
2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியதை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் ஊர் திரும்பியுள்ளனர். அதன்படி டி 20 போட்டியில் விளையாடிய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா துபாயில் இருந்து கடந்த ஞாயிற்று கிழமை இரவு மும்பை திரும்பினார்.
அப்போது மும்பை விமான நிலையத்தில் ஹர்திக் பாண்டியா-வின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள் முறையாக ரசீது இல்லாமல் கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.