருப்போம்... நம்முடைய குடும்பத்திலிருந்து இப்படியாக யாரோ ஒருவரோ அல்லது பலரோ அயல்நாட்டுக்கு சென்று கூடியது எதை பார்த்திருப்போம்...
இரண்டு வகையாக வெளிநாட்டிற்கு செல்வதை பிரிக்கலாம் ஒன்று தற்காலிகமாக சில வருடங்கள் மட்டும் சென்று இருந்து விட்டு தாய் நாட்டிற்கு திரும்புவது அல்லது இரண்டாவது வகை நிரந்தரமாக குடியேறுவது... இரண்டிற்குமே எந்த கிரகம் வழிவகுக்கும் என்றால் ராகுவை குறிப்பிடலாம்.. பொதுவாக உபய ராசிகள் என்று சொல்லக்கூடிய மீனம் மிதுனம் கன்னி தனுசு போன்ற ராசிகள் அயல் நாட்டிற்கு செல்லக்கூடிய ராசிகளாக இருந்தாலும் கூட ரிஷப ராசி கடக ராசி, கன்னி ராசி கும்ப ராசி போன்றவை வேறு வகைகளில் வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகக்கூடிய அமைப்பை கொண்டவையாக இருக்கிறது...
பிறந்த ஜாதகத்தில் குருவோடு ராகுவோ அல்லது செவ்வாயோடு ராகு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு பெற்றிருந்தால் நிச்சயமாக அவர்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்வதை தவிர்க்க முடியாது... அல்லது பிறந்த ஊரிலிருந்து வெளியூருக்கு போய் வசிப்பதையும் அங்கேயே தங்கி சம்பாதிப்பதையும் பார்க்கலாம்... எவ்வளவு தூரம் ஒருவர் கடல் கடந்து செல்வார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது மீன ராசி கடல் கடந்து செல்லும் ஒரு ராசி மீன ராசியில் அதிபதியான குரு பகவான் லக்கினத்திற்கு எட்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால் அவர் தூர தேச பிரயாணத்தை மேற்கொள்வார்....
மேஷம் சிம்மம் விருச்சகம் துலாம் மகரம் போன்ற ராசிகள் வெளிநாட்டுக்கு சென்று கடுமையாக உழைத்து பணம் பொருள் ஈட்டி குடும்பத்தை காப்பாற்றுவதையும் நாம் பார்த்திருக்கிறோம்... முதலில் ஒருவருக்கு அயல்நாடு செல்ல வேண்டுமென்றால் அது குறித்தான யோசனைகள் வரவேண்டும் அப்படி யோசிப்பது நடைமுறையில் நடக்க வேண்டும் அதற்கு மற்றவர்களின் உதவியும் வேண்டும் திடீரென்று ஒருவரால் சம்பந்தமே இல்லாமல் அயல் நாட்டில் சென்று வசிக்க வாய்ப்பு இருக்காது... அதுவே அவர்கள் உறவினர்களை பார்த்தோம் நண்பர்களை பார்த்தோம் அவர்களின் உதவியோடு அயல்நாட்டிற்கு செல்வது அல்லது வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்து அவர்களை அழைத்து செல்வது என்று பல கட்டமாக இருந்தாலும் அவை அனைத்துமே நம்முடைய ஜாதகத்தில் இருந்தாக வேண்டும்...
ராகுவோடு சந்திரன் இணைந்து இருந்தாலும் அவர்கள் கடல் கடந்து பயணத்தை மேற்கொள்வார்கள் வானத்தில் நீங்கள் பறக்க வேண்டும் என்றால் அதற்கு ராசியின் உதவிகள் தேவைப்படும் குறிப்பாக கும்பம் மிதுனம் துலாம் போன்ற காற்று ராசிகள் நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு பயணம் செய்ய ஏதுவாக அமையும்...
பிறக்கும்போது ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தோடு ஏதேனும் ஒரு வகையில் இலக்கணமோ ராகு தொடர்பு பெற்றால் அவர் நிச்சயம் ஒரு காலகட்டத்தில் அயல் நாட்டிற்கு சென்று வருவார்... அதே போல செவ்வாயோடு ராகு தொடர்பு பெற்றிருந்தாலும் அவர் நீண்ட தூர பயணத்தில் ஈடுபட்டு இருப்பார்...
உங்களுடைய ஜாதகத்தில் ராகுவை ஆக்டிவேட் செய்ய வேண்டுமானால் நீங்கள் ராகு கேதுக்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று வலது புறம் இருந்து இடது புறமாக ஒன்பது முறை சுற்றிவர வேண்டும் அப்படி சுற்றி வந்தால் நிச்சயம் ராகு கேதுக்கள் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பார்கள் அதுவும் குறிப்பாக ராகு காலத்தில் நீங்கள் அந்த பூஜையை செய்ய வேண்டும் பூஜை என்பது ஏதோ ஒரு கடுமையான மந்திரத்தை கூற வேண்டும் என்று அல்ல மனதார தெய்வங்களை நினைத்தாலே போதும் அவர்கள் உங்களுக்கு என்ன தர வேண்டும் என்பதை கொடுத்து விடுவார்கள் ஐந்து தலைகள் உள்ள நாகங்கள் நிச்சயமாக கோவில்களில் ஆலமரம் அரசமரம் அல்லது வேப்பமரம் போன்ற மரங்களுக்கு அடியில் வைத்திருப்பார்கள் இப்படியான நாகங்களுக்கு பாலபிஷேகம் பன்னீர் அபிஷேகம் மஞ்சள் குங்குமம் மற்றும் விளக்கு ஏற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலே அவர்களுடைய மனம் குளிர்ந்து நிச்சயம் உங்களுக்கான அயல்நாட்டு வழியை திறப்பார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை...
உள்ளூரில் வேலை இருக்கும்பொழுது வெளிநாட்டிற்கு செல்வது ஏன் என்ற கேள்விகள் சிலருக்கு எழலாம் ஆனால் ஒருவர் இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு மாறிட அவருக்கு சொத்துக்கள் சேரும் என்பதோ அல்லது நல்ல வாழ்க்கை அமையும் என்பது ஜாதகத்தில் இருந்தால் அதை நம்மால் எப்படி தடுக்க முடியும் அப்படித்தான் நம்மளுடைய தேசத்தந்தை மகாத்மா காந்தியும் ஒரு நம் இந்திய நாட்டை விட்டு தென்னாப்பிரிக்காவிற்கு படிக்க சென்றார் அதேபோல பல தேச தலைவர்கள் அயல் நாட்டிற்கு சென்று வந்திருக்கிறார்கள் இப்படியாக நீங்கள் எடுத்துக் கொண்டால் பிராப்தம் இருந்தால் மட்டுமே அயல்நாட்டுக்கு செல்ல முடியும்...
அனைத்து ஆசிரியர்களுக்கும் அயல்நாடு செல்லும் யோகம் உள்ளது ஆனால் அவர்கள் எவ்வளவு காலம் தங்குவார்கள் என்பதை அவர்களின் பிறந்த கால ஜாதகத்தை வைத்து துல்லியமாக நம்மால் கூற முடியும் வாழ்க வளமுடன்..
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.