எந்த ராசியினருக்கு காதல் கை கூடும்..?

தாயுள்ளம் கொண்டவராக நீங்கள் விரும்புபவரை பார்த்துக் கொள்வீர்கள் இரண்டாம்
எந்த ராசியினருக்கு காதல் கை கூடும்..?
Published on
Updated on
2 min read

அன்பார்ந்த மாலை முரசு வாசகர்களே... பெற்றோர் பார்த்து திருமணம் செய்வது... நாமாகவே பார்த்து காதலித்து திருமணம் செய்வது... பெற்றோர் இல்லாதவர்களுக்கு உறவினர்கள் பார்த்து திருமணம் செய்து வைப்பது போன்ற காரியங்கள் நம்மிடையே இருக்கின்றன... ஆனால் இவையெல்லாம் தாண்டி இருவர் இளம் வயதில் காதலித்து வெற்றிகரமாக திருமணம் வரை அதை கொண்டு போய் நல்லபடியான வாழ்க்கை வாழ்ந்து சிறப்பான ஜோடி என்று பெயர் எடுத்து மதிப்பது உண்மையாகவே ஒரு கொடுப்பினை தான்.

பொதுவாக அனைத்து ராசியினருக்கும் காதல் கைகூடும் என்றாலும் கூட... சில ராசியினருக்கு இயல்பாகவே காதலில் வெற்றி பெறும் சக்தி அமைந்து விடுகிறது... யாருக்கெல்லாம் என்பதை பற்றி பார்ப்போமா.

ரிஷப ராசி

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே சந்திரன் உச்சமடைகிறது உங்கள் ராசியில் இயல்பாகவே நீங்கள் கவிதை எழுதக் கூடியவர் சட்டென்று யோசிக்காமல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் உங்களுக்கு காதலின் ஸ்தான அதிபதியாக புதன் வருவார். அதுவும் கன்னி ராசி பாருங்கள் ஜோதிடத்தில் காதலை குறிக்கக் கூடிய கிரகம் புதன் நீங்கள் விரும்புபவரை தேடி போகவே தேவையில்லை உங்களைத் தேடி அவர் உங்கள் முன்னால் வந்து நிற்பார்... புதன் நல்ல நிலையில் ஜாதகத்தில் இருந்து விட்டால் உண்மையிலேயே நீங்கள் காதலிக்கும் நபரையே திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு உங்கள் ராசிக்கு வலிமை இருக்கிறது... தாயுள்ளம் கொண்டவராக நீங்கள் விரும்புபவரை பார்த்துக் கொள்வீர்கள் இரண்டாம் வீடும் உங்களுக்கு புதன் வீடாகத்தான் வருகிறது எனவே காதலின் அதிபதியான புதன் பகவானே ரிஷப ராசிக்கு இரண்டு மற்றும் ஐந்தாம் வீட்டு ஆதிபத்தியத்தை கொண்டிருப்பதால் நிச்சயமாக ரிஷபத்திற்கு பிறப்பின் ஜாதகத்தில் ஐந்தாம் பாவகத்தில் ராகு கேது இல்லாமல் அந்த வீட்டு அதிபதி புதன் நல்ல நிலையில் அமர்ந்து இருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு காதல் வெற்றி அடையும்....

மிதுன ராசி

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே பாருங்கள் ராசி அதிபதி புதன் காதலுக்கு அதிபதி சுக்கிரன் 2 கிரகமே காதலில் விழ வைத்து விடும் உங்களை... காதலிக்கும் போதே பாக்கெட்டில் இருந்து பணத்தை தண்ணியாக செலவு செய்வீர்கள் பிடித்தவர்களுக்கு அவர்கள் கேட்டதை வாங்கி கொடுத்து வாங்குவீர்கள் உங்களுடைய பேச்சை கண்டு மயங்காதவர்கள் இருக்க முடியாது அருமையாக சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றார் போல் பேசி மயக்குவீர்கள்... ஐந்தாம் அதிபதி துலாம் ராசியாக வருவதால் நீங்கள் சொன்ன வேலையை சட்டென்று செய்யக்கூடிய காதலியோ அல்லது காதலரோ கிடைக்க வாய்ப்பு உண்டு... ஆனால் அவர்களிடத்தில் வீம்பு அதிகமாக இருக்கும் தைரியம் அதிகமாக இருக்கும்... முறைப்படி நீங்கள் உங்களுடைய காதலை குறித்து இரு வீட்டார் பெற்றோரிடமும் தெரிவித்து அதன் பிறகு சம்மதத்தைப் பெற்று வாழ்வில் உங்களுடைய காதலை வெற்றிகரமாக திருமணம் வரை கொண்டு போக வாய்ப்பு உண்டு....

கடக ராசி

ஒரு தாய் உள்ளம் கொண்ட ராசி உங்கள் ராசி... நேசிப்பவரை பற்றி சதாசி சிந்தித்துக் கொண்டே இருக்கும் தன்மை உடையவர் காதலித்து விட்டால் உங்களுடைய வாழ்க்கைத் துணையை பற்றி சதா யோசித்துக் கொண்டே இருப்பீர்கள் அவர் சாப்பிட்டாரா அவர்கள் சாப்பிட்டார்களா ? எப்பொழுது தூங்கினார்கள் எப்பொழுது எழுந்தார்கள் என்று தொடர்ந்து விரும்புபவரை பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்... கடக ராசிக்கு ஐந்தாம் இடமாக செவ்வாய் வீடு வருகிறது சற்று கோபக்கார பார்ட்னர் தான் என்றாலும் கூட கோபம் இருக்கும் இடத்தில் தானே குணம் இருக்கும் மெல்ல மெல்ல உங்களுடைய காதலைப் பற்றி புரிந்து கொண்டு உங்களிடம் பணிவாக பிற்காலத்தில் நடந்து கொள்ள வாய்ப்புண்டு...

கன்னி ராசி

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே கன்னி ராசி என்றாலே சுற்றி பெண்கள் தான் இருப்பார்கள் என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் ஒருவகையில் அது உண்மையும் கூட காதல் மன்னன் என்று யாரை அழைப்பார்கள் நவகிரகத்தில் புதனை தான் அப்படிப்பட்ட புதன் பகவானே உங்களுடைய கன்னி ராசியில் வந்து தான் உச்சமடைகிறார்... அப்படியானால் எவரையும் எளிதில் பேசிய கவுத்து விட முடியும்... வாழ்க்கையில் நீங்கள் சாதிக்க வேண்டிய விஷயங்கள் அதிகப்படியாக உள்ளன குறிப்பாக திருமணத்திற்கு பிறகு உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும் நீங்கள் இடம் விட்டு இடம் போய் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அப்படி இடம் மாறும் பொழுது நல்ல நிலையில் வாழ்க்கையும் உயரும்...

மீன ராசி

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீடு கடகமாக வருகிறது சதா உங்களைப் பற்றி சிந்தித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் நல்ல வாழ்க்கை துணை அமையும் அதே பட்சத்தில் காதலுக்கும் பஞ்சமில்லை சிறு வயதிலேயே காதல் வந்துவிடும்.. காரணம் நீங்கள் நேசிப்பவர் உங்களை அதிகப்படியாக நேசித்துக் கொண்டே இருப்பார் அவரை எப்படி உங்களால் தவிர்க்க முடியும்.... நீங்களும் அவருடைய காதலின் விழுந்து விடுவீர்கள் ஐந்தாம் பாவகம் கடக ராசியாக வருவதா அதை பார்த்தால் உங்களுக்கு காதலுக்கும் அதிபதி... தேய்பிறை வளர்பிறை போன்று உங்கள் காதலும் ஒரு கட்டத்தில் வளர்பிறையாக வளர்ந்து நிற்கும் அதே சமயத்தில் தேய்பிறையாகவும் உங்களை சங்கடப்படுத்தும்.... சங்கடப்படுத்துகின்ற காலத்தில் பொறுமையாக போய் அதை திருமணத்திற்கு உங்களை தயார்படுத்தும் அளவிற்கு உறவு பந்தம் மிக வலிமையாக இருந்தால் சந்தோஷம்தான் பராசக்தியை வணங்குங்கள் வெற்றி நிச்சயம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com