17 ஆண்டு கால உலகக் கோப்பை கனவை பூர்த்தி செய்தது இந்திய கிரிக்கெட் அணி

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பையின் அறிமுகத் தொடர் பிறகு 17 ஆண்டுகள் கழித்து 2024 உலகக்கோப்பை இந்திய அணி வென்றுள்ளது
17 ஆண்டு கால உலகக் கோப்பை கனவை பூர்த்தி செய்தது இந்திய கிரிக்கெட் அணி

2013 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது...

அதற்குப் பிறகு பல இரவுகள் இந்தியர்களின் கனவுகள் சிதறடிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு முறை உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று போட்டிகளுக்கு இந்தியா தகுதி பெரும்போது இந்த முறை கோப்பை நமக்கு என கோடிக்கணக்கான இந்தியர்கள் கொண்ட நம்பிக்கை ஒவ்வொரு முறையும் வீணடிக்கப்பட்டது

2021 டி20 உலக கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டி என இந்திய அணி கைவிட்ட கோப்பைகள் பல...

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த இந்திய அணி நிச்சயம் 20 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது

இந்திய அணியின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது அணியில் இடம் பெற்ற பல்வேறு வீரர்கள் குறித்த விமர்சனங்கள் இணையம் முழுதும் நிரம்பக் கிடந்தது

இடையில் வந்த சிவம் துபே தனது ஸ்டைலில் பந்துகளை பௌண்டரி மேல் பறக்க விட்டார்

ஐ பி எல் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அவரது வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல்கள் அனைத்திர்க்கும் இந்த வெற்றி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது

இப்படி இந்திய அணியின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் ஒவ்வொன்றையும் வீசி எறிந்து உலகக்கோப்பை தாயகம் கொண்டு வந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி

தோனிக்கு பிறகாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய அணியின் கணக்கச்சிதமான வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்தத் போட்டியோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட க்கும் இது கடைசி போட்டி என்பதால் கோப்பையை வாங்கி அவரிடம் கொடுத்து அவருக்கு ஃபேர்வல் கொடுத்திருக்கின்றனர் இந்திய அணி வீரர்கள்

ஒவ்வொரு முறை இந்தியா பைனல் தோற்கும் போதும் மன உளைச்சல்கள், எத்தனையோ அழுகைகள் என தூக்கம் தொலைந்த இரவுகள் கடந்து ஒரு இரவு இந்தியர்கள் அனைவரும் நிம்மதியாக உறங்க எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 11.

அடுத்தடுத்து வரும் உலகக் கோப்பை போட்டிகளில் இளம் தலைமுறை வீரர்கள் சாதித்து

இந்திய அணியின் கொடியை உயர்த்த வேண்டும் என்பது அனைவரது எண்ணம்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com